கோவம்

கோவம்

வணக்கம் தோழிகளே எனக்கு என் கணவரை பார்த்தாலே கோவம் கோவமா வருது ஆனால் அவர் என்னிடம் அன்பானவராக நடந்துகொள்கிறார் அவரை ஏற்றுகொள்ள என் மனசு சம்மதிக்கவில்லை..குடும்ப பிரச்சனைதான் தோழிகளே..குழப்பத்திற்கு தீர்வு கூறுங்களேன்..சில நேரத்துல நான் அவரை நம்பி வந்துட்டதால ஒன்னும் சொல்ல முடியல...பிள்ளைகளை வைத்துகொண்டு தனியே வசிப்பதும் கடினம் என்ன செய்ய?

நச்சுன்னு நாலு வார்த்தை சொன்னீங்க அண்ணா நான், என், எனது இப்படி சொல்வதை விட்டுட்டு எங்கள்,நான், நமது அப்படின்னு சொன்னாலே குடும்பத்தில் ப்ரச்சனைகள் வராது அண்ணா

அன்புடன்
ஸ்ரீ

தோழி குமாரி, உங்களுக்கு திருமணம் ஆகி 9 வருடம் ஆகிறது. நீங்க சொல்ற பிரச்சனை எல்லாம் திருமணம் ஆனா புதுசுல வரும். அப்பறம் எல்லாமே பழகி விடும். எனக்கு நீங்க சொல்றது ரொம்ப வித்தியாசமா இருக்கு, இருந்தாலும் எனக்கு தோணுவதை சொல்றேன். தப்பா இருந்தா மன்னுச்சுகோங்க.

பெண் என்ன, ஆண் என்ன எல்லாருக்கும் அவங்க அவங்க அம்மா, அப்பா ரொம்ப முக்கியம் தான். யாரும் விட்டு தர மாட்டங்க.... விட்டு தரனும் ன்னு அவசியமும் இல்ல. இந்த பாகுபாட்டை மனசுல இருந்து தூக்கி வீசுங்க.

///எனக்கு கல்யாணம் ஆனதில் இருந்து ஒரு பவுன் நகை கூட செய்தது இல்லை..//// - தோழி, அன்பான கணவர், ஆசையாய் பிள்ளை. இத விட, வேறென்ன முக்கியம்? நகை என்பது உயிரற்ற்ற பொருள், உயிருள்ள உங்கள் கணவரின் அன்புக்கு இது எல்லாம் ஈடு இணை ஆகுமா? உங்களுக்கு 1000 பவுன் எடுத்து தந்துட்டு, உங்க கூட ஒரு வார்த்தை கூட பேசலைன, உங்களுக்கு எப்படி இருக்கும்?

//.எனக்கு ஏன் காரணமே இல்லாம என் நகைகளை இங்கே கேக்குறாங்கன்னு குழப்பமா இருக்கு..//// --- உங்களுக்கு தெரியுது, நகை மூலமா தான் பிரச்சனை வருதுன்னு, அந்த நகை உங்கள் மாமியாரிடம் தந்து தான் பாருங்களேன். அப்படி தந்தா உங்க மாமியார் நிம்மதி இருபாங்க இல்ல?? உங்கள தொந்தரவு பண்ண மாட்டங்க தான? அவங்க அடமானம் வெச்சுடுவாங்கன்னு பயப்படறீங்க. தேவை இல்லாம நீங்களே குழம்ப வேண்டாம், உங்க கணவர் கண் முன்னாடி அவங்க கிட்ட தாங்க.

நம் மனம் தான் எல்லாத்துக்கும் காரணம் கண்ணம்மா, "உங்கள் கணவர் உங்களை நல்லா பாத்துக்கிறார், அவர் தான் உலகத்த்லேயே அன்பானவர், அவர விட எனக்கு வேற ஒன்னும் முக்கியம் இல்லை" ன்னு மனசுல எழுதி வெச்சுகோங்க.... இந்த பிரச்னைக்கு, நீங்க உங்க மனச மாத்தறது தான் ஒரே வழி...உங்களுக்கு பெண் குழந்தைன்னு நினைக்கறேன், நீங்க உங்க கணவரை பத்தி இப்படி நினைச்சா, அது உங்க குழந்தையும் பாதிக்கும். அவளும் அப்பான்னா இப்படி தான், அம்மா வ இப்படி பீல் பண்ண வைக்கிறார், அவரு நல்லவரு இல்ல, பாட்டி பேச்ச தான் கேக்கறார்..... இத மாதிரி தேவை இல்லாம குழந்தையின் மனமும் கெடும். எல்லாமே யோசுச்சு பண்ணுங்க. சீக்கரமே உங்கள் வாழ்வில் மங்கி இருக்கும் ஒளி, பிரகாசம் அடைய வாழ்த்துக்கள்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பதில் கூறியவர்களுக்கு நன்றி...

சரி கண்டிப்பா என் மனசை மாத்திக்கிறேன்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அப்படியெனில் நீங்கள் உங்களுக்காக வாழ்வதை விடுத்து இனி உங்களின் பிள்ளைக்காக வாழ ஆரம்பிங்கள் அவர்கள் வீட்டு விழாவிற்க்கு போங்க உங்க வீட்டு விழாவிற்க்கும் கணவரது அனுமதியுடன் செல்லுங்கள் அவர் வரவில்லை என்ராலும் வர்புருத்த வேண்டாம் கணவர் வீட்டில் நடப்பதை அம்மா வீட்டில் சொல்ல வேண்டாம் அம்மா வீட்டில் கணவர் ஏண் வரவில்லை என்று கேட்டாலும் அவருக்கு வரனும்ன்னு தாம்மா ஆசை ஒரு அவசர வேலை வந்துவிட்டது அப்படின்னு சொல்லுங்க

அன்புடன்
ஸ்ரீ

இவ்ளோ காலம் நீங்க சொன்னதைத்தான் பின்பற்றி இருக்கிறேன்.. என் அம்மா வீட்ல அவரை நான் விட்டுகுத்ததில்லை...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்களுக்கு திருமணமாகி இத்தனை வருஷங்கள் ஆயிடுச்சு உங்கள் கணவரை நீங்கள் சரியா புரிஞ்சுக்கலையோ என்று எனக்கு தோணுது.நகை உங்களோடது,உங்கவீட்டில்[கணவர்] இருப்பதுதானே நியாயம்??உங்கள் அண்ணி இது போல் செய்தால் ஏற்று கொள்வீர்களா???உங்க அனுமதி இல்லாமல் விற்கவோ அடமானம் வைக்கவோ மாட்டாங்க.கணவருக்கு கஷ்டம் என்றால் கொடுத்து உதவி செய்வதில் தவறென்ன???கணவரை ஏன் நீங்க நம்பமாட்டேங்கீறீங்க??நீங்க திரும்ப திரும்ப நகை பணம் என்று பேசுவதால் உங்க கணவர் நகை பணம் தான் முக்கியம் என்று சொல்லியிருப்பார்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
தோழி மோசமான நடத்தை,சந்தேக புத்தி,சபலகேஸ்குடி, போன்ற எத்த்னையோ கெட்ட குணங்கள் உள்ள கணவரையும் சகித்துகொண்டு எத்த்னையோ பெண்கள் வாழுறாங்க.உங்க கணவர் அப்படி ஏதும் இல்லையேன்னு சந்தோஷபடுங்க.

உண்மைதான் reem அந்த விசயத்தில் நான் புண்ணியம் செய்து இருக்கேன்... என் கணவருக்கு எந்த கேட்ட குணமும் இல்லை ..........எனக்கு பதில் தந்து உங்க சகோதரி போல தெளிவு படுத்திய அனைவருக்கும் நன்றி...எல்லோரும் கணவருக்கு பின் எல்லாம்னு சொல்லறிங்க யாரும் நான் செய்யறது சரின்னு சொல்லல ...சோ நான் கண்டிப்பா இனி அவருக்கு பிடிச்ச மாதிரி நடந்துப்பேன்..

நன்றி...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடம் ஆகுது உங்களுக்குள் என்னென்ன பிரச்சனைகள்னு தெளிவா தெரியல இருந்தாலும் நீங்கள் முதலில் கோவத்தை விடுங்க உங்கள் மேலயும் பிள்ளைகள் மேலயும் பாசமாதான் இருக்கார்னு சொல்றீங்க அப்புறம் என்ன முதல்ல என் குடும்பம் அவர் குடும்பம்னு நினைக்குரதை விடுங்க (நம்ம குடும்பம்னு நினைங்க) ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்வதில்தான் இல்லறம் இன்பமா இருக்கும்,அவர் கிட்ட கோவ படாமல் பொருமையாகவும் நிதானமாகவும் பேசுங்க அவர் மனசுல என்ன இருக்குன்னு முதலில் தெரிஞ்சுக்குங்க அப்படியே மெல்ல மெல்ல அவர் போக்ல போயி அவர் மனசில் இருக்கும் என்னத்தை மாற்றுங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
நகைகள் மட்டுமே வாழ்க்கை இல்லை தோழி உங்கள் வாழ்க்கை உங்க கையிலதான் இருக்கு பாத்து பக்குவமா செயல்படுங்க. உங்கள் வாழ்க்கை இனிதே அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தோழியே குமாரி, உங்கள் வருத்தம் புரிகிறது. உங்கள் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தும் உங்கள் ஒருவருடைய கருத்தை வைத்தும் உங்கள் கணவரையோ, புகுந்த வீட்டினரையோ மதிப்பிட முடியாதல்லவா? அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் பார்க்க வேண்டும்.

//என் குடும்பம் எனக்கு முக்கியம் என்று நான் நினைப்பதும் ..
அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்னு அவர் நினைப்பதும் தான்//

முதலில் நீங்க உங்கள் குடும்பம் என்று தாய் வீட்டை குறிப்பதை விடுங்கள். திருமணத்திற்கு பிறகு நீங்கள் உங்கள் கணவரின் பெயரை மட்டும் உங்கள் பெயருக்கு பின்னால் தாங்கி வர வில்லை, அவருடைய குடும்பத்தையும் சேர்த்து தான் தாங்கி வருகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் மாமியாருக்கு உங்கள் நகையின் மீது தான் நாட்டம் என்றால் அதையும் அவரிடமே கொடுத்து பாருங்களேன். அவர் இப்படி கூட நினைத்திருக்கலாம். உங்களுக்கு போட்ட நகை ஏன் இன்னும் உங்கள் தாய் வீட்டில் இருக்கிறதென்று, அதை அவர்கள் ஒரு தன்மான குறைச்சலாக கருதலாம். அதனால் நீங்கள் முதல் வேலையாக நகைகளை உங்கள் மாமியார் வீட்டில் கொடுத்து வைத்து பாருங்கள். அவர்களிடம் தராமலே அவர்களை பற்றி சொன்னால் எப்படி பா :)

//அவர் குடும்ப விழாவிற்கு நான் செல்கிறேன்..ஆனால் என் குடும்பத்துல என்ன நடக்குதுன்னு கூட கேக்கவோ கண்டுக்கவோ மாற்றார்//

தோழியே, நம்மை, நம் குடும்பத்தாரை,நம் குடும்ப விழாக்களை பற்றி திருமணத்திற்கு பிறகு ஒரு பொருட்டாகவே எடுக்க கூடாது (இது என் கருத்து) புகுந்த வீட்டார்,கணவர் விருப்பபட்டால்,சம்மதித்தால் சென்று வருதல் நல்லது. ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு நாம் கணவர் வீட்டில் இருப்பது தான் நமக்கும், நம்மை பெற்றவர்களுக்கும் அழகு. அதனாலே அந்த அளவு முக்கியத்துவம் தரச்சொல்கிறேன்(றோம்). திருமணம் முடிந்து கணவர் வராமல் நீங்கள் மட்டும் தனித்து தாய் வீட்டில் ஒரு இரண்டு நாட்கள் தங்கி பாருங்களேன், அதற்குள் உற்றாரும், உறவினரும், அக்கம் பக்கத்தினரும் கேள்விக்கணைகளை தொடுத்து உங்களை ஒரு வழி ஆக்கி விடுவார்கள். இப்போது சொல்லுங்கள் நமக்கு எந்த வீடு நிரந்தரம்? எந்த வீடு சாஸ்வதம்? எந்த வீடு நமக்கு பெருமை சேர்த்து தரும்?

//எனக்கு கல்யாணம் ஆனதில் இருந்து ஒரு பவுன் நகை கூட செய்தது இல்லை..ஆனால் என் தோழிகளின் கணவன் நெறைய மனைவிகளுக்கு செய்றதை (தோழி )அவர்கள் என்கிட்ட சொல்லும் பொது ஏன் என் கணவர் இப்படி இருக்கிறார்னு எனக்கு அவர் மேல் கோவம் வருது..//

நீங்கள் இப்படி சொல்வதில் இருந்தே உங்களின் மனமுதிர்ச்சியின்மை நன்கு தெரிகிறது. நீங்கள் காலுக்கு செருப்பு இல்லை என அழுகிறீர்கள். காலே இல்லாத (கணவனின் அன்பில்லாத) தோழிகள் இன்றும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒரு சில ஆண்களுக்கு எதிரில் இருப்பவர்களை தெரியும். அதனால் அவர்களுக்கு செலவுகள் செய்வார்கள். தன்னுள்ளே இருக்கும் தன் மனைவியை தெரியாது. அது போலத்தான் நீங்கள். உங்களுக்கு நகை வாங்கி தரவில்லையென்றாலும் தவறாக நினைக்க மாட்டீர்கள், அவருடைய நிலை அறிந்து நடந்து கொள்வீர்கள் என்று அவர் நினைத்ததால் வாங்கி தராமல் இருந்திருக்கலாம்.நான் பெருமைக்கு சொல்லவில்லை தோழியே. என் தாய்க்கு திருமணமாகி முப்பத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை என் தந்தை தாய்க்கென்று எந்த நகையும் வாங்கி தந்ததில்லை. இருந்தாலும் அது குறித்து எந்த வாதங்களையும் செய்யாமல் தான் என் தாய் வாழ்ந்து வருகிறார்.

கணவருக்கென்று தங்களுடைய உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் அழித்த பிறகும் அவர்களுக்காகவே உயிர்வாழும் பெண்கள் இருக்கும் இந்த காலத்தில், நீங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. சிறிது விட்டு பிடித்து பாருங்கள் என்றே சொல்கிறேன். அன்பு காட்டும் விதத்தில் காட்டினால் பேயும் இறங்கும்.அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் ;எறும்பு ஊற ஊற கல்லும் தேயும். நீங்கள் சிறிது காலம் உங்கள் கணவருக்கு பிடித்தாற் போல இருந்து பாருங்கள். அவருக்கு பிடித்த விஷயங்களை உங்களுக்கும் பிடித்ததாக்கி கொள்ளுங்கள். அவர் அன்பு செலுத்தும் மனிதரிடம் நீங்களும் அன்பு செலுத்துங்கள். பிறகு பாருங்கள் மாயாஜாலத்தை. ஒருநாள் உங்கள் வீட்டினர் அழைக்கவில்லை என்றாலும் அந்த விசேஷத்தில் கலந்து கொண்டு உங்களை திக்குமுக்காட செய்வார்.

//அவர்களின் தேவை என் நகையும் பணமும் என் கணவர்கிட இதை சொல்லி கேட்டும பார்த்துவிட்டேன் அதற்கு அவர் சொன்னது எனக்கு மேலும் அதிர்ச்சி ஆகிவிட்டது ..ஆம்மாம் நான் உன் நகைக்கும் பணத்கும்தான் கல்யாணம் செய்துகிட்டேன்னு சொல்லுறார்.//

நகை குறித்து ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கலாம். அவர் அந்த கோபத்தில் அப்படி பேசியிருப்பார். யோசித்து பாருங்கள். நகையின் மேல் அன்பு காட்டும் மனிதரால் எப்படி உங்கள் மேலும், குழந்தையின் மேலும் அன்பு காட்ட முடியும்?

நீங்கள் உங்கள் பிரச்சனையை மட்டுமே வைத்து பார்ப்பதால் உங்களுக்கு அது பெரிதாக தெரிகிறது. உங்களை விட வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை சந்தித்த, சந்தித்து கொண்டிருக்கும் தோழிகளை நினைத்து பாருங்கள். உங்கள் பிரச்சனை ஒன்றுமே இல்லை என்பது போல உணர்வீர்கள்.

கணவருடன் ஏற்பட்ட கோபம் களைந்து நூறாண்டுகள் ஒற்றுமையோட வாழ வாழ்த்துகிறேன் :) நான் மேற்சொன்னவற்றில் உங்கள் மனதை வருத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குமாரி ஏன் எல்லாரும் உங்கள் கணவருக்கு சப்போர்ட் பன்றாங்கன்னா நீங்களே தெளிவா சொல்லிட்டீங்க கணவர் அன்பா நடந்துக்கறார் என்று.அதையே சாதகமாக பயன்படுத்தி மெல்ல மெல்ல நீங்கள் அவரை வழிக்கு கொண்டு வந்து விடலாம்;-)
அடுத்தவர் வீட்டு பெண்ணின் நகை,பணத்துக்கு ஆசைபடுவது தப்பு தான்..ஆனால் அது பெரிய ப்ரச்சனையே இல்ல..உங்கள் கணவர் உங்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளும் வரை எதுவுமே ப்ரச்சனையே இல்லை...
என் கண் முன்னேயே எத்தனையோ பெரிய கோடீஸ்வரர் வீட்டு பெண்கள் திருமணத்துக்கு பின் கணவரது மோசமான பழக்கங்களால் வாழ்க்கையே வெறுத்து போயிருக்கிறாங்க.
அதையெல்லாம் ஒருமுறை பார்த்தால் நமக்கு இவ்வளவு அன்பான கணவரா என்று வியப்பாக இருக்கும்..திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது எவ்வளவு உண்மை என்பது புரியும்..இதில் மாமியார் மாமனார் ப்ரச்சனைகளெல்லாம் ஒரு ப்ரச்சனையே இல்லை..இதை நானும் புரிந்து கொள்ள சில வருடம் எடுத்தது.
வயதானவர்கள் எது சொன்னாலும் செய்தாலும் நம் கணவன் மனைவிக்குள் அது ஒரு ப்ரச்சனையாகாதவரை எதையும் கண்டுகொள்ளாமல் வயதுக்கான மரியாதை செலுத்துவது நல்லது..இன்று நாம் காக்கும் பொறுமையை ஒரு நாள் அவர்கள் நிச்சயம் புரிந்து நம்மிடம் அன்பு செலுத்த தொடங்குவார்கள்..
கோபம் இதற்கு தீர்வே இல்லை..கோபத்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்றால் சில காலம் தான் அவரும் வழிந்து வந்து பேசுவார் பிறகு அவருக்கு வெறுப்பேரினால் நீங்கள் என்ன நினைத்தும் பிறகு பலனிருக்காது.
எனக்கு நீங்க இதை செய்யலை அதை செய்யலை என்பதை எந்த நல்ல கணவராலும் தாங்க முடியாது..எப்படி கவனித்து என்ன பலன் என்று நினைக்க தொடங்குவார்கள்...அவர் வாங்கி தரும் சின்ன பூவை கூட சந்தோஷமாக வாங்கி சந்தோஷத்தை அவரிடம் தெரிவிக்க பழகுங்கள்
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா என்று சொல்லவே கூடாது.ஏங்க எனக்கு இது பிடிச்சிருக்கு கைய்யில் காசு வரும்போழுது வாங்கி தருவீங்களா என்று ஆசையாக கேளுங்கள்..ஒரு குழந்தை போல கணவரை கவனித்து நாமும் அவருக்கு வெகுளியான குழந்தையாக மாறினால் வாழ்க்கை ரொம்பவே இனிமையாக இருக்கும்.முயன்று பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்