உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

ஏப்ரல் 26, 2006 - 12:06pm - வழங்கியவர் admin
Become famous Chef

ரகசியம் என்று இல்லாத எந்த கலையும், அழிவில்லாமல் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். ஒருவர் மட்டுமே அறிந்த கலை என்றால், அவருடன் அந்த கலையும் மறைந்து போய்விடும். மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து, கூடவே தோன்றி வளர்ந்து வரும் இந்த சமையல் கலை படிப்படியாக வளர்ச்சியுற்று, இன்று விஸ்வரூபம் எடுத்து, தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், இணையத்தளங்கள் என்று அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இன்று இந்தத்துறையில் ரகசியம் என்று எதுவும் இல்லை. இந்த வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கும் பெரியளவில் இருந்தாலும், மக்களின் திறன் வெளிக்காட்டும் ஆர்வமே இதற்கு முக்கியமான காரணம்.

நீங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து கற்றுக் கொண்ட விசயங்கள், சுய அனுபவத்தில் அறிந்து கொண்ட விசயங்கள் அனைத்தையும் உலகத் தமிழர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் பகுதியே இந்த கூட்டாஞ்சோறு. இன்றே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் திறனை உலகம் அறியச்செய்யுங்கள். கற்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இணைவது எப்படி?

மிகவும் சுலபம். முதலில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளவும். பிறகு பின்னூட்டம் பக்கத்தின் மூலம் எங்களுக்கு உங்களது ஆர்வத்தைத் தெரியப்படுத்துங்கள். அல்லது feedback@arusuvai.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களைப் பற்றின விபரங்களையும் அதில் குறிப்பிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, உங்களுக்கென ஒரு சிறப்புப் பக்கம் கொடுக்கப்படும். உங்களின் பெயர் வல்லுனர்கள் குழுமத்தில் சேர்க்கப்பட்டு, குறிப்புகள் அனுப்புவதற்கான சிறப்பு அனுமதியும் வழங்கப்படும். அதன்பிறகு உங்களது உள்நுழைதல் பெட்டியில் (Log in box) குறிப்பு சேர்ப்பதற்கான தொடுப்பு (link) ஒன்று தோன்றும். அதன்மூலம் நீங்கள் உரிய பக்கத்திற்குச் சென்று குறிப்புகளை நேரடியாக அனுப்பலாம். அவை அடுத்த நிமிடமே இணையத்தளத்தில் வெளியாகிவிடும்.

நீங்கள் குறிப்புகள் அனுப்ப ஆரம்பித்தவுடன் தங்களது பெயர் கூட்டாஞ்சோறு பக்கத்தில் வெளியாகும். அதனை கிளிக் செய்து தாங்கள் அனுப்பின குறிப்புகளை பார்வையிட முடியும். குறிப்புகளை அனுப்புவோர் மட்டும் அதனை மாற்றியமைக்கும் வழிமுறையும் அதில் இருக்கும். ஒவ்வொரு குறிப்பின் கீழும் வருகையாளர்கள் தங்களது கருத்தினைத் தெரிவிக்கும் வசதி இருக்கும்.

நிபந்தனைகள்

குறிப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். உங்களால் தமிழில் குறிப்புகளைத் தயார் செய்ய முடியுமா என்பதை பரிசோதித்த பிறகுதான் தங்களுக்கான அனுமதி வழங்கப்படும். தமிழில் டைப் செய்வது மிகவும் எளிதானது. இதற்கான விளக்கம் ஏற்கனவே தமிழ் உதவிப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து குறிப்புகள் அனுப்பவேண்டும் (குறைந்தது வாரம் ஒரு குறிப்பு). மாதக்கணக்கில் குறிப்புகள் எதுவும் சேர்க்காமல் இருப்பவர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

குறிப்புகள் உங்களது சொந்த நடையில் இருக்க வேண்டும். புத்தகங்களில் இருந்தோ, வேறு ஊடகங்களில் இருந்தோ எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது.

குறிப்புகளைச் சரி செய்யவும், தேவையெனில் மாற்றியமைக்கவும் அறுசுவை நிர்வாகத்திற்கு உரிமையுள்ளது.