வாழைப்பழ பணியாரம்

தேதி: January 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (9 votes)

 

ஃப்ரவுன் அரிசி - அரை ஆழாக்கு
மைதா மாவு - அரை ஆழாக்கு
வெல்லம் - இரண்டு அச்சு
பெரிய கனிந்த வாழைப்பழம் - ஒன்று
ஏலக்காய் - 3
தேங்காய் - இரண்டு பத்தை
இட்லி சோடா - ஒரு பின்ச்
எண்ணெய் - சுட தேவையான அளவு
பாதம் பொடித்தது - ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை


 

தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ஃப்ரவுன் அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசியை கிரைண்டரில் அரைத்து அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய், மைதா சேர்த்து அரைக்கவும். கடைசியாக வாழைப்பழத்தை நறுக்கி சேர்த்து அரைக்கவும்.
வெல்லத்தை பொடித்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மாவில் இட்லி சோடா, பொடித்த பாதம், சுக்குபொடி, தேங்காய் பொடியாக அரிந்து சேர்க்கவும்.
வெல்ல கரைசல் ஆறியதும் மாவில் வடிக்கட்டி சேர்க்கவும். மாவை நன்கு கலந்துக் கொள்ளவும்.
குழி பணியார சட்டியை காயவைத்து லேசாக எண்ணெய் ஒரு துளி விட்டால் போதும். மாவை ஊற்றி தீயின் தனலை மிதமாக வைத்து மூடிபோட்டு 2 நிமிடம் வேக விடவும். மறுபுறம் திருப்பி போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி போட்டு 2 நிமிடம் வேகவிடவும்.
சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி.

இனிப்பு குழிப்பணியாரங்களை பல விதமாக செய்யலாம், மைதாவிற்கு பதில் கோதுமைமாவையும் சேர்க்கலாம். அரிசி பச்சரிசியிலும் செய்யலாம். அசைவ பிரியர்கள் முட்டை சேர்த்து கொள்ளலாம். முட்டை சேர்த்தால் இன்னும் நல்ல பொங்கி வரும். குழந்தைகளுக்கு நெய் ஊற்றியும் சுடலாம். வெல்லகரைசல் கட்டியாக ஒரு நாள் முன்பே செய்து பிரிட்ஜில் வைத்து ஊற்றினால் நல்ல இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கும்னு பாத்தேலே தெரியுதுக்கா

செய்து பார்க்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு பிடித்த பணியாரம்.ரொம்ப நல்லாஇருக்கு பார்க்கவே.இன்னும் நிறைய வித்யாசமான குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அக்கா குழிபணியார சட்டி வாங்கியவுடன் முதலில் இதைதான் செய்து பார்ப்பேன்

வாழு இல்லை வாழவிடு

சூப்பர் ஜலீலாக்கா வாய் ஊறுது ...நானும் சுமி சொன்னது போல் சட்டி வாங்கியவுடன் இதைதான் செய்து பார்ப்பேன் ..வாழ்த்துக்கள்..

சுமி நலமா? சாரிபா என்னால் அரட்டைக்கு வரமுடிவதில்லை ..குழந்தைகள் மூவரும் நலமா?...

வாழு, வாழவிடு..

parakavea supara irukku....

We Are Remembered Only when We Are Needed

வாழ்த்துக்கள் ஜலீலா.நலமா இருக்கீங்களா.குடும்பத்தில் அனைவரும் நலமா.
நான் குழிப்பணியாரம் பார்த்தவுடன் நீங்களாக தான் இருப்பீர்கள் என்று நினைத்தேன். தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

Expectation lead to Disappointment

சூப்பர் ஜலீலாக்கா ,

நல்ல குறிப்பு,வாழ்த்துக்கள். ..............

ஹசீன்

வித்யாசமான குறிப்பு வாழ்த்துக்கள்.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்கள் குறிப்புக்கள் அனைத்தும் super madam !!!ப்ரவுன் அரிசி என்றால் இலங்கையின் சிவப்பரிசிங்களா?

பொடித்த பாதமா இல்லை பொடித்த பாதாமா?

நல்லதை நினை நல்லதே நடக்கும்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஆமினா

ஜலீலா

Jaleelakamal

அவஸ்தா உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி செய்து பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

சுமி இதை குழிபணியார சட்டி இல்லை என்றால் கட்டியாக கலக்கி எண்ணையிலும் டீப் ஃப்ரை செய்யலாம்.
ஜலீலா

Jaleelakamal

ருக்‌ஷானா , இதை கலவை கட்டியாக இருந்தால் வடை போண்டா மாதிரியும் சுட்டெடுக்கலாம்\

ஜலீலா

Jaleelakamal

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றீ தென்றல்
ஜலீலா

Jaleelakamal

மீனாள் நலமாக இருக்கிறேன், உஙக்ள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

ஜலீலா

Jaleelakamal

ஹசீனா உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

Jaleelakamal

உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஸ்வர்னா

Jaleelakamal

கல்பனா சாப்பாட்டுக்கு செய்யும் டயட் ப்ரவுன் அரிசி.இது பிலிப்பைனிகள் அதிகம் பயன் படுத்துவாரக்ள்.

இட்லியும் செய்தே ரொம்ப அருமையாக வந்தது, இதிலேயே காராடை குழிபணியாரமும் செய்தேன் நல்ல கிரிஸ்பியா இருந்தது

Jaleelakamal

கீதா பாதத்தை பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்.
முந்திரியும் சேர்க்கலாம்.

Jaleelakamal

நான் வாழைப்பழ்ம் இல்லாமல் செய்வேன் இது வித்தியாசமாக இருக்கு வாழ்த்துக்கள்

ஜலீலா... நல்லா இருக்கு. நாங்க இது போல் கேரட்டில் செய்வோம். வாழைப்பழம் சேர்த்து நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உடன் பதில் அளித்தமைக்கு நன்றி,நானும் செய்து பார்க்கிறேன்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பாத்திமா

Jaleelakamal

வனிதா கேரட் ஓட்ஸ் சேர்த்தும் செய்து இருக்கேன் ரொம்ப நல்ல இருக்கும்
கருத்திற்கு மிக்க நன்றி

Jaleelakamal

akka unga menu ellamai super i like it

மிக்க நன்றி கீதா ஜான்

Jaleelakamal

akka naan thedina kurippu,eppavo oru murrai sapitathu but eppadi seyanumunu theriyale ,edo kuduthetinngale saithuda vendiyathuthan thankyou

with love kalamurugan