கிஃப்ட் என்வெலப்

தேதி: January 17, 2011

5
Average: 4.4 (13 votes)

 

க்ரீட்டிங் சாட் - விரும்பிய நிறம்
ஃபேப்பரிக் பெயிண்ட் - சிவப்பு, ஃபேர்ல்நிறம்
ப்ரஷ்
கத்தரிக்கோல்
பெவிக்கால்
சம்கி
ஸ்டோன்

 

க்ரீட்டிங் சாட்டில் 24 செ.மீ நீளம், 21 செ.மீ அகலத்தில் ஒரு பகுதியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
க்ரீட்டிங் சாட்டில் மேல் முனையிலிருந்து இரு ஓரங்களிலும் 3 செ.மீ இடைவெளி விடவும். மீதி இடைவெளியில் அகலம் 3 செ,மீ, நீளம் 9 செ.மீ அளவில் கட்டம் வரைந்துக் கொள்ளவும். அதன் கீழேயும் இதேப்போல் வரைந்துக் கொள்ளவும்.
இப்போது கீழே வரையப்பட்ட 9 செ.மீ அளவை படத்தில் உள்ளது போல் நறுக்கி எடுத்து விடவும்.
அடுத்து 3 செ.மீ அளவில் இடைவெளிவிடப்பட்ட இருபகுதியின் முனையையும் வளைவாக நறுக்கி விடவும்.
இப்போது இரு ஓரங்களிலும் நடுவில் உள்ள 9 செ,மீ நீளத்தின் மேல்முனையை மட்டும் வளைவாக நறுக்கி விட்டு உள்பக்கமாக மடக்கி வைக்கவும்.
அட்டையின் இரு ஒரத்திலும் பெவிக்கால் தடவி, உள்ளே மடித்து வைத்திருக்கும் அட்டையின் மீது ஒட்டவும்.
பெவிக்கால் காய்ந்ததும் படத்தில் உள்ளது போல் இருக்கும்.
மேலே 3 செ.மீ இடைவெளி விட்டிருக்கும் அட்டையை, கவரையை மூடுவது போல் மடக்கி வைக்கவும்.
அந்த அட்டையின் முன்பக்கத்தில் இடது மேல் பகுதியில் டைமண்ட் வடிவத்தில் வரைந்து படத்தில் உள்ளது போல் சம்கி, ஸ்டோனால் அலங்கரிக்கவும்.
அட்டையின் வலதுப்பக்கத்தில் படத்தில் உள்ளது போல் முதலில் பென்சிலால் பூ வரைந்து அதன் மேல் சிவப்புநிற ஃபேப்பரிக் பெயிண்டால் அவுட் லைன் போன்று வரையவும். அதன் உள்ளே ஃபேர்ல்நிற பெயிண்டால் நிரப்பவும். பிறகு க்ரீன் கலர் சம்கியால் அலங்கரிக்கவும்.
இப்போது இந்த என்வெலப்பில் பணம் வைத்து அன்பளிப்பாக கொடுக்கலாம்.
மிகவும் எளிதாக அனைவராலும் செய்யக்கூடிய நல்ல ரிச்சான கிஃப்ட் என்வெலப் ரெடி.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த என்வெலப் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

your gift envelope very nice.keep it up.with regards g.gomathi.

கிப்ட் என்வெலப் அழகாகவும் செய்ய எளிமையாகவும் உள்ளது.நவினாகுட்டி நலமா?.

மிக அழகாகவும்,எளிமையாகவும் இருக்கு செண்பகா. வாழ்த்துக்கள்.

செண்பகா..

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க? நவினாக்குட்டிய அண்ணாக்கிட்ட விட்டுட்டு யோசிப்பீங்களோ? ரொம்ப அழகான எளிமையான செய்முறை. கண்டிப்பா எல்லாரும் செய்து பாக்ககூடிய மாதிரி இருக்கு. ( நீங்க செய்வீங்களானு என்னைப்பாத்து கேக்ககூடாது, ஏன்னா நான் நிறைய முறை இது செய்து பாக்குறேன் அது செய்து பாக்குறேன்னு டயலாக் விட்டு இது வரைக்கும் பண்ணல, அதுனால இனிமே செய்து பார்த்துட்டு தான் டயலாக் விடனும்னு முடிவு பண்ணிட்டேன்.) மிகவும் அழகாக இருக்கு செண்பகா. வாழ்த்துக்கள்.

செண்பகா அப்படியே அந்த என்வலெப் கவர காசோட எனக்கு அனுப்பி வச்சிட்டீங்க தானே.. அண்ணாக்கிட்ட இருந்து பொங்கல் காசு வரவே இல்ல இன்னும்.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சூப்பர் சூப்பராக செய்திருக்கிங்க .. பொருட்கள் எல்லாம் சரியாக கிடைத்தால் செய்வதும் சுலபம் ..இன்னும் நிறைய செய்யுங்கள் ...வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

ரொம்ப அழகா இருக்கு என்வலப். ரொம்ப நல்ல கற்பனை திறன் உங்களுக்கு பாராட்டுக்கள் செண்பகா.

மிகவும் எள்ளிமையான டிப்ஸ் .... செண்பக அக்கா உங்கள் திறமை எப்படி எல்லாம் use பண்ணுரிங்க........ வாழ்த்துக்கள்

நான் வேறென்ன சொல்ல?? நவீன குட்டி மாதிரியே ரொம்ப cute ஹ அழகா இருக்கு. நீங்க பண்ணுனதுளையே ஹை லைட் எது தெரியுமா அண்ணி?100 வைச்சு காட்டி இருக்கீங்களே.. சூப்பர் அத அப்படியே கோயம்புத்தூர் க்கு ஒரு கொரியர் பண்ணிடுங்க.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் கோமதி எப்படிங்க முதல வந்து வாழ்த்து சொல்றீங்க ரொம்ப நன்றி.

ஹாய் இனியா உங்களிடம் ஒரு முறை பேசி இருக்கீறேன் ஞாபகம் இருக்கா? உங்க பாராட்டிற்கு ரொம்ப ரொம்ப நன்றி. நவீனா ரொம்ப நல்லா இருக்கா.

ஹாய் அமுலு நானே உங்களிடம் பேசனும் என்று நினைத்து இருந்தேன். உங்க கிச்சன் ரொம்ப சூப்பரா இருக்குனு வந்து ஒரு பதிவு போடனும் இருந்து இருந்தேன். ரொம்ப சாரி முடியல. உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

ஹலோ எங்க போனிங்க உங்கள நான் எங்க எல்லாம் தேடுறது. எப்படி இருக்கீங்க. பையன் எப்படி இருக்கார். //நவினாக்குட்டிய அண்ணாக்கிட்ட விட்டுட்டு யோசிப்பீங்களோ?//அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லங்க. கண்டிப்பா செய்து பாருங்க.//செண்பகா அப்படியே அந்த என்வலெப் கவர காசோட எனக்கு அனுப்பி வச்சிட்டீங்க தானே.. அண்ணாக்கிட்ட இருந்து பொங்கல் காசு வரவே இல்ல இன்னும்.....// இன்னும் வரலையா அனுப்பியாச்சு வந்ததும் ஒரு மெயில் பண்ணுங்க இல்லை போன் பண்ணுங்க:-) வாங்க அடிக்கடி எங்களை மறந்துடாதீங்க.

ருக்சானா எப்படி இருக்கீங்க? எல்லா பொருட்களும் கிடைத்ததும் செய்து பாருங்க. ரொம்ப நன்றி.

ரொம்ப நன்றி யாழினி, லதா.

ஹாய் சுகந்தி எப்படி இருக்கீங்க?//நீங்க பண்ணுனதுளையே ஹை லைட் எது தெரியுமா அண்ணி?// எது. //100 வைச்சு காட்டி இருக்கீங்களே.. சூப்பர் அத அப்படியே கோயம்புத்தூர் க்கு ஒரு கொரியர் பண்ணிடுங்க.....// அனுப்பிட்டா போச்சு உங்களுக்கு இல்லாததா அட்ரஸ் அனுப்பிவைங்க.

senbagababu

செண்பகா
ஊருக்கு போறதுக்கு முன்னாடி எல்லார்கிட்டயும் நான் ஊருக்குபோய்ட்டு வரேன்னு அறுசுவைல டமாரம் அடிச்சுக்கிட்டு தான்போனேன். இப்ப ஊர்ல இருந்து வந்ததுனால அறுசுவைக்கு மறுபடியும் வர ஆரம்பிச்சாச்சு.

//இன்னும் வரலையா அனுப்பியாச்சு வந்ததும் ஒரு மெயில் பண்ணுங்க இல்லை போன் பண்ணுங்க:-)// என்ன சாமர்த்தியமா பொய் சொல்றீங்கப்பா.. நாத்தனார் பொங்கல் காசு கேட்டா என்னமா டபாய்க்கறீங்கப்பா.. அண்ணா இது நல்லால்ல ஆமாம் சொல்லிட்டேன். இதுல போன் நம்பர் கொடுத்து வச்ச மாதிரி காசு வரலைன்னா போன் பண்ணுங்கனு வேற டயலாக் விடுறீங்களே.. இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா...

நவினாக்குட்டி நீயாவது இந்த அநியாயத்தை அத்தை சார்பா கேளும்மா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இந்த பதிவை பார்த்து எனக்கு ரொம்ப சிரிப்பு வருதுங்க போதும் போதும் என்னால கண்ரோல் பண்ண முடியல:-) சரி டென்ஷன் ஆகாதிங்க.

senbagababu

நானும் நவினாக்குட்டியும் தமிழ்படங்களின் ஹீரோ ரேஞ்சுக்கு தட்டிக்கேட்டா நீங்க என்னடான்னா சிரிப்பு போலீஸ் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க எங்கள.. என்ன கொடுமை சார் இது......

(பாபு அண்ணா அவர்களுக்கு - எங்க அரட்டை அடிக்கறதுன்னு விவஸ்தையே இல்லையானு நீங்க கேப்பீங்க, அதுக்கும் இப்பவே பதில் சொல்லிடுறேன். பொங்கல் காசு அனுப்பாததுனால அண்ணா சொன்ன பேச்சை கேட்கமுடியாமல் மீற வேண்டியதாகிவிட்டது.. அதுனால தான் இங்க பதில் போட வேண்டியதா போச்சு... )

இதுக்கு மேல இதுல நான் அரட்டை அடிச்சா கவர்ல பணம் வருதோ இல்லையோ, மேஜிக் கம்பு அனுப்பி வச்சு அடி கிடைச்சாலும் கிடைக்கும்.. அதுனால எஸ்கேப்பு...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

செண்பகா.... சூப்பர். எப்படி இப்படிலாம் குறிப்பு கொடுக்க தோணுது???!!! நான் கூட சின்ன பிள்ளையா இருந்தப்போ இப்படி செய்திருக்கேன். ஆனா அது சும்மா ஆசைக்கு, அப்போ அதை யாருக்கும் கொடுக்க தோணல. இப்போ இதை ஒரு குறிப்பா பார்க்கும்போது அதோட மதிப்பு தெரியுது. :) சந்தோஷமா இருக்கு.... இப்படி ஒரு இடத்தில் நானும் இருப்பது. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//செண்பகா.... சூப்பர். எப்படி இப்படிலாம் குறிப்பு கொடுக்க தோணுது???!!!// நீங்க இதை சின்ன பிள்ளையா இருக்கும் போதே செய்து அசத்திட்டீங்க நான் இப்போதாங்க செய்யுறேன்.//அப்போ அதை யாருக்கும் கொடுக்க தோணல.// இப்போ வைத்து இருந்தால் எனக்கு கொடுத்துடுங்க. நான் செய்ததை நிறைய பேர் கேக்குறாங்க அதான். //இப்போ இதை ஒரு குறிப்பா பார்க்கும்போது அதோட மதிப்பு தெரியுது. :) சந்தோஷமா இருக்கு.... இப்படி ஒரு இடத்தில் நானும் இருப்பது. சூப்பர்.// ரொம்ப ரொம்ப சந்தோஷம் வனிதா நன்றி.

senbagababu

hi friend,

really u envolpe cover is very superb. it is very easy and simple to do.
keep it up

S.Gouthami

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta