தக்காளி ரசம்

தேதி: January 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (11 votes)

 

பெரியதக்காளி - இரண்டு
ஒன்றிரண்டாய் தட்டிக்கொள்ள:
மிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
பூண்டு - மூன்று பல்
சின்ன வெங்காயம் - ஆறு
கொத்தமல்லி இழை - கொஞ்சம்
தாளிக்க:
காய்ந்த மிளகாய் - ஒன்று
தாளிக்க - எண்ணெய்
உப்பு - தேவையானளவு


 

முதலில் தக்காளியை நீரில் கொதிக்க வைத்து தோல் நீக்கி தயாராக வைக்கவும்.
அடுத்து தட்டிக் கொள்ள வேண்டிய பொருட்களை தட்டி வைக்கவும்.
ஒரு கோப்பையில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் தக்காளி, உப்பு போட்டு நன்கு தக்காளியை பிசைந்து வைத்துக் கொள்ளவும்
சட்டியில் எண்ணெய் ஊற்றி தட்டிய பொருட்களையும் போட்டு தாளித்து கொட்டி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைக்கவும்..
சூடான தக்காளி ரசம் ரெடி. மேலே மல்லி தழை தூவவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ருக்ஸானா,ரசம் ரொம்ப நல்லா இருக்கு.
நாங்களும் இப்படிதான் செய்வோம்.ஆனால் புளி சேர்ப்போம்.
வெங்காயம் சேர்ப்பதில்லை.இப்படியும் செய்துப்பார்கிறேன்.
வாழ்த்துக்கள்.

ஹசீன்

அஸ்ஸலாமு அலைக்கும் ருக்சானா...,
நல்லா பார்க்க கலர்ஃபுல்லா இருக்கு மா...
நானும் இப்படித்தான் செய்வேன்.
ஆனால் தக்காளியை தோலுரிக்க மாட்டேன்.அது மட்டுமே வித்தியாசம்.
வாழ்த்துக்கள் ருக்சானா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு என் நன்றிகள் ..நன்றி

வாழு, வாழவிடு..

நலமா ஹசினா? குழந்தைகள் நலமா? என்ன இப்படி மழை ஜித்தாவில் நீங்கள் இருக்கும் பக்கம் எப்படி .. இப்போ எப்படிதண்ணீரெல்லாம் வடிந்து விட்டதா நீங்கள் நலம்தானே...
நான் புளி சேர்க்கமாட்டேன் தக்காளி புளிப்பே போதும் செய்து பாருங்கள் நன்றாக இருக்கும் ..நன்றி உங்கள் வாழ்த்துக்கு நன்றி...

வாழு, வாழவிடு..

அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா..
தக்காளியை தோலுரித்து போட்டால் ரசம் நல்ல கலர் கிடைக்கும் அப்சரா அதனால் அப்படி போடுவேன் ..
எங்கு போனீர்கள் அறுசுவைக்கு ஏன் அடிக்கடி வருவதில்லை என் யாஹூமெஸஞ்சர் ரிப்பேராக இருக்கு அதான் சாட்டுக்கு வர முடியலை ..
டைப் பன்னுவது ஒன்றும் வரமாட்டேங்குது உங்களுக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா தெரிந்தால் சொல்லவும் ..உங்கள் வாழ்த்துக்கு நன்றி...

வாழு, வாழவிடு..

ருக்சானா மிகவும் சுலபமான குறிப்பு.வாழ்த்துக்கள்.உடனே செய்யலாம்.மஞ்சள் பொடி போட வேண்டாமா ருக்சானா.தவறாக நினைக்க வேண்டாம் தோணுச்சு கேட்டேன்.

Expectation lead to Disappointment

ஆமாம் ருக்சானா..., உங்களை யாஹூ மெசெஞ்சரில் பார்க்கமுடிவதில்லைதான்.
இப்ப அதனுடைய புது வர்ஷன் இருக்கு 10.0ன்னு அதை டவுன்லோட் பண்ணி பாருங்க... எனக்கும் கொஞ்ச நாளாகவே அப்படி இருந்தது... இதைதான் டவுன்லோட் செய்தேன்.ஆனாலும் இன்னைக்கு வரை ஏனோ... வாய்ஸ் மற்றும் வீடியோ சேட் செய்ய முடியவில்லை.அதற்க்கு எவ்வளவோ முயன்றும் தோல்விதான்....
உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறேன்.முடிந்த போது போய் படிக்கவும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நன்றி உங்கள் வாழ்த்துக்கு . நீங்கள் நலமா குட்டிமகன் விக்னேஸ் நலமா?
மஞ்சள் பொடி வேண்டாம் மீனாள் ஏனென்றால் எப்பொழுதும் வைக்கும் ரசத்துக்கும் இதுக்கும் வித்தியாசம் வேண்டுமே அதன் ஒரிஜினல் கலர்தான் தக்காளி ரசத்துக்கு..
அதான் சேர்க்கலை வேண்டுமென்றால் நீங்கள் சேருங்கள்
சந்தேகம் கேட்பதர்கெல்லாம் நான் தவறாக நினைக்கவில்லை.. மீனாள் நன்றி உங்கள் பதிவிர்க்கு....

வாழு, வாழவிடு..

உடனே பதிவிட்டதர்க்கு என் நன்றிகள் அப்சரா.ஆஃப்லைன் மெஸஜ் வந்தால் கூட தெரியமாட்டேங்குது அப்சரா நானும் யாஹூ மெ பதினொன்று டவுன்லோட் பன்னிதான் இருக்கேன் என்ன பிரச்சனைன்னு தெரியலை பார்ப்போம் அப்சரா விரைவில் சரி செய்கிறேன்..

வாழு, வாழவிடு..

சலாம் ருக்சானா நான் புளி சேர்த்து செய்வேன் இப்படியும் செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள்டா

ருக்சனா.... பருப்பு தண்ணீரே இல்லாம வெறும் தக்காளியில் ரசம்.... வித்தியாசமா இருக்கு. சூப்பரா கலரா இருக்கு. இன்றே செய்துடறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Salam. Thanx for ur simple recipie. I'll try Insha Allah.
Ummu Zain.

அன்புடன்,
ஹலீமா

today i try this tomato rasam its really very nice thank u

i

நான் அறுசுவைக்கு புதிது,பார்க்கும் போதே சூப்பரா இருக்கு,நாளைக்கே செய்து விடுகிறேன்.எளிமையான குறிப்புக்கு நன்றி,,,,,, வாழ்த்துக்கள்! கல்பனா வெங்கடேசன் :)

உங்கள் பதிவிர்க்கும் வாழ்த்துக்கும் நன்றி ஃபாத்திமாம்மா நன்றி.
வனிதாக்கா உங்களின் பதிவிற்க்கும் நன்றி செய்து பாருங்கள் ரொம்ப ஈசியான ரசம் ..நன்றி
உம்மு ஃபர்சானா செய்து பார்த்து பதிவிட்ட உங்களின் பதிவிர்க்கும் என் நன்றிகள் நன்றி
கல்பனாவெங்கடேசன் உங்கள் பதிவிர்க்கும் என் நன்றிகள் நன்றி...

வாழு, வாழவிடு..