கேரட் அல்வா

தேதி: January 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (21 votes)

 

கேரட் - ஒரு கிலோ
பால் - அரை லிட்டர்
நெய் - 50 கிராம்
முந்திரி - 20 முதல் 30
சீனி - 200 கிராம்
ஏலக்காய் - 3
கிராம்பு - 3


 

பாலை நீர் ஊற்றாமல் காய்ச்சி வைக்கவும். மற்ற தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்.
கேரட்டை மேல் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து துருவிய கேரட்டை மட்டும் சேர்த்து நீர்பதம் வற்ற வதக்கவும்.
பின் அதில் பால் மற்றும் சீனி சேர்த்து சுருளும் வரை கிளறவும்.
வேறொரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி முந்திரி, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பால் வற்றியதும் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். சுவையான கேரட் அல்வா தயார்.

கேரட்டில் உள்ள இயற்கையான நிறமே போதுமானது. சுவையை கூட்ட கன்டன்ஸ்ட் மில்க் சேர்த்துக் கொள்ளலாம். வெறும் வாணலியில் கேரட்டை நீர் போக வதக்குவதால் பச்சை வாசம் நீங்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

.ஹாய் உங்க கேரட் அல்வா சூப்பர்.. இப்பதான் சுட சுட பன்னேன்.. என்னவர் ரொம்ப விரும்பி சாப்டார்.. பார்தவுடனே பன்டேன் பா... அருமை..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

கேரட் அல்வா பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு, செய்முறையும் ரெம்ப ஈசியாக தான் இருக்கு, செய்து பார்த்துட்டு பின்னோட்டம் தருகிறேன்.

சலாம் ஆமி நான் செய்றமாதிரியே இருக்குடா நான் குடுக்கலாம்ன்னு இருந்தேன் நீ குடுத்துட்டே இப்போ யார்குடுத்தா என்ன வாழ்த்துக்கள்டா

ஆமி நான் போன வாரம் தான் செய்தேன். ஆனா அந்த பச்சவாடை போகவே இல்லை என்ன காரணம்னு தெரியல இப்ப குறிப்புலா பார்த்ததும் தான் தெரியுது வெறும் வாணலியில் போட்டு நிறைய நேரம் வதக்கனுமா?
சாப்பிடனும் போல இருக்குபா சூப்பர் ஆமி. வாழ்த்துக்கள்.

அமினா, முகப்பில் உங்கள் கேரட் அல்வா பார்த்ததும் செய்யணும் என்று தோன்றியது.உடனே செய்து விட்டேன்.
கன்டன்ஸ்ட் மில்க்கும் சேர்த்து செய்தேன். சுவை சூப்பராய் இருந்திச்சு.செய்வதும் சுலபமாக இருந்திச்சு.எனது விருப்பப் பட்டியலில் சேர்த்து விட்டேன்.நன்றி, நல்ல ரேசப்பிக்கு.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சலாம் ஆமினா நலமா?ஹய்யா கேரட் அல்வா எனக்கு அல்வா ரொம்ப பிடிக்கும் செய்முறை அழக சொல்லி இருக்கிங்க வாழ்த்துகள்பா நானும் செய்து பார்கிரேன், உங்களுக்கு குழந்தை இருக்க?இருந்த அவர்கள் பெயர் சொல்லுங்கபா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குறிப்பு வெளியிட்டதும் ரொம்ப ஸ்பீடா செஞ்சுட்ட உங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி சிவகாமி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்லா இருக்கீங்களா மனோ...

பேசி ரொம்ப நாளாச்சு இல்ல? ;)

ரொம்ப ஈசியானது தான் பா. செய்து பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//நான் குடுக்கலாம்ன்னு இருந்தேன் //

அதான் அம்மா,பொண்ணுங்குறது. நீங்க நெனச்சத நான் செஞ்சுட்டேன். உங்க முறையிலும் செஞ்சு அனுப்புங்கம்மா...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமாம் டா. நானும் முன்புலாம் அப்படியே செய்து பச்சை வாசனை அப்படியே இருக்கும். அப்பறம் தான் என் அக்கா சொல்லி வெறும் வாணலியில் வதக்கணூம்னு

//வெறும் வாணலியில் போட்டு நிறைய நேரம் வதக்கனுமா?//
ஈரப்பதம் போக வதக்கணும்பா. 1/5 மணி நேரம் ஆகும். இதுலேயே வெந்துவிடுவதால சமைக்கும் நேரம் அம்மியா இருக்கும். சீக்கிரமா பண்ணிடலாம் அரை மணி நேரத்துக்குள்ள ;)

செய்து பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி யோகராணி.. உடனே செய்து பின்னூட்டமிட்டதற்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வ அலைக்கும் சலாம் வரஹ்....
இறைவனின் துணையும் ஆசியுடனும் நலமா இருக்கேன். நீங்களும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ரொம்ப நன்றிப்பா. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

//உங்களுக்கு குழந்தை இருக்க?இருந்த அவர்கள் பெயர் சொல்லுங்கபா//
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு ;) பேரு தன்விர் ஷாம். 3 1/2 வயசாகுது டா
து ஆ செய்யுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப டேஸ்டி ஹ ரெசிபி தந்து இருக்கீங்க.... எனக்கு ஒரு சந்தேகம், தவறாக என்ன வேண்டாம். போட்டோ ல காரட் சுத்தமா மாறிடுச்சு? எக்ஸ்ட்ரா கலர் போட்டாதான் கலர் வருமா? வதக்குனா இயற்கையானநிறம் போய்டுமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மிக்க நன்றி டா

எதுக்கு தவறாக நினைக்க போறேன்

கண்டிப்பா கலரே தேவையில்ல சுகந்தி. பாலோடு சேர்த்து வதக்கும் போதிலிருந்தே கலர் மாறிவிடும். இயற்கையான கலரே போதும். நீங்க வேணா கலர் இல்லாம செஞ்சு பாருங்களேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஆமினா நலமா? உங்க காரட் அல்வா ஈசியாக இருக்கு.{இன்றுதான் செய்யப்போகிறேன்.} }செய்துவிட்டு கருத்து சொல்லாம் என இருந்தேன். ஆனால் நான் தேடிய குறிப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்க பதில் எழுதுகிறேன். இதற்கு முதல் வேறுவிதமாக செய்து சரியாக வரவில்லை.
நீங்க கவிதைகள் மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள் ஆமினா.தோழனுக்கு எழுதிய மடல் மிகமிக அருமை.
இதில் பாராட்டியதற்கு மன்னிக்க. நன்றி.

nice madam............... easy tips

கேரட் அல்வா செய்முறை ரொம்ப ஈசியாக இருக்கு ..ஸ்வீட்டை பார்த்தவுடன் எடுத்து சாப்டுட்டேன் ந்லலாருக்கு வாழ்த்துக்கள் நன்றி

வாழு, வாழவிடு..

ஆமி
நலமாப்பா.. பேசி ரொம்ப நாளாச்சு. ஊருக்கு போய்ட்டு வந்துட்டீங்களா. நான் போய்ட்டு வந்துட்டேன்பா.
புகைப்படத்தோட குறிப்பு போட ஆரம்பிச்சுட்டீங்களா...வெரிகுட் பா..
கேரட் பாக்கவே வித்தியாசமான கலர்ல இருக்கு. லக்னோல இப்படி தான் இருக்குமா? ஆனா பாத்ததுமே சாப்பிடத்தோணுது. நான் வேறு மாதிரி செய்வேன். உங்ககுறிப்பு சற்று வித்தியாசமா இருக்கு. பையன் பிறந்தநாளுக்கு செய்து பாத்துட்டு சொல்றேன். சரியா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அம்முலு

எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் பா...

தேடிய குறிப்பா? ரொம்ப சந்தோஷம் மா.

//இதில் பாராட்டியதற்கு மன்னிக்க. // இப்படிலாம் சொன்னா தான் மனசுக்கு கஷ்ட்டமா இருக்கும் ;) கவிதையை பாராட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள் அம்முலு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி லதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி ருக்ஷானா மம்மு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பேசி எவ்வளவு நாளாச்சு? எங்க ஊர்ல இந்த கலர் தான் கிடைக்கும் பா. தேடி கண்டுபிடிச்சா நம்ம சைட் கலர்ல வாங்கலாம். அந்தளவுக்குபொறுமை இல்ல ;)

கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க. மகனுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராதா... சொல்லிடுஙக

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சலாம் ஆமினா அக்கா,நலமா?

ஹல்வா,அதிலும் carrot ஹல்வா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இன்ஷால்லாஹ் செய்துவிடுகிறேன்.நல்ல ரெசிபி கொடுத்ததற்கு நன்றி.வாழ்த்துக்கள்.

ஹசீன்

ரொம்ப அழகாயிருக்கு. நான் முதன் முதலா இப்படி தான் செய்தேன், ஆனா கேரட்டை வதக்கியும் பச்சை வாசம் போகலை, அல்வாவில் வாசம் இருந்தது, அப்புறம் நம் தோழிகள் கிட்ட கேட்டுட்டு, ஆவியில் கேரட்டை வேக வைத்து பின் பால் சர்க்கரை சேர்த்து செய்வேன். கேரட் வெந்திருப்பதால் 5 முதல் 10 நிமிடத்தில் சுவையான அல்வா ரெடியாயிடும் ஆமி. எனக்கு ரொம்ப பிடித்த குறிப்பு ஆமி. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

ஹாய் ஆமினா உங்க காரட் அல்வா செய்துபார்த்தேன்.ரெம்ப நல்லா வந்திச்சு.காரட் மணமே இல்லை.டேஸ்ட் சூப்பர்.
அட்மின்அண்ணாவிற்கு படமும் எடுத்து அனுப்பிட்டேன்.நன்றிப்பா.

வ அலைக்கும் சலாம் வரஹ்..

மிக்க நலம் பா... அன்புக்கு ரொம்ப நன்றி ஹசினா... சமையல்ல அசத்துறீங்க

கண்டிப்பா செய்து பாருங்க... பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஞாபகம் இருக்கு பவி..

இந்த முறையிலும் முயற்சித்து பாருங்க
:)
வருகைக்கு மிக்க நன்றி பவி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் அம்முலு

செய்துட்டு மறக்காம சொன்னதுக்கு நன்றி பா.... விரவில் அருசுவையில் எதிர்பார்க்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

NICE

உங்களது கேரட் ஹல்வா மிகவும் அருமை

love is god

ur carrot halwa suppar and ur wordings are wonderful
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!

***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாழு, வாழவிடு..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

இறைவன் கொடுப்பதை தடுப்பவர் எவருமில்லை,

இறைவன் தடுப்பதை கொடுப்பவர் எவருமில்லை"

Hi Amina mohammed, really superb ur recipy, yesterday evening i did the carat halwa, 1st time tried it, i make easily, Thanks for ur recipy, bye by Hema Prasanna at London

வாழ், வாழ விடு