வஞ்சிரமீன் போண்டா

தேதி: May 2, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வஞ்சிர மீன் - 200 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 10
கறிவேப்பிலை - 5 கொத்து
பூண்டு - 10 பல்
பெருஞ்சீரகத்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
ஆப்ப சோடா - ஒரு ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்


 

முதலில் மீன் துண்டுகளை சிறிது மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
வேகவைத்த மீனில் தண்ணீர் இருந்தால் அதை தனியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மீனின் முட்களை நீக்கி அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட வேண்டும்.
மேலும் பெருஞ்சீரகத்தூள், ஆப்ப சோடா, மீதி உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவேண்டும்.
கலவை உருண்டை போடும் பதத்தில் இல்லையென்றால் மட்டும் ஏற்கனவே வடித்து வைத்த தண்ணீரை தேவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சூடான வஞ்சிரமீன் போண்டா தயார். இது மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது.


டின் மீன் கிடைக்கும் வாய்ப்பிருந்தால் அதை பயன்படுத்துவதுதான் சுலபம். ஏனெனில் அது வேக வைக்கப்பட்டு, முள் நீக்கப்பட்டிருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதை வஞ்சிரமீனில் மட்டும்தான் செய்யமுடியுமா அல்லது வேற மீனிலும் செய்யமுடியுமா. வேற எந்த மீன் பொருத்தமா இருக்கும்?

aanisha,
இந்த வஞ்சிர மீன் போண்டா, மற்ற மீன்களிலும் செய்யலாம்.ஆனால் அதிகம் முள் இல்லாத, சதைப்பற்றான மீனாக இருக்க வேண்டும். இருப்பினும், வஞ்சிர மீனில்தான் ருசி அதிகம்! அதனால் இதை நெய் மீன் என்று கூட சொல்வார்கள்.