i need help from seniors

எனக்கு உதவுங்கள் தோழிகளே,குழந்தை வேண்டும்..

தப்பா நினைக்காதீங்க,ஒரு இழையை ஆரம்பிக்கும் முன் மேலே மன்றம் போய் பாருங்க, தலைப்பையும்,கேள்விக்கு தகுந்தாற் போல் மாற்றுங்கள்.அப்பதான் தோழிகளுக்கு பதில் சொல்லவும்,பின்னர் தேடும் போது எடுத்து பார்க்க வசதியாக இருக்கும்.குழந்தை வரம் வேண்டுவோர் பகுதியில் போய் பாருங்க.

ok akka,iam new for this site..neenga sonna madiriye panren akka.

உங்க profile பார்த்தா , திருமணமானவரா என்பதற்கு இல்லைன்னு சொல்லி இருக்கீங்க . குழந்தை வேண்டும்னுனு கேக்குறீங்க .
என்னப்பா இது ??????????????

அக்கா,நான் மெம்பர் ஆனப்போ கல்யாணம் ஆகலை,4 மாசம் தான் ஆச்சு கல்யாணம் ஆகி...

நண்பி இப்படி பொதுவாக கேட்டால் என்னவென்று பதில் சொல்வது...நீங்கள் மருத்துவரிடம் செல்வதுதான் சிறந்த வழி...கல்யாணமாகி நான்கு மாதம் தானே ஆகிறது.கவலை வேண்டாம்...விரைவில் தாயாக வாழ்த்துக்கள் ...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

உங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு மாதம் தானே பா ஆகிரது .கவலை படாமல் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிங்கள்.1வர்ருடத்திர்க்கு பின்பும் குழந்தை இல்லாமல் இருந்தால் நல்ல மருத்துவரை அனுகவும் . சீக்கிரமே நீங்கள் தாயாக வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஸ்ரீ

எல்லோரும் கேக்கறப்போ கஷ்டமா இருக்குக்கா....நாங்க ovulation கரக்டா தான் calculate பண்றோம்.thanks sri akka.

அக்காவெல்லாம் இங்கு வேண்டாமே நண்பி ..எல்லோருமே இங்கு நண்பிகள்தான்..நீங்கள் கரைக்டாதானே இருக்கிறீர்கள் ...கவலை வேண்டாம் ...சந்தோசமா சந்தோசமா இருங்கள் ...விரைவில் நல்லசெய்தி சொல்ல வாழ்த்துக்கள்...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ரத்னா ,
முதல்ல கரு உருவாகனும் அப்டின்ற என்னதோடையே முழு நேரமும் எண்ணிக்கொண்டு இருந்தால் சிறிது கஷ்டம் . நீங்கள் சாதரணமாக இருங்கள் . நல்ல விஷயத்தை நினையுங்கள் . ovulation கரெக்டா calculate பண்றேன்னு சொல்லி இருக்கீங்க . அந்த நாள் வந்தவுடன் depress ஆரது, இந்த தடவை கண்டிப்பா conceive ஆகிடனும் அப்டின்னு நினைகிறத விட்டுட்டு சாதாரணமா இருங்க .மனச அமைதியா வச்சிகோங்க. உறவினர்கள் , நண்பர்கள் கேட்பதை நினைத்து வருத்த படாதீங்க . உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க என் வாழ்த்துக்கள் .

இப்பொழுது உங்கள் உறுப்பினர் பக்கம் சென்று மாற்றுங்கள் .

மேலும் சில பதிவுகள்