ஈசி குல்பி

தேதி: January 26, 2011

பரிமாறும் அளவு: 5-7 people

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

1 டின் கண்டன்ஸ்ட் மில்க்
1 டின் இவாபொரேடட் மில்க்
3 மேசை கரண்டி பாதாம் மில்க் பவுடர்
சிறிதளவு முந்திரி, சாரை பருப்புகள்
1 சிட்டிகை குங்கும பூ.


 

இந்தியா தவிர மற்ற நாடுகளில் எல்லோருக்கும் *இவாபொரேடட் மில்க் என்று ஒரு டின் கிடைக்கும்.
அதே அளவு கண்டன்ஸ்ட் மில்கையும் எடுத்துக் கொள்ளவும்.
இரண்டையும் நன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது முந்திரி, சாரை பருப்பு, குங்கும பூ, போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.
அதோடு பாதாம் பால் பவுடர் இருந்தால் அதையும் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
இந்த கலவையை 7 மணி நேரம் ப்ரேசரில் வைத்து விடவும்.
அருமையான ஈசி குல்பி தயார்.


பாதாம் பால் பவுடர் இல்லையென்றால், சாரை பருப்பை தவிர்த்து மற்ற பருப்புகளை சிறிதளவு பாலில் ஊறவைத்து அரைத்து சேர்க்கவும்.
இவபொரேடட் மில்க் என்பது பாலை சுண்ட காய்ச்சும் பொழுது, அது சிறிது நிறம் மாறும், அது தான் இந்த இவாபொரேடட் மில்க். இது நீர்க்கவும் இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல், நடுநிலையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

என்னங்க இவாபொரேடட் மில்க் இந்தியாவுல கிடைக்காதுன்னு சொல்றீங்க .அப்புறம் எப்டி நாங்க பண்றது.
நாமலே பண்ணலாமா இதை !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தாராளமா பண்ணலாம். அதான் சொன்னேனே! பாலை சுண்ட காய்ச்சும் பொழுது அது நிறம் மாறும். பழுப்பு நிறமாக இருக்கும், அதைத் தான் இவாபொரேடட் மில்க் என்கிறோம்.
its very easy to make. it should be slightly thick.

ஹாய் நித்தியா நலமா?

உங்க ஈஸி குல்பி செய்துப் பார்த்தேன்.ரொம்ப சூப்பரா இருந்தது.

முடிந்தால் செய்ததை படங்களுடன் அனுப்புகிறேன்..

நன்றி +வாழ்த்துக்கள்.

ஹசீன்

நன்றி. என்னிடமும் படங்கள் உள்ளன, ஆனால் அவற்றை எப்படி அனுப்புவது என்று தான் தெரியவில்லை.