பூரி மேலெழும்பி, உப்பலாக வர என்ன செய்யவேண்டும்?

இது சிவசக்தி என்ற அறுசுவை நேயர் மின்னஞ்சலில் கேட்டிருக்கும் கேள்வி. தெரிந்தவர்கள் பதில் அளிப்பதற்காக இங்கே பதிவு செய்துள்ளோம். கேள்விகளை எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவர்களுக்கு அன்பான வேண்டுகோள். சமையல் குறித்த உங்களின் எந்த கேள்வியையும் இங்கே மன்றத்தில் கேட்கலாம். இதன்மூலம் நல்ல பதில்கள் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமன்றி, இதே சந்தேகம் உள்ள மற்றவர்களுக்கும் அது பயன்படும்.

வாசகரது கேள்வி -

கடைகளில் உள்ளது போல் பூரி புஸ்ஸென்று உப்பினாற் போல் வருவதற்கு என்ன செய்யவேண்டும்? விடை தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அளிக்கவும்.

கோதுமை மாவில் உப்பு, ஒரு டீ ஸ்பூன் எண்ணை ஊற்றி பிசறி வெது வெதுப்பான நீரில் மிகவும் அழுத்தாமல் பிசைய வேண்டும். அப்பளங்களை இடும் போது மிகவும் லேசாக இல்லாமல் சிறிது தடியாக இட வேண்டும். இது என் அனுபவம்.

Vazhga Tamil!!!

1.Maavi pisaindavudan poori eda vendum. 2.Thotukollum mava kammiya eruka vendum. 3.Vendumanal sirithu soda serthu pisayalam.
4.Oil sariyana soodu eruka vendum
5. vendumanal 1/2 spoon soodana ennai serthu pisayalam

Try this, kandippaka poori nandraga varum

கோதுமை மாவில் உப்பு, கை பிடி அளவு ரவை, ஒரு டீ ஸ்பூன் சக்கரை சேர்த்து பிசைய வேண்டும், பிறகு சிறிது தடியாக இட வேண்டும்.

sajuna

puri ubbalaaga varugirathu.annal udane
amungi vidugirathu.
hotel la eruppathu pola appadiye
eruppathu illai. yen ?
plz therinthaal sollungal.

sajuna

மைதா அதிகம் சேர்க்கப்பட்டு, சற்று மெல்லியதாக தோய்க்கப்பட்டு சுடப்படும் பூரிகள் மொறுமொறுப்பாகவும் இருக்கும். நன்கு உப்பி, நீண்ட நேரத்திற்கு அமுங்கிவிடாமல் இருக்கும். சிலர் மொறுமொறுப்பிற்காக சிறிது ரவையும் சேர்ப்பார்கள். நல்லத் தரமான உணவுவிடுதிகளில், வீடுகளில் செய்வது போல் கோதுமை மாவுதான் அதிகம் சேர்ப்பார்கள். அந்த பூரிகள் வீடுகளில் செய்வது போலவே அமுங்கிப் போய்தான் இருக்கும். கவனித்து இருக்கின்றீர்களா?

கடைகளில் செய்யப்படும் பூரி செய்முறை ஏற்கனவே யாரும் சமைக்கலாம் பகுதியில் படங்களுடன் இடம் பெற்றுள்ளது. கீழே அதற்கான தொடுப்பு உள்ளது. அந்த முறையில் முயற்சித்துப் பார்த்து, பூரி எப்படி வந்தது என்று எழுதுங்கள்.

<a href="http://www.arusuvai.com/tamil/node/2024"> பூரி செய்முறை - படங்களுடன் </a>

Udan sonnathukku thanks admin.
Kandippaaga try saigiren.Hotel la
Battuura(sola puri)perithaaga erukkum
Athum ethu pola thaan saiyyanumma?
Enakkum tamil la type saiyya aasai.
Engu saivathu endru theriyavillai.
nandri.

sajuna

கீழே எழுத்துதவி என்று கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து அதற்கான பக்கத்திற்கு சென்றீர்கள் என்றால், தமிழில் டைப் செய்வதற்கு உதவி கிடைக்கும்.

sajuna

I Made Puris to day.

Puris were very soft and fluffy.
no oil at all.
THANK YOU SO MUCH.

sajuna

நீங்கல் கொடுத்த பூரி செய்முரை எண்னை கொஞ்ஜமும்
குடிக்கவில்லை.அதன் ரகசியம் என்ன.?சிலர் பூரிக்கு சக்கரை
மிக்ஸ் செய்ராங்க ஏன்.சிலர் பரோட்டாவிர்க்கும் சக்கரை மிக்ஸ்
செய்ராங்க.அதே சமயம் ரெடிமேட் பரோட்டா போல வீடுகலில்
செய்ய முடியுமா.ரெடிமேட் பரோட்டா மிகவும் பஞ்ஜு போல சிரிது மொறுமொறுப்புடன்
இருக்கிரதே எதனால்................................!!

sajuna

தமிழில் எழுதுவது நன்று. ஆனால் ஒரு முறைக்கு இரு முறை ல,ள,ழ மற்றும் ர,ற வை சரி பார்த்து எழுதலாமே? இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

மேலும் சில பதிவுகள்