அலங்காரத் தட்டு - 2

தேதி: January 28, 2011

5
Average: 4.1 (15 votes)

 

ஃப்ளாஸ்டிக் தட்டு
சைனிங் பேப்பர் - கோல்டு, பச்சைநிறம்
பெவிக்கால்
சம்கி - க்ரீன், வைலெட்
கோல்டுநிற லேஸ்
ஸ்பாஞ்ச் ஷீட் - மஞ்சள், சிவப்புநிறம்
கத்தரிக்கோல்

 

அலங்காரத்தட்டு செய்வதற்கு தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
ஃப்ளாஸ்டிக் தட்டின் உட்புறம் அளவுக்கு கோல்டுநிற சைனிங் பேப்பரை நறுக்கி பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
அந்த தட்டின் அகலப்பக்கத்திற்கு க்ரீன் கலர் சைனிங் பேப்பரை இருப்புறங்களிலும் ஒட்டிக் கொள்ளவும்.
வலது, இடதுப்பக்கத்திலும் க்ரீன் கலர் பேப்பரை ஒட்டிக்கொள்ளவும்.
மஞ்சள்நிற ஸ்பாஞ்ச் ஷீட்டை ஒன்பது இதழ் கொண்ட பூப்போல் நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு ஸ்பாஞ்ச் ஷீட்டை அந்த பூவின் உட்புற அளவுக்கு வட்டமாக நறுக்கி வைக்கவும். தட்டின் நடுவில் மஞ்சள்நிற பூவை பெவிக்கால் தடவி ஒட்டி விட்டு, அதன் மேல் சிவப்புநிற ஸ்பாஞ்சை ஒட்டிக் கொள்ளவும்.
அந்த பூவின் ஓரங்கள் சுற்றிலும் க்ரீன் கலர் சம்கியை ஒட்டவும்.
இதழ்களின் இடைவெளியில் வைலெட் சம்கியை நான்கு என்ற எண்ணிக்கையில் இடைவெளிவிட்டு ஒட்டவும்.
தட்டின் வெளிப்புறத்தின் அகல அளவுக்கு மட்டும் லேஸை நறுக்கி வைக்கவும். இந்த லேஸை தட்டின் மேலும், கீழும் பெவிக்கால் தடவி ஒட்டி காயவிடவும்.
அலங்காரத்தட்டு தயார். வீட்டு விசேஷத்தினங்களில் இந்த தட்டில் சந்தனம், குங்குமம் வைத்து விருந்தினர்களை வரவேற்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

your craft very nice. simply super.i will try.keep it up. with regards.g.gomathi.

அறுசுவை டீம் அலங்கார தட்டு சூப்பர் ..... ரொம்ப அழகாயிருக்கு வாழ்த்துக்கள்.....

உன்னை போல பிறரையும் நேசி.

ரொம்ப அழகாயிருக்கு இந்த தட்டு.
வாழ்த்துக்கள்.....அறுசுவை டீம்....

ஹசீன்

பத்மா, ரேவதி... ரொம்ப சூப்பர். அடுத்த வெர்ஷன் முதல் வெர்ஷனை விட சூப்பரா வந்திருக்கு. நல்ல க்ராண்ட் லுக். கியூட். கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்&சிம்பிள் அழகாயிருக்கு வாழ்த்துக்கள்..நன்றி

வாழு, வாழவிடு..

அழாகாக இருக்கு.

சதாலட்சுமி

பத்மா & ரேவதி,
செய்த தட்டு போலவே இல்லை. ரெடிமேட் ஆக வாங்கினது மாதிரி இருக்கு. அருமை. பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta