மாங்காய் தொக்கு

தேதி: January 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

ஒட்டு மாங்காய் - 1 (கிளி மூக்கு மாங்காய்)
வரமிளகாய் தூள் - 5 ஸ்பூன்
வெந்தயம் - 2 ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறு துண்டு
கல் உப்பு - தேவயான அளவு
நல்லெண்ணை - 50 கிராம்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்


 

மாங்காயை தோல் சீவி வாழக்காய் சிப்ஸ் சீவியில் சீவி வைக்கவும்.
வெந்தயம், பெருங்காயம் இவற்றை எண்ணையில்லாமல் வறுத்து பொடித்து வைக்கவும்.

ஒரு இரும்பு கடாய் அல்லது நான்ஸ்டிக் கடாயில் நல்லெண்ணை ஊற்றி கடுகு சேர்த்து வெடித்ததும் சீவிய மாங்காயை சேர்த்து வதக்கவும்.உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மாங்காய் குழையும் வரை வதக்கவும்.

பின் வரமிளகாய் தூள், பொடித்து வைத்துள்ள வெந்தயம்,பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கவும்.

ஆறியதும் கண்ணாடி ஜாடி அல்லது பாட்டிலில் ஸ்டோர் பண்ணவும். லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதத்துக்கு சூப்பரான சைட் டிஷ் .


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் குறிப்பு படிக்கையிலேயே வாய் ஊறுது மேம்.. வீட்டில் மாங்காய் இருக்கு செய்து பார்க்கிறேன் மேம்..வாழ்த்துக்கள்..நன்றி.

வாழு, வாழவிடு..

முதல் ஆளா பின்னூட்டம் தந்ததற்கு நன்றி. செய்து டேஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க ருக்சானா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மாங்காய் தொக்கு செய்தேன் அருமையான சுவை.. இதுவரை கடையில்தான் வாங்குவோம் ..இனிமேல் அது தேவையில்லை என்று நினைக்கிறேன் வாழ்த்தும் நன்றியும் உங்களுக்கு..

வாழு, வாழவிடு..