பதிர் பேணி

தேதி: January 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

மைதா - 1/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
நெய் - 50 கிராம்
அரிசி மாவு - 2 ஸ்பூபன்
ஏலப்பொடி -
எண்ணை
பால் - 1/2 டம்ளர்
சோடா - 2 சிட்டிகை
பொடித்த சர்க்கரை - 1 ஸ்பூன்


 

1 ஸ்பூன் எண்ணை, சிட்டிகை உப்பு, சோடா, பொடித்த சர்க்கரை இவற்றை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நுரைவரும் வரை அடிக்கவும். பின் அத்துடன், மைதா மாவு பால் சேர்த்து சற்று தளர்வாக பிசையவும்.

பிசைந்த மாவின்மேல் 1 ஸ்பூன் எண்ணை தடவி ஈரத்துணியினால் மூடி 1/2 மணை நேரம் ஊறவைக்கவும்.

நெய்யை உருக்கி அத்துடன் அரிசிமாவினை கலக்கி வைக்கவும்'

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையய்ப்போட்டு ஏலப்பொடி சேர்த்து முதிர் பாகு வைக்கவும். விரும்பினானால் மஞ்சள் நிற புட் கலர் சேர்க்கலாம்.

ஊற வைத்துள்ள மாவிலிருந்து எலுமிசை அளவு எடுத்து சப்பாத்தியாக திரட்டவும்.திரட்டிய சப்பாத்தியின் மேல் நெய் கலவையை பரவலாக தடவவும். அதன் மேல் மறுபடியும் ஒரு சப்பாத்தியை போட்டு நெய்கலவையை தடவவும். அதன் மேல் மறுபடியவும் ஒரு சப்பாத்தியை போடவும். 5 சப்பாத்தி ஆனதும் அதை உருட்டி 5 பாகங்களாக வெட்டவும். வெட்டிய பாகத்தினை மேல் புறமாக வைத்து அழுத்தி தேய்க்காமல் சற்று மெல்லியதாக திரட்டி எண்ணையில் பொரிக்கவும். பொரித்த பேணியை சர்க்கரை பாகில் தோய்த்து எடுக்கவும். துருவிய முந்திரி,பாதாம் தூவி அலங்கரிக்கலாம்.

குழந்தைகள், முதியவர்களுக்கு சுண்ட காய்சிய பால் குங்குமப்பூ போட்டு லேசாக ஊற வைத்து கொடுக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கும் போலவே...

5 சப்பாத்தி திரட்டியதும் உருட்ட வேண்டுமா? இந்த இடத்தில் புரியவில்லை :(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி மேம்

ஒரு தடவை செய்திங்கன்னா பழகிடும். 3 சப்பாத்தியிலும் உருட்டலாம். லேயர் லேயராக வருவதற்குதான் உருட்டி பிறகுவெட்டி தேய்க்கனும்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அருமையான குறிப்பு,எனக்கு இது ரொம்ப பிடிக்கும்,எங்க ஊரில் இதை கல்யாணம்,வளைகாப்பு மாதிரியான விஷேங்களுக்கு சீரில் வைப்பாங்க.101,301,என்ற எண்ணிக்கையில் செய்வாங்க.

பின்னூட்டத்திற்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு