வெஜ் ஸ்ப்ரிங் ரோல்

தேதி: February 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (12 votes)

 

கேரட்
பீன்ஸ்
நூடுல்ஸ்
பட்டாணி(வேக வைத்தது)
கரம் மசாலா
உப்பு
மல்லி தழை
மாவு கரைக்க:
கார்ன் ப்ளார் மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
வெண்ணெய் - சிறிது


 

கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காரட், பீன்ஸ், பட்டாணி, சேர்த்து வதக்கவும். அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா சேர்க்கவும்.
நூடுல்ஸை கொதிக்கும் நீரில் வேக வைத்து சாதாரண தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவும். காய்கறி கலவையுடன், இந்த நூடுல்ஸ் போடவும்.
நூடுல்ஸ் பேக்கில் கொடுக்கப்பட்டுள்ள மசாலாவையும் சேர்த்து கிளறவும்.
நூடுல்ஸ் கலவையை ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் கார்ன் ப்ளார் மாவு, மைதா மாவு, வெண்ணெய், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொஞ்சம் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
தோசை கல்லில் தோசை ஊற்றி எடுத்து வைக்கவும். அதன் மேல் நூடுல்ஸ் கலவையை நடுவில் வைத்து, ரோல் செய்து இரு புறமும் மடித்து கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த ரோலை எடுத்து போடவும். நன்கு பொரிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுகி
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குடா. டிரை பண்ணி பார்க்குரேன். வாழ்த்துக்கள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

என்னது இது உனது மவ்னத்துக்கு பின்னாடி நிறைய விஷயம் இருக்கு போலிருக்கே....
தைரியமா உங்க வீட்டுக்கு நாங்க வரலாம்..என் பையன நீ இப்படி கொடுத்தே அசத்தேருவ போலிருக்கே ......இன்னும் அமர்களமான குறிப்புகளா கொடுக்க வாழ்த்துக்கள் !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என்னம்மா இப்படி சமையலில் புகுந்து கொள்வதால் தான் அரட்டை பக்கம் சரியாக வருவதில்லையா? எப்படியோ... எங்களுக்கு சூப்பரா ஒரு டிஷ் கொடுத்து இருக்க.. எனது விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன்.. பார்க்கும் போதே சாப்ட ஆவள தூண்டுது... டைம் கிடைக்கும் பொது செய்ஞ்சுட வேண்டியதுதான்...

ரொம்ப அருமையான குறிப்பு சுகி. வாழ்த்துக்கள். மாவை தோசையாக வார்த்து மடிக்கும் போது ஓரங்கள் பிரிந்து வந்திடாமல் பார்த்துக்கனும் இல்லையா சுகி. அப்படி பொரிக்கும் போது ஓரம் பிரிந்துவிட்டால் கஷ்டம் இல்லையா, அப்படி பிரியாமல் இருக்க எண்ணெய் தொட்டு ஒட்ட வைக்க வேண்டுமா இல்லை அப்படியே மடித்து போட்டால் போதுமா என்று மட்டும் சொல்லுங்க சுகி.

அன்புடன்
பவித்ரா

சூப்பர் சுகந்தின்னு பெயர் சூட்டலாம் போலிருக்கே வாழ்த்துக்கள் சுகந்தி..

வாழு, வாழவிடு..

veg spring roll is looking step by step very colourful .keep it up..i will show your recipe to my kid. she like noodles very much. i will try your recipe.with regards.g.gomathi.

சுகி

ரொம்ப நல்லா இருக்கு... கண்டிப்பா செய்து பார்க்கறேன்..;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுகி அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்...:-)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் சுகந்தி...,சூப்பரான குறிப்பு கொடுத்திருக்கீங்க...
பார்க்கும் போதே நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் சுகி நல்ல குறிப்பு...விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு....கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்....வாழ்த்துக்கள் சுகி...

சுகி, வெஜ் ஸ்ப்ரிங்க் ரோல் சூப்பர் பா. முற்றிலும் வித்தியாசமான குறிப்பு. காய்கறிகளுடன் நூடுல்ஸ் சேர்த்தது, மேல் மாவை தோசைமாவு பதத்தில் கரைத்தது இப்போது தான் கேள்விபடும் முறை சுகி. கண்டிப்பா குட்டிங்களுக்கு செய்து தந்துட்டு அவங்க என்ன சொன்னாங்கன்னு அப்புறமா உனக்கு சொல்றேன். வாழ்த்துக்கள் பா. தொடர்ந்து அசத்திட்டே இரு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுகி சூப்பர் குறிப்பு என் விருப்பபட்டியில் சேர்த்தாச்சு வாழ்த்துக்கள்

சூப்பர இருக்கு சுகி.அருமையா இருக்கு.

பழைய பதிவு[களை பார்க்க என்ன செய்ய வேண்டும்]ஒன்றில் அறுவை சிகிச்சை செய்யும் போது டாக்டரின் கையை குழந்தை பிடித்துகொண்டதாக படித்தேன் அந்த படங்களை பார்க்க [முடியவில்லை]என்ன செய்யனும் ப்ளிஸ் தோழிகள் சொல்லுங்க

சுகந்தி ரொம்ப அருமையா இருந்துச்சு... இப்ப தான் செய்துட்டு வரேன்... என் மகன் விரும்பி சாப்பிட்டான்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு ரொம்ப நன்றி!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மஞ்சுளா - முதல் ஆளா வந்து பின்னூட்டம் தந்ததுக்கு ரொம்ப நன்றி, கண்டிப்பா பண்ணி பாருங்க.

அஸ்வதா - என்ன அஸ் இப்படி சொல்லிடீங்க, கண்டிப்பா ரொம்ப தைரியமா வரலாம்..... நாங்களும் சமையல் பண்ணுவோம் பா உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

//என்னம்மா இப்படி சமையலில் புகுந்து கொள்வதால் தான் அரட்டை பக்கம் சரியாக வருவதில்லையா?/// அப்படி எல்லாம் இல்ல மா, நம்ம அரட்டைக்கு வராம எங்க போக போறேன். கண்டிப்பா உங்க குட்டி க்கு பண்ணி குடுங்க. சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

///எண்ணெய் தொட்டு ஒட்ட வைக்க வேண்டுமா/// - எண்ணெய் தொட்டு ஓட்டினால், ஒட்டுமா ன்னு தெரியல மா. நான், கலக்கின மாவுலையே எல்லா பக்கமும் தேய்த்து ஓட்டினேன் மா, அந்த போட்டோ அனுப்ப மறந்துட்டேன். நல்லவேள நீ கேட்டு தெளிவு படுத்தீட்ட. தேங்க்ஸ் மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ருக்ச்சனா - இன்னும் பட்டம் குடுக்கற அளவுக்கு எல்லாம் வளருல மா, நீங்க எல்லாம் இருக்கும் போது, நாங்க எல்லாம் கத்து குட்டி தான்

கோமதி - உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி, உங்க குட்டி பொண்ணு க்கு புடுச்சுதா? ரொம்ப சந்தோசம். சீக்கரம் பண்ணி குடுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரம்யா - இப்ப தான் நீங்க முதல் முறையா பின்னூட்டம் தரீங்க, ரொம்ப சந்தோசம்...

ஸ்வர்ணா - உங்க வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அப்சரா அக்கா, உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி, பண்ணி பாத்துட்டு சொல்லுங்க..

சுமதி - உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.....செய்து பாத்துட்டு சொல்லுங்க..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கல்ப்ஸ் - இந்த முறையில் குழந்தைகள் விருப்ப பட்டு சாப்பிடுவாங்க, எப்படி வந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க... ரொம்ப நன்றி ...

பாத்திமா - அம்மா, உங்க பின்னூட்டம் பாத்து ரொம்ப சந்தோசம்.. நன்றி மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. நீங்க கேட்ட லிங்க் இதுவான்னு பாருங்க. http://www.michaelclancy.com/story.html

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அதுக்குள்ள பண்ணி பாத்துடீங்களா? ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்க பையனுக்கு புடுச்சுதே, அது தான் முக்கியம். ரொம்ப நன்றி ஆமி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அருமையான குரிப்பு சூப்பர் நூடுல்ஸ் செய்து தோசை ஊற்றி அதர்க்கு நடுவில் வைத்து பொரித்து எடுக்கனும் அழகான குரிப்பு மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பர்

அன்புடன்
ஸ்ரீ

வித்தியாசமான குறிப்பு கொடுத்திருக்கீங்க சுகந்தி. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகந்தி நலமா ?ரொம்ப நல்ல குறிப்பு பார்க்கும் போதே சூப்பரா இருக்கு செய்து
பார்த்து சொல்லுறேன் பா விருப்ப பட்டியலில் சேர்துடேன்

ஸ்ரீ - உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி...

வனி - உங்க வாழ்த்துக்கு நன்றி!!

நஸ் ரீன் - நான் நல்லா இருக்கேன், நீங்க நலமா? கண்டிப்பா பண்ணி பாத்துட்டு சொல்லுங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வெண்ணைக்கு பதில் எண்ணெயோ நெய்யோ உபயோகிக்கலாமா, கொஞ்சம் சொல்லுங்க பா.

இதுவும் கடந்து போகும்.

எண்ணெய் வேண்டாம், தாராளமாக நெய் உபயோகிக்கலாம்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உடனே பதில் கொடுத்துடீங்களா, நன்றி :) செய்து பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன்.

இதுவும் கடந்து போகும்.

உள்ளீருக்கிற ஸ்டஃபிங் மட்டும் நான் உருளை, கோஸ், பெல் பெப்பர் போட்டு கறி மசால், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு பண்ணினேன். ஏன்னா பார்ட்டிக்கு நான் நூடுல்ஸ், பச்சடி, சாதத்தில நீங்க சொன்ன பொருள் அதிகமா யூஸ் பண்ணியிருந்தேன். அதனால இதுல ரிபீட் ஆக வேண்டாம்னு சேர்க்கல. ஆனா பார்ட்டி வீட்டிலதான்னு டிசைட் ஆனதுமே இந்த ரெஸிப்பிதான் பண்ணனும்னு முதல்லேயே முடிவு பண்ணிட்டேன். நல்லா கிரிஸ்பியா சுவையா இருந்ததுபா;-) ரொம்ப ஈஸியா சீக்கிரமா பண்ணினேன் ரொம்ப தேங்ஸ்;-))

Don't Worry Be Happy.