லட்டு

தேதி: April 30, 2006

பரிமாறும் அளவு: பத்து நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - கால் கிலோ
ஜீனி - அரை கிலோ
நெய் - மூன்று டீஸ்பூன்
முந்திரி பருப்பு - ஐம்பது கிராம்
ஏலக்காய் - பத்து
கிஸ்மிஸ் - இருபது
மஞ்சல் கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
ரீபைண்டு ஆயில் - அரை லிட்டர்


 

முதலில் ஜீனியில் ஒரு டம்ளர் நீர் விட்டு இளம் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும்.
பாகு தயாரானதும் கலர் பவுடர், ஏலப்பொடி சேர்க்கவும்.
கடலை மாவை சலித்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
இப்போது எண்ணையை சூடாக்கி பூந்தி கரண்டியை வாணலியில் நேராடியாக பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி வெந்ததும் (முறுக கூடாது) எடுத்து அப்படியே பாகில் போட வேண்டும்.
இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போட்ட பிறகு நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து கொட்டவும்.
ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்.
கை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும்.


இளம் கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்.
பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
மு. பருப்பை லேசாக மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி பிறகு நெய்யில் பொரித்து போட்டால் வாசனை நன்றாக இருக்கும்.
மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது.கொஞ்சம் க. மாவு சேர்த்தால் சரியாகி விடும்.

மேலும் சில குறிப்புகள்