இறால் கிழங்கு பொரியல்

தேதி: May 2, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் - 250 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 4 அல்லது 5 டீஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்


 

முதலில் இறாலை சுத்தம் செய்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு சீரகுத்தூள், உப்பு போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை ஒரு இன்ச் அளவில் கட்டம் கட்டமாக வெட்டிக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அவற்றை இறாலோடு சேர்த்து ஒரு வாணலியில் போட்டு, 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
சுமார் 5 நிமிடம் கழித்து, கிழங்கு வெந்துவிட்டதை உறுதி செய்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.
இது ரசம், சாம்பார் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.


இறால் நீர் சத்துள்ள பொருளாக இருப்பதால் வேக வைக்கும்போது அதிகம் நீர் சேர்க்கக்கூடாது. காரம் அதிகம் விரும்பாதவர்கள் அதில் சேர்க்கும் பச்சை மிளகாய் அல்லது மிளகாய்தூளின் அளவை தேவைக்கு குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்