யோகர்ட் ப்ரெட் டோஸ்ட்

தேதி: January 24, 2011

பரிமாறும் அளவு: 2 குழந்தைகளுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ப்ரெட் ஸ்லைசெஸ் - 4
முட்டை - 1
தயிர் - 4 டேபில்ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபில்ஸ்பூன்
உப்பு - 1 பின்ச்
பட்டை பொடி - 1 பின்ச்
வெண்ணை - 2 டேபில்ஸ்பூன்


 

முதலில் முட்டை ,தயிர்,சர்க்கரை,உப்பு மற்றும் பட்டை பொடியை நன்கு அடித்து கலக்கவும்.
வெண்ணையை ஒரு பேனில் போட்டு மிதமான தீயில் கருகாமல் உருக விடவும்
ப்ரெட் ஸ்லைசெஸை ஒவ்வொன்றாக முட்டை தயிர் கலவையில் இருபுறமும் சில வினாடிகள் ஊறவிட்டு எடுத்து வெண்ணையில் போடவும்
இருபுறமும் திருப்பி இட்டு வேகவைக்கவும்
சுவையான ப்ரெட் டோஸ்ட் ரெடி


பாலில் செய்யும் ப்ரெட் டோஸ்டை விட சுவை அலாதியாக இருக்கும்..தயிரின் புளிப்பும் இனிப்பும் பட்டை பொடியின் வாசனையுமாக வீட்டில் உள்ள குழந்தைகள் கேக் சாப்பிடுவது போல சாப்பிடுவார்கள்..ரொம்பவே மென்மையாக இருக்கும்..

பெரியவர்களுக்கு என்றால் முட்டையின் வெள்ளையும்,லோ ஃபேட் தயிரும் சேர்த்து டோச்ட் செய்து கடைசியாக இனிப்புக்கு தேன் தடவிக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா மேடம்

உங்க குறிப்பு வித்தியாசமா நல்லாருக்கு. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். முட்டை இல்லாமல் இதை செய்ய முடியாதா? முட்டைக்கு பதிலா வேறு எதாவது உபயோகிக்கலாமா? எப்பவும் ப்ரெட் ஒரே மாதிரி டோஸ்ட் செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டது. இது சற்று வித்தியாசமாக உள்ளது. காய்கறி ஸ்டப் வைத்து சாப்பிடுவதோ அல்லது ஜாம் வைத்து சாப்பிடுவதோ அல்லாமல் இந்த முறை படிக்கும்போதே நன்றாக இருக்கும்போல் தோன்றுகிறது. நேரமிருந்தால் பதிலளிக்கவும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நான் நேத்தே இந்த ரெசிப்பி பாத்தேன் பதிவு போட முடியலை, நானும் தயிர் சேர்த்துதான் சாப்பிடுவேன் ஆனா முட்டையில் இதுவரை ட்ரை பண்ணினது இல்லை. உங்க குறிப்பு படிக்கும்போதே நல்லாயிருக்கும்னு தோணுது. டயட்ல இருக்கிறவங்க பயப்படத்தேவையில்லை. பட்டை கொலஸ்ட்ரால் கம்மி பண்ண உதவும், மஞ்சள் கரு சேர்த்தாமலும் சாப்பிடலாம்.. ரொம்ப நன்றி நல்ல குறிப்பு கொடுத்தற்கு;-)

ராதா;

நான் பிரட் ஆலிவ் ஆயில் ஸ்பெரே பண்ணி டோஸ்ட் பண்ணுவேன், ஒரு ஸ்லைஸ்ல புதினா சட்னி, வெள்ளரிக்காய் வைத்து மறு ஸ்லைஸ்ல கெட்டித் ஸ்கிம்டு தயிர் வச்சு தவால ஹீட் பண்ணி சாப்பிடுவேன். அப்படி பண்ணும்போது மேல் பக்கம் கிரிஸ்பியா உள்ள சாப்டா இருக்கும். சீக்கிரம் படத்தோட குறிப்பு தரலாம்னு இருக்கேன்;-)

Don't Worry Be Happy.

ஜெயா

தேங்ஸ் பா. உங்க முறையும் புதிதா தான் இருக்கு. கூடிய சீக்கிரம் படத்தோட குறிப்பு கொடுங்க. எங்களுக்கு பாத்து செய்ய வசதியா இருக்கும்ல. நான் எப்பவும் லெட்யுஸ், சீஸ் ஸ்லைஸ், தக்காளி, வெங்காயம், தக்காளி சாஸ், வெள்ளரி எல்லாம் ப்ரெட் நடுவுல வச்சு டோஸ்ட் பண்ணி பையனுக்கு கொடுப்பேன். எங்களுக்கு பெப்பர் பவுடர் சேர்த்து செய்வேன். இது புதிய குறிபபா இருக்கு. கண்டிப்பா செய்து பாக்குறேன்பா.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் ராதா ஜெயா..இந்த டோஸ்ட் சாப்பிட க்ரீம் போல இருக்கும்.நானும் என் ஃப்ரென்டிடம் சுட்ட குறிப்பு தான்;-)..முட்டை சேர்ப்பதால் தான் தயிர் முட்டையோடு சேர்ந்து சூடேறும்பொழுது ப்ரெடோடு ஒட்டும் இல்லையென்றால் சரிவராது என நினைக்கிறேன்.ஆனால் எனக்கும் முட்டையில்லாமல் செய்து பார்க்க ஆசை..முயன்று பார்த்து சொல்கிறேன்

தளிகா நல்ல குறிப்பு. நானும் இது வரை யோகர்ட் வைத்து ட்ரை பண்ணினது இல்லை. ட்ரை பண்ணி பார்த்து விட்டு சொல்கிறேன்.

முட்டைக்கு பதில் :
மப்பின்ஸ், பான்கேக், பிரட் , பிரெஞ்சு டோஸ்ட் செய்யும் போது முட்டைக்கு பதில் வாழைபழம் அல்லது ஆப்பில்சாஸ் சேர்த்து செய்யலாம். உப்பி வரவேண்டியவைகளுக்கு பேகிங் பவுடர் சேர்க்கணும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா செய்து பாருங்க அருமையா இருக்கும்.ஆனால் முட்டை சேர்த்தாலே கொஞ்சமாக தயிர் ப்ரெட்டில் ஒட்டாது இறங்கும்.

இன்று உங்கள் யோகர்ட் பிரெட் டோஸ்ட் செய்தேன் நன்றாக இருந்தது. என் குழந்தை மிகவும் விரும்பி சாப்பிட்டான். வாழ்த்துக்கள்.

Dreams Come True..

சுபன்யா ரொம்ப சந்தோஷங்க..என் மகனுக்கும் ரொம்ப பிடிக்கும்:)