பட்டர் வெஜ் மசாலா

தேதி: February 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

உருளைக்கிழங்கு - 2
காரட் -1
குடைமிளகாய் - 1
பீன்ஸ் - 8
காலிப்ளவர் - சிறியது 1
பட்டாணி - அரை கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லித்தழை
எலுமிச்சை பழ சாறு- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
தாளிக்க:
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
இஞ்சி, பூண்டு விழுது -2 ஸ்பூன்


 

காய்கறிகளை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
நறுக்கிய காய்கறிகளுடன், குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும்
கடாயில் வெண்ணெய் ஊற்றி பட்டை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் குடைமிளகாய், சிறிது பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், சீரகதூள் சேர்த்து வதக்கி காய்கறிகளையும் சேருங்கள்.
பின் நன்கு கொதிவிட்டு, எலுமிச்சை பழசாறு, கரம் மசாலா, உப்பு, மல்லித்தளை சேர்த்து இறக்குங்கள்


மேலும் சில குறிப்புகள்