பச்சை காய்கறி மசாலா

தேதி: January 27, 2011

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

வெண்டைகாய் - 1/4 கிலோ.
பூசணைகாய் - 1/4 கிலோ.
சுரைக்காய் - 1/4 கிலோ.
புடலங்காய் - 1/4 கி.
வெள்ளரிக்காய் - 1/4 கிலோ
பாலக்கீரை - 1
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2
தேங்காய் - 1/2
கரம் மசாலா பொடி - 1 மேஜைக் கரண்டி
கொத்துமல்லி
கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டு - சிறிதளவு


 

முதலில் காய்களை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மிளகாய், இஞ்சி,தேங்காய், பூண்டை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து உப்பு போடவும்.

சிறிது கொதித்த பின் நறுக்கிய காய்கறிகளை அதில் சேர்க்கவும்.
வெங்காயம், கொத்தமல்லியுடன் கரம் மசாலாவையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
ஆறிய பின் பரிமாறவும். இது சத்தான வைட்டமின் உணவாகும்.


எல்லா காய்களும் பச்சை நிறத்தில் இருப்பதால் இதை பெயர் இப்படி உள்ளது. கீரையை தனியாக வேகவைத்து மற்ற பொருட்களோடு அரைத்தும் செய்யலாம். கீரை பிடிக்காதவர்களுக்கு இம்மாதிரி செய்து கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்