மில்கி ப்ரெட்

தேதி: January 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் துண்டுகள் - 4
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
பட்டர் - 1 ஸ்பூன்
சாஃப்ரான் - 1 பின்ச்
உப்பு - 1 பின்ச்
பிஸ்தா,முந்திரி பருப்புகள் - 1/2 கப் நறுக்கியது


 

முதலில் பாலை நன்கு பாதியாக வற்றும் வரை காய்ச்சவும் அல்லது பாலின் அளவை குறைத்து கன்டென்ஸ்ட் மில்க் சேர்க்கலாம்.
பின் காய்ச்சிய பாலில் சர்க்கரை,உப்பு,பட்டர்,சாஃப்ரான் சேர்த்து கரைக்கவும்
பின்பு ப்ரெட் துண்டுகளை முழுவதாகவோ அல்லது நாலாக நறுக்கியோ எண்ணையில் பொரித்தெடுக்கவும்
காய்ச்சிய பாலை ஒரு பரந்த பேனில் வைத்து வறுத்த ப்ரெட் துண்டுகளை அதன் மேல் பரவலாக வைத்து பிஸ்தா முந்திரி பருப்புகளையும் தூவி தீயை கூட்டி 5 நிமிடம் கொதிக்க விடவும்
பின்பு தியை அணைத்து விட்டு சூடாறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென ப்ரெட் உடையாமல் எடுத்து பரிமாறவும்.
சுவையான மில்கி ப்ரெட் ரெடி


விருந்தினர்களுக்கு தயாரிக்க கூடிய எளிமையாக செய்ய கூடிய ரிச்சான டெசெர்ட் இது

மேலும் சில குறிப்புகள்