சுறா புட்டு

வழங்கியவர் : patty65
தேதி : திங்கள், 10/01/2011 - 17:59
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- சுறா மீன் - 1
- பச்சை மிளகாய் - 12
- மஞ்சள் தூள் - 1/4 tsp
- நெய் -4tsp
- பெருஞ்சீரகம் - 1tsp
- வெங்காயம்- 4
- எண்ணெய் - 8tsp
- சுறா மீன் தலையை வெட்டி போட்டு விடவும்.
- மீனை தோலுரித்து சுத்தமாய் கழுவி மஞ்சள்தூள் போட்டு வேகவிடவும்
- மீன் நன்றாய் வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு இறக்கி விடவும்
- வெங்காயம், பச்சைமிளகாய், பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மீன் முள்ளை எடுத்து விட்டு, சதையை உதிர்த்து கொண்டு, அதில் பெருஞ்சீரகத்த்தூள் போட்டு கலந்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சுடானதும் பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு நன்கு வதக்கி மீனை போட்டு நன்கு சிவக்க கிளறி இறக்கவும்.
Note:
இதே போல் திருக்கைமீனிலும் இறாலிலும் செய்யலாம். இறாலை அவித்து கொண்டு செய்ய வேண்டும்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
சுறா மீனா???
ஊருக்கு போனதும் செய்து பார்க்கணூம்
ஆசைய வளத்துவுட்டுட்டீங்க ;))
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நிச்சயம் செய்து பாருங்கள், நன்றாக இருக்கும். நன்றி
gods gift
vazthukal
vazthukal
ரொம்ப நன்றி. கண்டிப்பா சுறா புட்டு சாப்பிட்டு அதன் பிறகு சுவை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளிறேன்.
Be true
மிகவும் சுவையாக இருந்தது..
அனைவரும் முயற்சி செய்து பார்க்கலாம்..
மிகவும் எளிதான சமையல்..