மெகந்தி டிசைன் - 5 - மெகந்தி - அறுசுவை கைவினை


மெகந்தி டிசைன் - 5

வியாழன், 20/01/2011 - 16:16
Difficulty level : Easy
3.916665
24 votes
Your rating: None

 

  • மெகந்தி கோன்

 

உள்ளங்கையின் கீழ் படத்தில் உள்ளது போல் வரைந்துக் கொள்ளவும்.

அதன் கீழ் மூன்று இதழ்கள் வரையவும். ஒவ்வொரு இதழிலும் உள்ளே மெல்லியதாக நான்கு கோடு வரைந்து மேலே புள்ளி வைக்கவும். நடுவில் உள்ள இதழ்களிலிருந்து இடதுபக்கம் பார்ப்பது போல் ஒரு சிறிய மாங்காய் டிசைனை வரையவும். உள்ளே சின்ன சின்ன வளைவுகள் வரைந்து நிரப்பவும்.

மாங்காய் டிசைனில் சிறிது இடைவெளிவிட்டு ஒரு கொடிப்போல் வரைந்து ஒரங்களில் இரண்டு இலைகள் வரையவும்.

வரைந்த இரண்டாவது இழைகளுக்கு கீழ் ஒரு கொடி வரைந்து மேலே வரைந்த பூ, மாங்காய் டிசைன், இலைகளை வரைந்துக் கொள்ளவும்.

கடைசியாக வரைந்த இழையின் நுனியில் ஒரு வட்டம் வரைந்து அதனை சுற்றி இழை போன்று ஐந்து இதழ்கள் வரைந்துக் கொள்ளவும். உள்ளே மெல்லிய கோடுகள் போல் வரைந்து நிரப்பவும். இடைவெளியில் கொடிகள் போல் வரைந்து விடவும்.

இப்போது உள்ளங்கையில் ஆறு இதழ்கள் கொண்ட பூவொன்றை வரையவும். உள்ளே டிசைன் செய்துக் கொள்ளவும்.

அந்த பூவின் கீழ் இழைகளும், மாங்காய டிசைனும் வரைந்துக் கொள்ளவும். மாங்காய் டிசைனில் உள்ளே ஒரு புள்ளி, அதை சுற்றி ஒரு வட்டம், அதன் மேல் சிறு சிறு வளைவுகள் வரையவும். அதன் மேல் மீண்டும் ஒரு வட்டம் வரையவும். இதே டிசைனை மீண்டும், மீண்டும் வரைந்து முடிக்கவும்.

மீண்டும் மாங்காய் டிசைனும், இலைகளும் ஆள்காட்டிவிரல் பக்கம் வருவதுப்போல் வரைந்துக் கொள்ளவும். இப்போது நான்கு விரல்களும் சேர்த்து வைத்து வளைவு வளைவாக வரையவும். உள்ளே சின்ன சின்ன புள்ளிகள் வைக்கவும். சிறிது இடைவெளிவிட்டு இதேப்போல் வளைவுகள் வரையவும்.

மாங்காய் டிசைனில் உள்ளே வரைந்ததுப்போல் விரல்கள் அனைத்திற்கும் வரைந்துக்கொள்ளவும்.

அனைவராலும் எளிதாக வரையக்கூடிய சுலபமான மெகந்தி டிசைன் இது.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..ஹாய் சுகி

ஹாய் சுகி ரொம்ப அழகா இருக்கு உங்களோட மெகந்தி டிசைன். இப்பதான் சுகந்தியோட திறமையெல்லாம் ஒவ்வொன்னா வெளிவருது சமையல், மெகந்தி என்று. தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.

சுகன் சூப்பர் மெஹந்தி

ஹை சுகன் ரொம்ப அழகா இருக்குடா. கலக்குற. முதலில் சமையல் அடுத்து மெஹந்தி அப்பறம் என்னடா. ரொம்ப அழகா போட்டு இருக்க. வாழ்த்துக்கள் சுகன்.

நல்ல டிசைன் சுகந்தி

டிசைன் ரொம்ப நல்லா இருக்கு சுகந்தி,சுலபமாகவும் இருக்கு.வாழ்த்துக்கள்!

Eat healthy

sugi

சுகி

சகலகலா வல்லினு அறுசுவை சார்பா பட்டம் கொடுக்கின்றோம். இன்னும் என்னெனெ வித்தை வெச்சிருக்க கையில சூப்பரப்பூஊஊஊஊஊஊஊஊஊஊ

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சுகி

சுகி அசத்துரப்பா மெஹந்தி டிசைன் ரொம்ப நல்லாருக்குப்பா வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுகந்தி

ரொம்ப அழகா இருக்கு சுகந்தி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட்மின் குழுக்கு நன்றி...

டிசைன் வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்கு ரொம்ப நன்றி. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோசமா இருக்கு. தேங்க்ஸ் டு அறுசுவை....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வினோஜா

முதல் ஆளா வந்து பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி மா, உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி....நீ என்ன சொன்ன்னாலும், உனக்கு ஒரு குறை வெச்சுட்டேன். சீக்கரம் அத நிறைவேத்தறேன்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

யாழினி ,ரசியா

யாழினி - உன் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மா
ரசியா - உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மஞ்சுளா

மஞ்சுளா - நீங்க கொஞ்சம் ஓவர் ஹா புகழ்றீங்களோ...சரி விடுங்க. உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. சமையல்ல உங்கள மிஞ்ச முடியலையே....சின்ன வருத்தம் தான்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***