தக்காளி கொஸ்து

தேதி: January 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (14 votes)

 

தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தாளிக்க :
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி


 

முதலில் தேவையானவைகளை எடுத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கவும்.
வதங்கியதும் அதில் நான்கு டம்ளர் தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும். நல்லா பச்சை வாசம் போய் தல தலன்னு வரும் போது இறக்கவும்.
சுவையான தக்காளி கொஸ்து ரெடி. இது இட்லி, தோசை, சப்பாத்திக்கு ரொம்ப அருமையா இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சூப்பரா இருக்கு. நானும் இப்படித்தான் செய்வேன் வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு நன்றிகள் பல....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி மஞ்சு முதல் ஆளாக வந்து பின்னூட்டம் குடுத்துருக்கீங்க உங்க பதிவ பாத்துதான் என் குறிப்பு வந்ததயே தெரிஞ்சுக்கிட்டேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப சூப்பர் ஹ இருக்கு ஸ்வர்ணா,கண்டிப்பா டேஸ்ட் ஹ தான் இருக்கும். தக்காளி, வெங்காயம் விக்கற விலைக்கு இப்ப செஞ்சு பாக்க முடியாது.!!!!! கண்டிப்பா செஞ்சு பாக்கறேன்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீங்க சொல்ரது சரிதான் பா இப்ப விக்கற விலையில சாப்பிடவே பயமாத்தான் இருக்கு:( கண்டிப்பா செஞ்சு பாத்துட்டு சொல்லுங்கப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் சுவர்ணா
ரொம்ப colorful aa இருக்கு. super
நானும் இப்படி தான் செய்வேன். சில சமயம் இஞ்சி, பூண்டு சேர்ப்பேன்.

சூப்பர் சூப்பர்
வாழ்த்துக்கள்......ஸ்வர்

உன்னை போல பிறரையும் நேசி.

எளிமையான குறிப்பு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

very nice sir

சூப்பர் ஸ்வர்ணா,விரைவில் செய்யவேண்டும்.வாழ்த்துக்கள்.

ஹசீன்

அஞ்சு நீங்களும் இதே முறையில்தான் செய்வீங்களா சந்தோசம்.நான் இஞ்சி,பூண்டு இதுவரை சேர்த்ததில்லை பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி தேவி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கொடி நீங்க என்ன சொல்றீங்க யாருக்கு சொல்றீங்கன்னு புரியல.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நேற்றுதான் இரவு இட்லிக்கு தக்காளி கொஸ்து செய்தேன். நீங்களும் ஒரு முறை இஞ்சி பூண்டு சேர்த்து ட்ரை பண்ணி பாருங்கள் நன்றாக இருக்கும்.

நன்றி ஹசீனா முடிஞ்சப்போ செய்து பாருங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி ஆமினா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கண்டிப்பா அஞ்சு செய்து பாக்கிரேன் பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கலர்ஃபுல்லாஇருக்கு வாழ்த்துக்கள் ஸ்வர்ணா.. நானும் இதுபோல் தான் செய்வேன்..நன்றி..

வாழு, வாழவிடு..

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ருக்சானா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா... நாங்களும் இப்படி தான் செய்வோம். ஆனா வெறு மிளகாய் தூள் இல்லை, சாம்பார் தூள் பயன்படுத்துவோம். நீங்க செய்திருக்குறது கலர் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள். கண்டிப்பா ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்வர் சூப்பர் குறிப்பு ரொம்ப கலர் புல்லாவும் இருக்கு கட்டாயமா செய்துட்டு சொல்றேன்பா. இன்னும் பல குறிப்புகள் கொடுங்க ஸ்வர். all the best

வாழ்த்துக்களூக்கு நன்றி வனி செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப ரொம்ப நன்றி யாழி செய்து பாருங்க நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என்னப்பா சமையல் குறிப்பு போட்டு அசதி இருக்கீங்க, வாழ்த்துக்கள் பா.. படங்கள் ரொம்ப கிளியரா இருக்கு.. கலர் பார்க்கும் போதே சாப்பிடனும்னு தோணுது.. இன்னும் நெறைய குறிப்பு தர வாழ்த்துக்கள்...

நான் தக்காளி சட்னிதான் செய்திருக்கேன் .இந்த முறையில் செய்ததில்லை .சூப்பரா இருக்க பார்க்கவே .இனிமே செய்து விட்டு உங்களுக்கும் சொல்கிறேன் .இன்னும் நிறைய நல்ல நல்ல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் ஸ்வர்ஸ்.உங்களுக்கு எனது தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஸ்வர்,ரொம்ப லேட்டா வந்திருக்கேன்.ரொம்ப ரொம்ப சாரி,ஸ்வர்.அசத்தலான குறிப்பு,கலர் சூப்பராயிருக்கு,ஸ்வர்.தொடர்ந்து அசத்தலான குறிப்புகள் கொடுத்து கலக்கறீங்க.வாழ்த்துக்கள்,ஸ்வர்.

அன்புடன்
நித்திலா

தீப்ஸ் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அஸ்வதா நிச்சயம் செய்து பாத்துட்டு சொல்லுங்கப்பா வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சாரிலாம் எதுக்குப்பா நித்தி எப்ப வாழ்த்து சொன்னாலும் எனக்கு சந்தோசம் தான்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா, இப்பதான் உங்களோட தக்காளி கொஸ்து என் கண்ணில் பட்டது. தாமதமான பதிவிற்கு மன்னிக்கனும். இந்த முறை தக்காளி கொஸ்து முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. பச்சைமிளகாயுடன் மிளகாய்தூளும் சேர்ந்தால் காரம் அதிகமாக இருக்காதா சுவா? காரமா இருந்தாலும் சரி நான் ஒருநாள் பண்ணி சாப்டுட்டு உங்க கிட்ட பேசிக்கறேன் :) உங்க குறிப்புகள் அனைத்துமே வித்தியாசம் தான் பா. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கல்ப்ஸ் .
பச்சை மிளகாய் இரண்டுதானே சேர்க்கிறோம் காரம் தெரியாது பா ஏன்னா தக்காளியின் புளிப்பு அப்பதான் குறையும் .நீங்க காரம் குறைவா சாப்புடுவீங்கன்னா மிளகாய் தூளை கொஞசம் குறைத்துக்கலாம் .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்
நானும் இப்படித்தான் செய்வேன்

வாழ்த்துக்களுக்கு நன்றி பாத்திமா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Nethu nyt dinner ku chappathi kooda unga tomato gosthu thaan senjen. But nan red chilli serkala. Romba kaaram sapda matom pa adhaan. This is my first dish preparation for samaithu asathalam... Thanks swarna...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சுவர்ணா நேற்று உங்க தக்காளி கொஸ்து செய்தேன் அருமையாக இருந்தது. இதுவும் நான் அடிக்கடி இட்லி தோசைக்கு செய்வேன். ஆனால் இப்போது தான் பின்னுட்டு தர முடிந்தது. மன்னிக்கவும்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

தக்காளி கொஸ்து பார்க்கும் போது பசி எடுக்குது.. இட்லியோடு சேர்த்து இங்கே அனுப்பிவிடு.. வாழ்த்துகள்டா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்