வாழ்த்து அட்டை

தேதி: January 7, 2011

5
Average: 4.7 (9 votes)

 

க்ரீட்டிங் சாட்
குயில்லிங் பேப்பர்
குயில்லிங் டூல்
கோல்டுநிற கம்பி
பெவிக்கால்
கோல்டுநிற சம்கி
ஸ்டோன் சிவப்பு, பச்சைநிறம்
ஸ்கெட்ச் பென்
டியூப்லக்ஸ் காகிதம்
மெல்லிய லேஸ்
சிறிது தட்டையான குச்சி
கத்தரிக்கோல்
ப்ளேடு

 

வாழ்த்து அட்டை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
க்ரீட்டிங் சாட்டில் 18 செ.மீ நீளம், 17 செ.மீ அகலத்தில் ஒரு பகுதியை நறுக்கி எடுத்து அதனை நீளவாக்கில் இரண்டு மடித்துக் கொள்ளவும்.
அட்டையின் முன்பக்கத்தில் மேலிருந்து ஒரு செ.மீ இடைவெளி விட்டு ஒரு செ.மீ நீளம், 5 1/2 செ.மீ அகலத்தில் வரைந்து அந்த பகுதியை ப்ளேடு கொண்டு நறுக்கி எடுத்து விடவும்.
அட்டையின் முன்பகுதியில் வைத்து அலங்கரிக்க குயில்லிங் பேப்பரை வைத்து வண்ணத்துபூச்சி செய்ய வேண்டும். வண்ணத்துபூச்சி செய்ய முதலில் லேவண்டர் நிற பேப்பரை எடுத்து குயில்லிங் டூல்லில் ஐந்து முறை சுற்றவும். மேல்பக்கம் இதழ் போல வளைவாகவும், அடியில் அதன் இருமுனையையும் பிடித்து லேசாக அழுத்தி பெவிக்கால் தடவி ஒட்டவும். இந்த நிறத்தில் மொத்தம் நான்கு துண்டுகள் செய்யவும்.
வைலெட்நிற பேப்பரில் இதுப்போல் ஐந்துமுறை சுற்றி அதன் எதிரெதிர் பக்கங்களைப் பிடித்து லேசாக அழுத்தி பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும். வைலெட் நிறத்தில் இரண்டு துண்டுகள் செய்யவும். கோல்டுநிற கம்பியை உணர் கொம்புகள் வளைத்து வைக்கவும்.
டியூப்லக்ஸ் காகிதத்தை 14 செ.மீ நீளம், 8 செ.மீ அகலத்தில் நறுக்கவும். அதன் ஒரு அகலப்பக்கத்தில் மட்டும் படத்தில் உள்ளது போல் வளைவுவளைவாக நறுக்கி வைக்கவும்.
க்ரீட்டிங் கார்டின் முன்பகுதியில் போட்டிருக்கும் ஓட்டையின் உள் நுழைவது போல அதைவிட சற்று சிறிய அளவில் ஒரு குச்சியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கார்டின் உள்ளே நறுக்கின பேப்பரை வைத்து முன்பகுதியில் உள்ள ஓட்டைக்கு நேராக இரு சிறு துளைகள் போட வேண்டும். அதன் அகலம் 2 செ.மீ அகலத்தில் இருக்க வேண்டும். அட்டையின் பின்பக்கமாக ஓட்டையில் மெல்லிய லேஸை விட்டு குச்சியின் ஒரு முனையில் ஒரு சுற்று சுற்றி மற்றொரு முறை சுற்றி பூத்தொடுப்பது போல் முடிச்சுப் போடவும்.
அந்த லேஸை அப்படியே மறுமுனைக்கு கொண்டு வந்து இதுப்போல் முடிச்சுப்போட்டு மீதி லேஸை அட்டையின் பின்பக்கத்தில் கொண்டு வந்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
பிறகு அட்டையின் உள்ள பேப்பரில் அவரவருக்கு பிடித்த வாசகங்களை எழுதிக் கொள்ளவும்.
அட்டையின் முன்பக்கத்தின் கீழே இடதுப்புறத்தில் முதலில் குயில்லிங் பேப்பரில் செய்து வைத்திருக்கும் டிசைனை பட்டர்ஃப்ளை போல் வைத்து ஒட்டிக் கொள்ளவும். அடுத்து கம்பியை உணர்க்கொம்பு போல் வைக்கவும்.
அட்டையின் நடுவில் சிவப்புநிற ஸ்டோனை முதலில் ஒட்டி விடவும். அதனை சுற்றி கோல்டுநிறத்தில் நீளவாக்கில் உள்ள சம்கியை ஒட்டவும்.
நான்கு மூலைகளிலும் பச்சைநிற ஸ்டோனை ஒட்டவும். பிறகு அதன் நான்கு ஓரங்களையும் வெள்ளைநிற சம்கியால் ஒட்டி அலங்கரிக்கவும். எளிமையான வாழ்த்து அட்டை தயார். நீங்களும் இதுப்போல் செய்து உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளவும்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த வாழ்த்து அட்டை செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

your greetings very nice.keep it up .with regards.g.gomathi.

க்ரீடிங் கார்ட் சூப்பர் .. வாழ்த்துக்கள் உங்களுக்கு ..விதவிதமான கைவினை பொருட்களை செய்து அசத்தரிங்க ..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் செண்பகா...

வாழு, வாழவிடு..

பொங்கல் வாழ்த்து அட்டை ரொம்ப ஜோராக இருக்கு பாப்பி.
எப்படி குட்டிய வைத்துகொண்டு செய்கிறீங்கன்னு தான் புரியல
உங்களுக்கும் பாபுவுக்கும், உஙக்ள் குடுமப்த்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

பாப்பி அக்கா, புத்தாண்டு வாழ்த்துக்கள். அக்கா ரொம்ப அருமையா செய்து இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு அக்கா. நான் ஊருக்கு வந்ததும் அறுசுவை டீமில் வந்து கிளாஸ் ஜாயின் பண்ணப்போறேன். நவீனா குட்டி எப்படி இருக்காங்க. அண்ணா, பத்மா அக்கா ரேவதி அனைவருக்கும் எனது லேட் புத்தாண்டு வாழ்த்துக்கள். மற்றும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும். நவீனா குட்டி-க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். .

என்றும் அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

ur greeting cards very nice

செண்பகா... ஒரு சீசன் விடுறதில்லை போலிருக்கே!!! ;) பொங்கலுக்கு வாழ்த்து அட்டையா??? கலக்கலா இருக்கு. அதுவும் குயுல்லிங் ரொம்ப அழகு சேர்த்திருக்கு. எங்க நவீனாவோட புது போட்டோ போடாம இன்னும் குட்டி பாப்பா'வா இருக்க போட்டோவே போடுறீங்க? நலமா இருக்காளா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் கோமதி எப்படி இருக்கீங்க? உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி.
இதுதான் உங்களிடம் முதல் முறை பேசுகிறேன். சுந்தோஷம்.

ருக்சானா எப்படி இருக்கீங்க? வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

ஜலீலா அம்மா எப்படி இருக்கீங்க? உங்க வாழ்த்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.//எப்படி குட்டிய வைத்துகொண்டு செய்கிறீங்கன்னு தான் புரியல// அவள் தூங்கும் போதுதான் செய்றது மீண்டும் உங்க வாழ்த்திற்கு ரொம்ப நன்றி.

ஹாய் நூரி எப்படி இருக்க? திருமண வாழ்க்கை எப்படி போகுது. உன்னிடம் பேசுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடிக்கடி காணாமல் போய்டுற என்ன ஆச்சு. இன்னும் அறுசுவையை பற்றி சரியாக தெரியவில்லையா? எப்ப இங்க வர?//நான் ஊருக்கு வந்ததும் அறுசுவை டீமில் வந்து கிளாஸ் ஜாயின் பண்ணப்போறேன்.// வரப்ப சொல்லு கிளாஸ் எடுத்திடலாம்:-)
நவீனா ரொம்ப நல்லா இருக்கா. அட்டகாசம்தான் தாங்க குடியல. பொங்கல்
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

க்ரிஸ்டி பீட்டர் பாராட்டிற்கு ரொம்ப நன்றி

வனிதா எப்படி இருக்கீங்க? குழந்தைகள் எப்படி இருக்காங்க? பையன் எப்படி சமத்தா இருக்காரா? போட்டோ அனுப்பி வைங்க.//எங்க நவீனாவோட புது போட்டோ போடாம இன்னும் குட்டி பாப்பா'வா இருக்க போட்டோவே போடுறீங்க?// ரொம்ப நாளுக்கு பிறகு இப்பதான் போட்டோவை மாத்தினோம். சரி வனிதாவே கேட்டாச்சு சீக்கரம் மாத்திடுறோம்.

senbagababu

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta