கடவுள் இருக்கின்றாரா?

அன்பு தோழிகளுக்கு வணக்கம்,

எனக்கு திருமணமாகி 6 வருடங்களாகிறது. குழந்தையில்லை. என் கொழுந்தனாருக்கு திருமணமாகி 2 1/2 மாதங்கள் ஆகின்றது. அவங்க conceive ஆகிட்டாங்க. என் உறவினர்கள் அனைவரும் எனக்கு நல்ல மனசு இல்லை என்று சொல்லுறாங்க. எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. கடவுள் இருக்கின்றாரா? தோழிகளேச் சொல்லுங்கள்?

ஹலோ பிரியா,
மனசெ தளரவிடாதீர்கள்.குழந்தைப்பேறு என்பது ஒருத்தருக்கு சீக்கிரமாவும், சிலருக்கு தாமதமவும்,சிலருக்கு மிகத்தாமதமாகவும் கிடைக்கிறது.இதில் உடம்புவாகும்,பரம்பரையும் கூட ஒரு காரணமாகிறது.குழந்தைபிறப்பிற்கு நல்லவங்க பொல்லாதவங்க எல்லாம் காரணம் இல்லை. அதனால் நீங்க கவலைப் படாமல் ப்ரயெர் பண்ணுங்கள்.கடவுள் அனுகிரகிப்பார்.தோழிகளும் பிரார்த்தனை செய்கிறோம்.

idhuvum kadandhu pogum.

ரொம்ப ரொம்ப நன்றி வனிதா. எனக்கு கடவுள் மேல் நிறைய நம்பிக்கை உண்டு.

வருத்தபடாதீங்க,கடவுளை நம்புங்க,அவர் செய்வதெல்லாம் நன்மைக்கே,மனசை கஷ்டபடுத்துற மாதிரி பேசறவங்க பேச்சை காதில் போட்டுக்காதீங்க,நம்பிக்கையோடு இருங்க,நிச்சயமா உங்களுக்கு குழந்தை கிடைக்கும்.மருத்துவம் ரொம்ப முன்னேறி விட்டது.குழந்தைபேறு என்பது நல்லவங்களுக்கு தான் கிடைக்கும்ன்னு சொல்றதெல்லாம் சும்மா,எத்த்னையோ பேர் பெத்த குழந்தையை குப்பையில் போட்டுட்டு போறாங்க அவங்களை என்னனு சொல்றது???

நன்றி ரீமா. நீங்க சொல்லுவது ரொம்ப சரி

வண்ககம் தோழிகளே!

@ PRIYA : கவலைபடாதீங்க பா, 6 வருடம் எவ்வளவு வருத்தம் தரும்னு எனக்கு தெரியும். ஏன்னா எனக்கு 9 வருடம் ஆச்சு. உங்கள மாதிரியோ இல்ல உங்களவிடவோ மிகவும் கஷ்டபட்ட அனுபவம் எனக்கு இருக்கு. அதனால் கடவுளை மட்டுமே நம்புவோம். எந்த காரணத்தை கொண்டும் மருத்துவம் செய்வதை தள்ளி போடாமல் உடனடியாக மருத்துவம் செய்யவும்.

@ REEM : உங்க Advice ரொம்ப நல்லதாகவும் கவலையை போக்கும் விதமாகவும் இருந்தது. உங்க நல்ல மனதிற்க்கு நீங்க எல்லா வளமும் பெற்று நீண்ட நாள் வாழணும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.என்னையும் இது போல் நிறைய காய படுத்திருக்கிரார்கள். அதெற்கெல்லாம் மருந்தாக இருந்தது உங்கள் வார்த்தை மிக்க நன்றி தோழி.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

என் வார்த்தைகள் உங்களுக்கு ஆறுதலா இருக்குன்னு சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்கு. எனக்கு முதல் குழந்தை பிறந்து நான்கு மாதங்களில் இறந்துவிட்டது .அப்போ கூட நிறைய பேர் மனசை கஷ்ட்டபடுத்த தான் செஞ்சாங்க. என் கணவர் தான் ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார்.அடுத்த டெலிவரிக்கு இந்தியா அனுப்பாமல்,சவுதியில் நாங்களா தான் பார்த்து கொண்டோம்.கடவுள் அருளால் இப்போ எனக்கு 2குழந்தைங்க இருக்காங்க.
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா,எல்லாருக்கும் எதோ ஒரு கஷ்டம் இருக்கத்தான் செய்யுது,அதை நினைத்து மனசை குழப்பிக்கொள்ளக்கூடாது.

ப்ரியா செந்தில், வணக்கம். நலமா தோழி?

//எனக்கு திருமணமாகி 6 வருடங்களாகிறது. குழந்தையில்லை. என் கொழுந்தனாருக்கு திருமணமாகி 2 1/2 மாதங்கள் ஆகின்றது. அவங்க conceive ஆகிட்டாங்க. என் உறவினர்கள் அனைவரும் எனக்கு நல்ல மனசு இல்லை என்று சொல்லுறாங்க//

தோழியே, நான் இப்படி கேட்பதால் என்னை மன்னியுங்கள். இந்த சமூகத்தின் மேல் உள்ள ஆத்திரத்தில் இப்படி கேட்கிறேன். குழந்தை பெறாத உங்களுக்கு நல்ல எண்ணம் இல்லை என்கிறார்களே. தெருவில் போகும், நாய், பன்றியெல்லாம் மாதா மாதம் குட்டி போட்டுக் கொண்டு திரிகின்றன. அப்போது அவையெல்லாம் நல்ல எண்ணம் கொண்டவையா? இல்லை அவையெல்லாம் கடவுளா?

இது போல நாக்கில் நரம்பில்லாமல், மனதில் ஈரமில்லாமல், வார்த்தைகளில் உணர்ச்சியில்லாம பேசும் ஜந்துக்களின் பேச்சுகளை புறம் தள்ளி விடுங்கள். குழந்தை பேறு என்பது அவரவர் உடல் வாகை பொறுத்த விஷயம்.

16 பிள்ளைகள் பெற்ற தாய்க்கு பிறந்த அத்துணை பிள்ளைகளும் அதே போல குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்று சொல்ல முடியுமா? அவர்களிலும் குழந்தை பேற்றை அடையாதவர்கள் எத்தனை பேர் உள்ளனர். அதே போல குழந்தையில்லாதவர்கள் காலம் கடந்து குழந்தை பெற்று அந்த குழந்தை பெரியவளாகி திருமணமாகி எத்தனை குழந்தைகளை பெற்றெடுத்திருப்பாள் தெரியுமா?

ஆக, ஒருத்தருக்கு குழந்தை பாக்கியம் இல்லைனா,அதுக்கு காரணம் அவங்க எண்ணங்களோ, கடவுளோ, முன் ஜென்ம பாவமோ கிடையாது. ஆண் - பெண் உடல் வாகு மட்டுமே காரணம். அவற்றில் உள்ள குறைபாடுகளை களைந்தாலே நீங்கள் தாயாகலாம். விரைவில தாய்மையடைய என் மனப்பூர்வ வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு தோழிகளே,வணக்கம்.நான் அருசுவைக்கு புதிது.எனக்கும் திருமணமாகி 7 வருடம் ஆகிறது.குழந்தை இல்லை.இந்தியாவில் இருந்த போது மெடிசன் எடுத்தோம்.யுஎஸ் வந்த பின் ஐவிf எடுத்து கன்செவ் ஆனேன்.56 நாளில் கரு கலைந்து விட்டது.நானும் கடவுளை மட்டுமே நம்பி இருக்கிறேன்.கவலைபடாதிருங்கள்.உங்களுக்காக நானும் இயேசுவை வேண்டுகிறேன்.பொறுமையோடு காத்திருப்போம்.என் பெயரும் ப்ரியா தான்.

குழந்தை இல்லாத தோழிகளுக்கு ,சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க நான் கடவுளிடம் பிராத்திக்கிறேன் ...எதற்கும் கைவழி படாதீர்கள் தோழிகளே ,,கடவுள் நல்லவர்களுக்கு என்றுமே துணையிருப்பார் ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அனைவருக்கும் வணக்கம். ஒருவருக்கு கவலை என்றால் ஓடி வந்து துயர் துடைக்கும் நல்ல உள்ளங்கள் இருக்கும் அருசுவையில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். ப்ரியா அக்கா கடவுளை எந்த சந்தேகமும் இல்லாமல் பற்றி கொண்டால் நினைத்தது கண்டிப்பாக கை கூடும். நம்பிக்கையோடு நல்ல மருத்துவரை கலந்து ஆலோக்கவும். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்