Pls help me friends.

வணக்கம்.நான் ஆறூ மாதம் கர்ப்பமாக இருக்கிறென்.எனது எடை அதிக்கரிக்க இல்லை.முதல் 4 மாத்தில் 48 கில்லொ வாக இருந்தென்.5 மாத்தில் 47.3 கில்லொ வாக இருத்தேன்.எனது எடை அதிக்கரிக்க யார்வது வழி சொல்லுங்கள்.நான் எனது கணவருடன் தனியாக வசிக்கிறேன்

ஹேமா கார்த்திக்கு உங்களுக்கு முதலில் என் வழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்க mother horlicks வாங்கி குடிங்கப்பா.

வாழு இல்லை வாழவிடு

வாழ்த்துக்கள் ஹேமா... கர்ப்ப காலத்தில் வெயிட் குறைய கூடாது.. உங்களுக்கு அதிகமாக வாமிட் இருகிறதா? வாந்தி அதிகமாக இருந்தால் சில பேர் சாப்பிடாமல் இருந்து வெயிட் குறைந்து விடும்.. நான் கர்ப்பமாக இருந்த போது என் வெயிட் அதிகரிக்க டாக்டர் பாலில் கலந்து குடிக்க ஒரு health பவுடர் தந்தார்.. அதை தினமும் இரண்டு வேலை பாலில் கலந்து குடித்து என் வெயிட் அதிகரித்தது.. 44 கிலோவில் இருந்து 9 மாதத்தில் 56 கிலோ இருந்தேன்.. உங்கள் டாக்டரை இதை பற்றி கேட்கவும்..

கர்பமாக இருப்பவர்கள் டாக்டரின் ஆலோசனையின் பேரில்தான் உணவு உட்கொள்ளவேண்டும் ....உங்கள் உடம்பின் தன்மையை பொறுத்து என்ன சாப்பிடவேண்டும் என்று டாக்டரால்தான் சொல்லமுடியும் .எனவே நீங்கலாக சாப்பிட்டு குண்டாகி விட்டீர்கள் என்றால் குழந்தையின் எடை அதிகரிக்கும் .உடலின் அதிக எடையால் பிரசவத்தின்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு .ஆதலால் உங்கள் உடம்பு உயரம் இதற்க்கு தகுந்தவாறு உங்களுக்கு எப்படி எடை அதிகரிக்க வேண்டும் என்று டாக்டரிடமே ஆலோசனை கேளுங்கள் .அதற்க்கு ஒரு அட்டவணை உண்டு .அதைப்போல உட்கொண்டு உங்கள் பிரசவம் இனிதே அமைய வாழ்த்துக்கள் !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

குழந்தையின் எடை சரியாக இருக்கும் வரை உங்களின் எடை பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.நான் செக்கப் போன போது sister வேறொருவரிடம் சொன்ன பதில் இது.நீங்க உங்க டாக்டரிடம் கேளுங்க.நிறைய பழங்கள் சாப்பிடுங்க.

முதல் மூன்று மாதம் வாந்தியிருப்பதால் சாப்பிட முடியாது.அப்புறம் வாந்தி குறைந்துவிடுவதால் சாப்பிடமுடியும்,மூன்று வேளை தான் சாப்பிட வேண்டும் எனறில்லாமல் கொஞ்ச நேரத்திற்கு ஒருதடவை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம்.பழங்கள்,ட்ரை ப்ருட்ஸ்,பால் முட்டை சாப்பிடலாம்.டாக்டரிடமும் ஆலோசனை கேளுங்கள்.
தலைப்பை கேள்விக்கு தகுந்தாற் போல் மாற்றுங்கள்,ப்ளீஸ்.

5 மாசம்தானே மசக்கை வாமிட் காரணத்தினால் இப்படி குறையதான் செய்யும் இனி அதிகரிக்கும் மாசம் போக போக....பயப்பட வேண்டாம் இது நார்மலே..எனக்கும் இப்படிதான் இருந்தது. மாசம் போன பின் அதிகரிக்க வில்லை என்றால்தான் பிராப்லம் டாக்டரை அனுகனும்

அன்புடன்,
மர்ழியா நூஹு

பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.நான் இன்று தான் செக்கப் சென்றேன்.டாக்டர் இனிமேல் எடை அதிகரிக்கும்.அதனால் பயப்பட வேண்டாம் என்று கூறினார்.எனது ப்ளாட் அருகில் எனக்கு நண்பர்கள் இல்லை.அதனால் அறுசுவை தான் என்னுடைய பொழுதுப்போக்காக உள்ளது.

Never pain,never gain

மேலும் சில பதிவுகள்