ரிவர்ஸ் க்ளாஸ் பெயிண்டிங்

தேதி: February 5, 2011

4
Average: 4 (9 votes)

 

கண்ணாடி பாத்திரம் அல்லது ப்ளெயின் கண்ணாடி - ஒன்று
க்ளாஸ் பெயிண்ட்ஸ் - பச்சை, சிவப்பு
அவுட் லைனர் - ஒன்று
பஞ்சு மற்றும் தின்னர்
பெயிண்ட் ப்ரெஷ்

 

கண்ணாடியை நன்றாக கழுவி துடைத்து காய வைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
கண்ணாடி அல்லது பாத்திரத்தின் பின் பக்கம் செர்ரிப்பழம் மற்றும் இலைகள் உள்ள டிசைனை அவுட்லைனர் கொண்டு வரைந்து கொள்ளவும். ஏதும் தவறாக வரைந்து விட்டால் பஞ்சில் தின்னர் கொண்டு துடைத்து சரி செய்யவும்.
இது 2 மணி நேரம் காய வேண்டும். காய்ந்ததும் செர்ரிப்பழத்துக்கு சிவப்பு நிறம் பெயிண்ட்டை சில துளிகள் விட்டு ப்ரெஷ் கொண்டு பரப்பி விடவும். நிறம் பரப்பும் போது அவுட்லைனருக்கு வெளியே வந்தாலும் தின்னர் கொண்டு சரி செய்யவும்.
இது ஒன்று போல் பரவியதும் ஒரு ஓரம் மட்டும் மீண்டும் சிவப்பு நிறத்தை நேரடியாக விடவும். இந்த இடம் மட்டும் மற்ற இடத்தை விட டார்க்காக தெரியும். ஷேட் கொடுத்தது போல் இருக்கும்.
இதே போல் இலைகளுக்கு பச்சை நிறம் இட்டு ப்ரெஷ் கொண்டு பரப்பி, பின் ஒரு ஓரம் மட்டும் டார்க் ஷேட் கொடுக்கவும்.
இவை அனைத்தும் 24 மணி நேரத்துக்கும் மேல் நன்றாக காய வேண்டும். இப்போது கண்ணாடியை முன் பக்கம் திருப்பினால் அழகான பெயிண்டிங் செய்த க்ளாஸ் தயார். வீட்டில் ப்ளெயினாக இருக்கும் கண்ணாடி பாத்திரங்களில் இது போல் பெயிண்டிங் செய்தால் இன்னும் அழகு கூடும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

very simple and beautiful hand work....

நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!

very simple and beautiful hand work....

நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!

வனிக்கா அழகா இருக்கு...ரொம்ப எளிமையாவும் இருக்கு...வாழ்த்துக்கள் வனிக்கா...

Reverse glass painting super. it lookvery beautiful.keep it up .with .regards.g.gomathi.

எளிமையும் அழுகும் ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குறிப்பை இத்தனை வேகமாக வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி ;)

வாணி... மிக்க நன்றி.

சுமதி... மிக்க நன்றி. சுலபமா செய்யலாம், செய்து பாருங்க.

கோமதி... ரொம்ப நன்றி :)

ஆமினா... ரொம்ப நன்றிமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
கிளாஸ் பெயிண்டிங் சூப்பர். நீங்க விளக்கி இருக்கும் விதமும்,டிப்ஸ்களும் ரொம்ப அருமை.இன்னும் எத்தனை கைவேலைகள் கற்று வச்சு இருக்கீங்க? வாழ்த்துக்கள்.

ஹர்ஷா... மிக்க நன்றி. எனக்கே ஒன்னும் தெரியாது, என்னை இப்படி கேட்டா நான் என்ன சொல்ல. இமா, செண்பகா'வ எல்லாம் கேட்க வேண்டிய கேள்வி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரமாதம், ரொம்ப சிம்பிள் ஹ கியூட்டா இருக்கு. வாழ்த்துக்கள்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனிக்கா இன்னும் என்னஎன்ன கலையெல்லாம் கைவசம் இருக்கு
சூப்பர் தெளிவா செய்து காட்டியிருக்கிங்க வாழ்த்துக்கள் ...

வாழு, வாழவிடு..

சுகந்தி, ருக்சனா... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி ரிவர்ஸ் க்ளாஸ் பெயிண்டிங் சிம்பிள் டிசைன்ல அழகா இருக்கு. க்ளாஸ் பெயிண்டிங்க்கு, இதுக்கும் என்ன வித்தியாசம்.

வினோஜா... மிக்க நன்றி. க்ளாஸ் பெயிண்டிங்கில் பல வகை உண்டு. சாதாரண க்ளாஸ் பெயிண்டிங் கண்ணாடியின் மேல் பக்கம் வரைந்து நிறமும் தீட்டுவோம். ரிவர்ஸ் க்ளாஸ் பெயிண்டிங்கில் கண்ணாடியின் பின் பக்கம் வரைவோம். அதனால் படத்தின் மிரர் இமேஜை முன் பக்கம் வைத்து கண்ணாடியின் பின் பக்கம் வரைய வேண்டும். இந்த முறையில் முன் பக்கம் கிடைக்கும் இமேஜ் உங்களுக்கு தெளிவாக இருக்கும். தூசு படிந்தாலும் படத்தை பாதிக்காது, அப்படியே ப்ரேம் செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்ளாஸ் பெயிண்டிங்கல நிறைய இருக்கா. நான் கேள்விப்பட்டது க்ளாஸ், ரிவர்ஸ் க்ளாஸ் பெயிண்டிங் மட்டும் தான். ஆனா ரிவர்ஸ் பெயிண்டிங் உங்க செய்முறையை பார்த்துதான் கத்துக்கிட்டேன். இதுமுன்னாடி கைவினை பகுதில க்ளாஸ் பெயிண்டிங் 2
அதில செய்முறை இப்படிதான் இருந்துச்சு. பெயிண்ட் பண்ணி திருப்பி வைச்சு ப்ரேம் பண்ணற மாதிரி சொல்லி இருந்தாங்க. அதான் ஒரு சந்தேகத்துல கேட்டேன்.
உங்களுக்கு காபி பெயிண்டிங் தெரியுமா. தெரிந்தா சொல்லி தாருங்கள்.

வினோஜா... முன்பே அறுசுவையில் இருக்கா?? நான் பார்க்கலங்க. பார்க்கிரேன், என்ன முறை சொல்லி இருக்காங்கன்னு. காபி பெயிண்டிங் கண்டிப்பா ஒரு முறை செய்து அனுப்பறேன். அந்த அளவுக்கு சூப்பராலாம் பண்ண தெரியாது, சுமாரா தான் இருக்கும் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு வனி. எனக்கும் ஒன்று பண்ணிக் கொடுத்து இருக்கலாம்ல. ;((

‍- இமா க்றிஸ்

இமா... மிக்க நன்றி. பண்ணி கொடுத்திருக்கலாம், என்னை யாராவது கூப்பிட்டு ப்ளான் சொல்லி இருந்தா... ;( என்கிட்ட கிளம்புறேன்னு கூட சொல்லாம ஓடிட்டாங்க இமா. அப்பறம் நான் என்ன செய்யுறது??? ஆசைப்பட்ட எதுவுமே செய்ய முடியல. எல்லாரும் தேன் மிட்டாய் வாங்கி தந்தாங்க, நான் வாங்கி வெச்சதை கூட வாங்கிக்காம ஓடிட்டாங்க. அந்த சோகத்தை மீண்டும் கேட்டு வருத்தப்பட வைக்காதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta