சிக்கன் பிரியாணி சமையல் குறிப்பு - படங்களுடன் - 17978 | அறுசுவை


சிக்கன் பிரியாணி

வழங்கியவர் : amina mohammed
தேதி : திங்கள், 07/02/2011 - 12:56
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.46875
32 votes
Your rating: None

 

 • பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ (4 டம்ளர்)
 • சிக்கன் - ஒரு கிலோ
 • தயிர் - ஒரு கப்
 • இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
 • முந்திரி - 20
 • பச்சை மிளகாய் - 8
 • எலுமிச்சை - 2
 • தரமான மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
 • நாட்டு தக்காளி - 8
 • பெரிய வெங்காயம் - 4
 • புதினா - ஒரு கப்
 • கொத்தமல்லி - ஒரு கப்
 • நெய் - 100 கிராம்
 • பிரியாணி மசாலா பொடி - ஒரு பாக்கெட்

 

தக்காளியை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புதினாவும், கொத்தமல்லியும் காம்புடன் சேர்த்து நடுத்தர அளவில் நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

அதில் வெங்காயம் மற்றும் உப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்

பின் புதினா, கொத்தமல்லி சேர்த்து சுருளும் வரை வதக்கவும்

தக்காளி சேர்த்து உடைக்காமல் மெதுவாக கிளறவும். பின் மிளகாய் தூள், பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் தயிர் சேர்த்து கிளறி பின்னர் சிக்கனை சேர்த்து மசாலா பிடிக்கும் வரை வைக்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொதி வந்ததும் கழுவி சுத்தம் செய்த அரிசியை சேர்க்கவும்.

நீர் வற்றும் சமயத்தில் எலுமிச்சை சாறை ஊற்றி ஒரு முறை கவனமாக அரிசி உடையாவண்ணம் கிளறி தம்மில் போடவும். தம்மில் போட பாத்திரத்தின் அடியில் உபயோகமற்ற பழைய தோசைக்கல்லையும் பாத்திரத்தினை மூடி அதன் மேல் கனமான பாத்திரத்தையும் வைத்து சிறுதீயில் 15 நிமிடம் வைக்கவும்.

சுவையான பிரியாணி தயார். சிக்கன் வறுவல், வெங்காய ரைத்தா, தாளிச்சா, எள்ளுகத்தரிக்காய் கிரேவியுடன் பரிமாறலாம்.ஆமினா

சூப்பர் சிக்கன் பிரியாணி.எனக்கு ஒரு பார்சல்.
படங்கள் தெளிவாக இருக்கு வாழ்த்துக்கள்....

வாழு, வாழவிடு..

சூப்பர்

சூப்பரா இருக்கு தோழி இதற்க்கு பட்டை ஏலம் சேர்க்க வேண்டாமா.எனக்கு பழைய பதிவுகளை பார்க்க வேண்டும்.அறுசுவையில் லனைனில் இருக்கும்தோழிகளை தெரிய என்ன செய்ய வேண்டும்.யாரவது தோழி விபரம் சொல்லுங்கள்.ப்ளீஸ்ஸ்ஸ்

ஆமினா

ஆமினா எப்படி இருக்கீங்க.சூப்பர் பா.ரொம்ப நல்லா இருக்குது.1கிலோ என்றால் 5 டம்பளர் தானே. சோம்பு,பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்க்க வேண்டாமா.எலுமிச்சை பழம் 2 பழம் போடணுமா.சாரி பார் நிறைய டவுட்.

Expectation lead to Disappointment

ஆமினா

சுவையான குறிப்பு கொடுத்திருக்கீங்க ஆமினா... வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமீனா.

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமீனா.
எப்படி இருக்கீங்க
சிக்கன் பிரியாணிக்கு 4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதுன்னு சொல்லிருக்கிங்க அந்த அளவு என்ன கிராம் என்று சொல்லுங்கள் நானும் செய்து பார்க்க வேண்டும்

ஆமினா வாழ்த்துக்கள்,

ஆமினா வாழ்த்துக்கள், குறிப்பு ரெம்ப அருமையாக இருக்கு பா, உடனே செய்து பார்க்கனும் போல இருக்கு, வெள்ளிக்கிழமை செய்து பார்த்துட்டு. பிண்ணோட்டம் தருகிறேன்.

மிக்க நன்றி

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றிகள் பல

@ருக்‌ஷானா
அப்பப்ப அத்திபூத்தாற் போல படம் தெளிவா விழுகுது ;) மிக்க நன்றி ருக்‌ஷானா
பார்சல் எதுக்கு வீட்டுக்கு வாங்க... விருந்து வச்சு அனுப்புறேன்

@பெரோசா
பட்டை ஏலக்காய் உட்பட 15க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏற்கனவே அந்த பிரியாணி மசாலா மிக்ஸில் இருக்கும் பா. சோ அதெல்லாம் தேவையில்ல.

லைனில் இருக்கும் தோழிகள் தெரியாது பெரோசா.. நீங்க யார்கிட்டையாவது பேசணும்னா அரட்டைக்கு போங்க. அங்கே போனா யார் யார் இருக்காங்கன்னு தெரிஞ்சுடும் ;)

@மீனாள்
ரொம்ப நல்லா இருக்கேன். நீங்களும் நலம் தானே

//1கிலோ என்றால் 5 டம்பளர் தானே//
தாராளமா அள்ளினா எனக்கு 4 டம்ளர் தான் வரும் ;)
பட்டை ஏலக்காய் உட்பட 15க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏற்கனவே அந்த பிரியாணி மசாலா மிக்ஸில் இருக்கும் பா. சோ அதெல்லாம் தேவையில்ல.
எலுமிச்சை 2 பழம் தான். அதிகமா பிழியாம(கசப்பு தன்மையை கொடுக்கும்) விதையை நீக்கிட்டு போடுங்க
வேற எதாவது சந்தேகம்னாலும் கேளுங்க மீனா

@வனிதாக்கா
மிக்க நன்றிக்கா

@zahidabanu
வ அலைக்கும் சலாம் வரஹ்...

நான் ரொம்ப நல்லாயிருக்கேன் மா. ரொம்ப நன்றி விஷாரிச்சதுக்கு. நீங்களும் நலம் தானே?
4 ஸ்பூன் அளவு தான் தெரியும். கிராமில் தெரியலையே ;(

@மனோ
மிக்க நன்றிபா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா..

ஆஹா.............. சிக்கன் பிரியாணி சூப்பர்,

வாழ்த்துக்கள்...ஆமினா..

ஹசீன்

ஹசினா

மிக்க நன்றி பா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா