ஈசி தூத் பேடா

தேதி: January 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

சர்க்கரை இல்லா கோவா - 1/4 கிலோ
சர்க்கரை - 150 கிராம்
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்
நைசாக சீவிய முந்திரி - 2 ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை


 

முதலில் குங்குமப்பூவை 1 ஸ்பூன் சூடான பாலில் போட்டுகரைத்து வைக்கவும்.

ஒரு டிரேயில் நெய் தடவவும். துருவிய முந்திரியுடன், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து நெய் தடவிய டிரேயில் பரவலாக தூவி ரெடியாக வைக்கவும்.

அடி கனமான வாணலி அல்லது நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை இல்லா கோவா,சர்க்கரை,ஏலப்பொடி மூன்றையும் போட்டு கைவிடாமல் கிளறவும்.

கலவை இறுகி வரும் போது கரைத்து வைத்த குங்குமப்பூ கரைசலை ஊற்றி கிளறவும். (பபிள்ஸ் வந்தபின் 2 நிமிடத்திற்கு மேல் அடுப்பில் வைக்கக்கூடாது.அப்போதுதான் சாப்ட்டாக இருக்கும்)

பின் நெய் தடவிய டிரேயில் கலவையை ஊற்றி சமமாக பரத்தவும். பேன் காற்றில் ஆற வைக்கவும். கலவை ஓரளவு ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வில்லைகள் போடவும். பொருட்களை ரெடியாக வைத்துக்கொண்டபின் 10 நிமிடத்தில் செய்துவிடலாம்

கலவையின் ஒரு பகுதியுடன் சிறிது கொக்கோ பவுடர் சேர்த்து ஒன்றன் மேல் ஒன்றாக ஊற்றினால் டபுள் கலர் தூத் பேடா கிடைக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எளிமையா இருக்கு மஞ்சு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பின்னூட்டத்திற்கு நன்றி மேம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு