டண்டனக்கா அ டனக்குனக்கா.......!

அ டண்டனக்கா அ டனக்குனக்கா டண்டனக்கா ஏ நக்கா நக்கா நக்கா .......

இது ஒன்னும் இல்லை, நேத்து வல்லவன் திரைப்படத்தப் பாத்த பாதிப்பு;-)

நான் படத்தப் பாத்ததும் அதன் பாதிப்பில் படத்தின் பாடல் வரிகளை முனுமுனுத்துக்கொண்டே இருப்பேன்.. நேத்து இந்தப் படத்தை பார்த்ததும் இந்த பாடல் வரிகளைப் பாடத்தொடங்கினேன்... உடனே என் பொண்ணு ( வேற என்ன சொல்ல வருவேன்னு எதிர் பாத்திங்க;-) ) நான் யம்மாடி என்றதும் அவ ஆத்தாடி அப்படிங்கறா;-)

இத்தனைக்கும் நேத்துதான் அவ முதல் தடவையா இந்தப் பாடலைக் கேட்டா;-)

இப்படி உங்க வீட்டு குழந்தைகளுக்கு பிடித்த பாடல் அதுவும் ஒரே தடவை கேட்டதும் பாட வைத்த பாடல் எவை எவை ;-)

விருப்பம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே;-)

எந்திரன்==கிளிமாஞ்சாரோ,ஒருதடவை கேட்டவுடனே பாடினா,எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்தது.இப்போ ஆடுகளம் {ஆத்தே...}அதான் 10நிமிசத்து ஒரு தரம்,போட்டு கொல்றாங்களே.advertisementilவரும் அந்த 4வரிகள் தான் தெரியும்

ஹாய் ஜெயா எப்படி இருக்கீங்க.என் பையனுக்கு first time பார்த்துவுடன்,கேட்டவுடன் பிடித்த பாடல்கள் நிறைய உள்ளன. "வாரணம் ஆயிரம்" படத்தில் வரும் "அடியே கொல்லுதே", "கந்தசாமி " படத்தில் வரும் "மியாவ் மியாவ் பூனை". இப்பொழுது "சிங்கம்" படத்தில் வரும் " சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்" அதே படத்தில் வரும் "she stole my heart".இந்த பாடல்களை பாடிக்கொண்டே இருப்பான்.

Expectation lead to Disappointment

வெரி குட்! உடனே பதிவு போட்டுட்டீங்க ;-)

உங்க பொண்ணு ரொம்ப சமத்து;)

கிளிமஞ்சாரோ நானே இன்னும் கன்ஃபுயூசன்லதான் பாடிட்டிருக்கேன்;(

என் பொண்ணு அதுல இடையில வர “டட்டட்டட” நு சொல்லிட்டு ”ஆஹா ஆஹா ஆஹா”னு பந்தாவ பாடிட்டு நடப்பா பாருங்க........ எங்களுக்கு பாக்கவும் ஆஹான்னுதான் இருக்கும்;-)

ஆத்தே ஆத்தே நாலு வரியும் பாடறாளா !! கிரேட்டுங்க... உங்கபொண்ணு செல்லக்குட்டி சமத்துக்குட்டி ;-)

Don't Worry Be Happy.

வாங்க வாங்க நம்ம செல்லத்த பத்தி பேசறது ஆஹா என்ன குஷி!;-)

“அடியே கொல்லுதே” “மியாவ் மியாவ் பூனை” ஆமா இதெல்லாம் நம்ம ஃபேவரைட் சாங்கோ இல்லையோ நம்ம குட்டீஸ்ஸோட ஆல் டைம் ஃபேவரைட் லிஸ்ட்ல எப்பவுமே இருக்கும்;-)

"she stole my heart" வாவ் இந்தப் பாட்டு கூட எப்படிங்க கேட்ச் பண்ணினான்;-) சூப்பர்;)

”சிங்கம் சிங்கம்” ஹா ஹா என் பையனும் பாடிட்டே இருப்பான் அதுல என் பொண்னு மியுசிக் மட்டும் போடுவா “ டாண்டா டாண்டா டட டட டாண்டா” அப்படின்னு ;) உங்க பையன் கிரேட்டுங்க பாட்டே பாடறான்;-)

Don't Worry Be Happy.

என் பொண்ணுக்கு வயசு 2 .6 . அவளுக்கு பிடிச்ச பாட்டு "அடடா மழை டா அட மழைடா" , "கிளிமஞ்சாரோ" , "ஜிந்தாக்தா ".

வாங்க வாங்க ...........;-)

யேஏஏஏ....... சூப்பர் பாட்டு...;-)

ம்ம் இன்னும் என்னென்ன பாட்டு லிஸ்ட் ரெடி பண்ணுங்க..;)

“ அடடா மழை டா அட மழைடா” இதுதான் இப்போதைக்கு என் பொண்ணு அழும்போது நிறுத்த நான் பாடற பாட்டு அவளும் பாடுவா ”அடடா அடடா” அது மட்டும்;-) என் பொண்ணுக்கு 1.4 மாதம் ஆகுது.

இன்னும் உங்க பொண்ணு பாடற பாட்டு அப்பப்ப செய்ற சேட்டை எல்லாத்தையும் சீக்கிரம் எழுதுங்க படிக்க ஆவலா இருக்கோம்;-)

Don't Worry Be Happy.

ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லா குட்டீஸ் பண்றத கேட்கும்போது ஆனா மொபைல் போன குட்டீஸ் பக்கதுல வைக்காதிங்க அது குட்டீச்கு நல்லது இல்லை

Be happy

திரும்பவும் பார்த்ததில் மகிழ்ச்சி;-)

நீங்க சொன்னது நல்ல தகவல், கண்டிப்பா மொபைல்ல எல்லாம் பாட்டு கேக்க வைக்கறது இல்ல. அவளுக்கு பிடிச்ச பாட்டு எல்லாம் சிஸ்டம்ல இருக்கு. அத போட்டு விட்டுடுவேன். ஒரு டிஸ்டர்ப்பும் பண்ணமாட்டா. என் வேலையும் நடக்கும்;-)

உங்க குட்டீஸ் பத்தியும் கொஞ்சம் எடுத்து விடுங்கபா... ;-)

Don't Worry Be Happy.

ஹாய் ஜெயா நலமா?

நான்தான் முதலில் பதிவு போடணும் என்று டைப் செய்து விட்டேன்பா..

என் பொண்ணு வந்து ச..................ருன் ........................நு.....backspace அழுத்திவிட்டுட்டாபா.

சரின்னு போய் சமையல் செய்துவிட்டு வந்து பார்த்தா இத்தனை பேர்???....

என் பொன்னுக்கும் பிடித்த பாட்டு "அடடா மழை ட" பாட்டு தான்..(கார்த்தி பெயரே மாற்றிவிட்டால்)

அடடா மாமான்னு..

சூர்யா பாட்டு எல்லாம் பிடிக்கும்......அப்புறம் "ச்சுச்சு மாரி".....(பூ படம்)இதுவும் ரொம்ப பிடிக்கும்...

ஹசீன்

எனது குட்டி இப்பொது என் மனைவி வயிற்றில் பாடிகொண்டிருகிறான்

Be happy

மேலும் சில பதிவுகள்