தேதி: January 7, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பீர்க்கங்காய் - ஒன்று
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
பாசி பருப்பு - அரை கப்
தேங்காய் - கால் கப்
சிவப்பு மிளகாய் - இரண்டு
சீரகம், மஞ்சள், கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க - கடுகு
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். இரண்டு பருப்புகளையும் அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்.

பீர்க்கங்காய் சிறியதாக நறுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும்.

தேங்காயை துருவி அதோடு சீரகம், மஞ்சள், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.

வெந்த பீர்க்கங்காயில் உப்பு சேர்த்து, வேக வைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிக்கும் போது அரைத்த கலவையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

சத்தான கூட்டு தயார். சாதத்துக்கும், சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நல்ல காம்பினேஷன்.

Comments
25வது குறிப்பா பவி
வாங்க பாராட்டலாம். பவி சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 25 குறிப்புகள் அதுவும் எல்லாமே விளக்கப்பட குறிப்புகள். 25 வது குறிப்பு சூப்பர். சிம்பிள் அண்ட் பெஸ்ட் குறிப்புகள். இன்னும் பல குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்பா.
பவி
பவி அடுத்து 50வது குறிப்பு தர வாழ்த்துக்கள். நம்ப பவி பொண்ணு அசத்துறாப்பா.
வாழு இல்லை வாழவிடு
சூப்பர் பவித்ரா..
வாழ்த்துக்கள் பவித்ரா உங்கள் ஐம்பதாவது குறிப்பும் இதுபோல் சீக்கிரம் வரவேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பவித்ரா..
வாழு, வாழவிடு..
பவி
பவி... எங்க அம்மா பண்ற மாதிரி இருக்கு. இங்க ஒரு நாள் பீர்க்கங்காய் பார்த்தேன் இனி கண்ணில் பட்டா அவசியம் வாங்கி செய்துடறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பவி
பீர்க்கங்காய் கூட்டு சாப்பிட்டது இல்லை அடுத்த வாரம் சமைத்து அசத்தலாம் பகுதியில் உங்க குறிப்புதானே செய்து அசத்திடுவோம். 25 குறிப்புகள் கொடுத்து வெள்ளி ஸ்டார் வாங்கிட்டீங்க வாழ்த்துக்கள் பவி. இன்னும் அதிக குறிப்புகள் கொடுக்க வேண்டும்.
சிம்பிள் அண்ட் பெஸ்ட்
சிம்பிள் அண்ட் பெஸ்ட் குறிப்புகள். இன்னும் பல குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்பா.
பீர்க்கங்கா கூட்டு
பவி ருசியான நல்ல குறிப்பு. செய்து பாத்துட்டு சொல்ரேன்.
பவி
வாழ்த்துக்கள் பவி 25 வது குறிப்பா ம் அசத்துங்க.
பீர்க்கங்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் பா செய்து பார்க்கிரேன்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
பவித்திரா
பீர்க்கங்காய் கூட்டு புதுமையான ரெசிப்பியாக இருக்கு.
இனிமேல் பீர்க்கங்காய் கடைக்கு வந்தால் உங்கள் ஞாபகம் தான் வரும். உடனே வாங்கி செய்ய வேண்டியதுதான்.
இது உங்கள் 25வது குறிப்பா? சந்தோசம்.மேலும் குறிப்புக்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள் விரைவில் ஐன்பது வந்து விடும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
பவி.....
சிம்பிளா இருக்கு பவி
செய்துட்டு சொல்றேன்
மேலும் பல குறீப்புகல் கொடுக்க வாழ்த்துக்கள்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
பீர்க்கங்காய் கூட்டு
குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்கு நன்றி:) தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்.
அன்புடன்
பவித்ரா
யாழு
வாங்க யாழு. நன்றி யாழு. ரொம்ப கஷ்டப்பட்டு தான் 25 குறிப்புகள் கொடுத்தேன் யாழு. நன்றி யாழினி. என்னை ஊக்கப்படுத்தியதில் நீங்களும் ஒருவர். நன்றி
அன்புடன்
பவித்ரா
சுமி
தங்கள் சித்தம் என் பாக்கியம் சுமி. நன்றி நன்றி சுமி
அன்புடன்
பவித்ரா
ருக்சானா
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி ருக்சானா, 25 குறிப்புகள் கொடுத்திட்டேன், இனி அடுத்த இலக்கு 50 தானே, ஆனா அந்த அளவுக்கு குறிப்புகள் எனக்கு தெரியாதுப்பா, டரை பண்ணிப்பார்க்கிறேன்.
அன்புடன்
பவித்ரா
வினோ
என்னை முதன் முதலில் 25 குறிப்புகள் கொடுக்க ஊக்கப்படுத்தியது நீங்க தான். மேலும் நான் இத்தனை குறிப்புகள் கொடுக்க முக்கிய காரணம் என் தோழி தான். நான் கொடுத்த குறிப்புகளில் பாதிக்கு மேல் என் தோழியிடம் கற்றுக்கொண்டது. அவளுக்கு இந்த தளத்தின் மூலம் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன். நன்றி வினோ:)
அன்புடன்
பவித்ரா
வனி
அம்மா ரெசிப்பியை ஞாபகப்படுத்திட்டேனா??? அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி வனி. செய்துட்டு சொல்லுங்க,மிக்க நன்றி வனி.
அன்புடன்
பவித்ரா
கிரிஸ்டி
வாங்க கிறிஸ்டி, என் தோழி பேர் கூட கிறிஸ்டி தான். உங்க சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்க வாழ்த்துக்கு என் நன்றி:)
அன்புடன்
பவித்ரா
கோம்ஸ்
மிக்க நன்றி கோம்ஸ், செய்துட்டு சொல்லுங்க:)
அன்புடன்
பவித்ரா
ஸ்வர்
மிக்க நன்றி ஸ்வர். ஐ, உங்களுக்கு பிடித்த குறிப்பு கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி ஸ்வர்ணா.
அன்புடன்
பவித்ரா
ராணி
வாங்க ராணி. பீர்க்கங்காயில் கூட்டு செய்திடுங்க, தோளில் சட்னியும் செய்துடுங்க, ரொம்ப ருசியாக இருக்கும். 25வது குறிப்பு தான் ராணி. உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்
பவித்ரா
ஆமி
மிக்க நன்றி ஆமி. செய்துட்டு சொல்லுங்க. வாழ்த்துக்கு நன்றி
அன்புடன்
பவித்ரா
மன்னிக்கவும்.
தோழிகளே, என்னை வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்:
25 குறிப்புகளை ஒரு வழியா கொடுத்திட்டேன். ஆபீஸில் அறுசுவை ப்ளாக் பண்ணியதில் இருந்து மொபைலில் ஆக்டிவேட் செய்து அறுசுவை பார்வையிட்டேன், இப்போ மொபைலும் பிரச்சனை. அதனால் அறுசுவையை சுத்தமா பார்வையிட முடியலை, அதனால் தான் குறிப்புகளுக்கும் தாமதமாக பதிலளிக்கிறேன், இனி மொபைல் சரியான பிறகு தான் என்னுடைய குறிப்புகள் வரும். முடியும் போது வந்து பார்வையிடுகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
பவித்ரா
ஹலோ பவி மேடம், நல்ல குறிப்பு.
ஹலோ பவி மேடம், நல்ல குறிப்பு. இதை இன்னும் எளிதாக செய்ய
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு, 4 பல் பூண்டு இடித்தது (வேண்டாம் எனில் விட்டு விடலாம்), சீரகம் போட்டு வதங்கியதும்,
வெட்டி வைத்த பீர்க்கங்காய், 1 தக்காளி, 1 வெங்காயம் (இரண்டும் சிறிதாய் இருந்தால் போதும்), ஊற வைத்த பருப்பு, 1சிட்டிகை மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், தேவைக்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதங்கியதும்,
அரைத்து வைத்த தேங்காய் (தேங்காய் மட்டும் அரைக்க வேண்டும்) சேர்த்து அரை டம்ளர் நீர் சேர்த்து 4 விசில் வந்தால் போதும். கூட்டு ரெடி.
என் அம்மா இப்படி தான் செய்வார்கள். ஏதேனும் தவறாய் கூறியிருந்தால் மன்னிக்கவும்.
Rajabhunisha
ஹாய், என்னை மேடம்ன்னு கூப்பிடாதீங்க ப்ளீஸ். உங்க அம்மாவின் செய்முறை வித்தியாசமா இருக்குப்பா. ட்ரை பண்ணி பார்க்கிறேன். அடுத்த முறை செய்யும் போது, நீங்க சொன்ன மாதிரி செய்யறேன். இதில் எந்த தவறும் இல்லையே, அப்புறம் எதுக்கு மன்னிப்பெல்லாம். அடி தான் வாங்குவீங்க
அன்புடன்
பவித்ரா
Super
Hai Pavi,
h r u???
today i made ur recipe for dinner... it came out very well... thanks for sharing this wonderful recipe.
When there is a will,there is a way.... :)
நிலா
ஹாய் நிலா,
நான் நலமா இருக்கேன், நீங்க நலமா?? மிக்க மகிழ்ச்சி நீங்க செய்ததில், தாமதமான பதிலுக்கு மன்னிச்சு:(
அன்புடன்
பவித்ரா
Superrrrr
Hi mam
I did this recipe for my one year old daughter she liked it very much thank you for a super recipe
Be simple and be a sample