உருளை பான்கேக்

தேதி: January 15, 2011

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (7 votes)

 

உருளை - 4
வெங்காயம் - 2
முட்டை - 3
மிளகு தூள் - 1 tsp
வெண்ணை - 1 tbsp
உப்பு - தேவையான அளவு


 

முட்டையை உடைத்தூற்றி உப்பு மிளகு சேர்த்து அடித்து வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

உருளையை தோலுரித்து துருவி வெங்காயம் முட்டை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.

சிறு சிறு தோசை போல் (கொஞ்சம் தடிமனாக) வார்த்து எடுக்கவும்.

சூடாக இருக்கும் போது மேல சிறிதளவு வெண்ணை வைத்து பரிமாறவும்.

குழந்தைகளுக்கான எளிமையான ஸ்நாக் நொடியில் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

எளிமையா செய்ய கூடியதா இருக்கு...

மாலைவேளையில் இது தான்...

கலவை என்ன பதத்தில் இருக்க வேண்டும்??

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மாவு ஊத்தப்பம் பதத்தில் இருக்க வேண்டும். செய்து பார்த்து பின்னூட்டம் கொடுங்க. யாரும் சமைக்கலாம் பகுதியில் அசத்துறீங்க. வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நேற்று காலயிலேயே செய்து பார்த்துவிட்டேன் லாவண்யா....

ரொம்ப டேஸ்ட்டியா இருந்துச்சு... என் மகனும் கணவரும் விரும்பி சாப்பிட்டார்கள்...

குறிப்புக்கு மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hi lavanya potatova duruvitu eggla kalakanum solirkinga, potato vega vaikanumnu avasiyam illaya

உருளையை வேகவைக்க தேவையில்லை. துருவி சேர்ப்பதால் அப்படியே வெந்து விடும். அறுசுவையின் புது வரவா?? வருக வருக!! இந்த பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு அதை பயன் படுத்தி தமிழில் அடுத்த பதிவை போட்டு எல்லாரையும் அசத்துங்க.....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

sorry lavanya nan tamilla try panunen but enaku saria varala , so try pani tamil la adika palikiduren, sorry to say:-(. nethu evening unga receipe pani parthern very super. en payan, husband romba virumbi saptanga. romba thanks for give easiest receipe.

aruna

தமிழ்ல எழுதறது ரொம்பவும் கஷ்டமா தான் இருக்கும். பழக பழக சரியாகி விடும். நான் கூட முதலில் ரொம்பவும் திணறினேன். பிறகு ஒரு இடத்தில google transliterate (http://google.com/transliterate/tamil) பத்தி படித்தேன். நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.
இந்த ரெசிபி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பிடித்ததில் ரொம்ப சந்தோஷம். அடிக்கடி செய்து கொடுங்க.....மிகவும் சத்தான ஒரு ரெசிபி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப ருசியா இருந்திச்சு.. எனெக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. நன்றி.

VALGHA VALAMUDAN!