அவரை முட்டை பொரியல்

தேதி: February 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.5 (2 votes)

 

பட்டை அவரை ....1/4கிலோ
முட்டை- 1
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பில்லை - சிறிதளவு
தாளிக்க:
வெங்காயம் - வெட்டியது கொஞ்சம்
கடுகு - தேவைக்கு
காய்ந்தமிளகாய் -2


 

அவரைக்காயை பொடியாக நறுக்கிகொள்ளவும்...கொஞ்சம் உப்பு சேர்த்து 3 நிமிடம் வேக வைக்கவும்..

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளாகையை ரெண்டாக உடைத்து போடவும்..பின் கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் சேர்த்து வதக்கவும்...

வேகவைத்த அவரைக்காயை சேர்க்கவும் அவரையில் உள்ள தண்ணீர் வற்றியதும்,முட்டையை அப்படியே உடைத்து ஊற்றவும்..

கிளறிவிட்டு முட்டை சுருண்டு அவரையுடன் சேரும் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.


பட்டை மிளகாய் சேர்ப்பதால் காரம் இருக்கும் அதனால் மிளகாய் பொடி சேர்க்க வேண்டாம் ..விருப்ப பட்டவர்கள் கடைசியில் தேங்காய் சேர்க்கலாம்...

மேலும் சில குறிப்புகள்


Comments

பட்டை அவரை என்று எதைச் சொல்லியிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நானாக ஸ்னோ பீஸ் என்று அனுமானித்துக் கொண்டு இந்தக் குறிப்பை முயற்சி செய்தேன். பொரியலின் சுவை நன்றாக இருந்தது. //உப்பு சேர்த்து 3 நிமிடம் வேக வைக்கவும்..// சற்று அதிக நேரம் வேகவிட வேண்டி இருந்தது. நான் இன்னும் பொடியாக நறுக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

செய்து பார்த்தேன். சுவை நன்றாக‌ இருந்தது. காய் வெந்துவிட்டது ஆனால் அவரையின் பச்சை வாசனை சிறிது வந்தது. நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

பச்சை வாடை வந்தால் நீங்க வதக்கின நேரம் குறைவா இருக்கும்...அடுத்து எந்த காய் ல பச்சை வாசனை வந்தாலும் வேக பத்தாம கூட இருக்கலாம்..கடைசியில் தேங்காய் துருவி சேர்த்தால் பச்சை வாசனை வராது...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இந்தக் குறிப்பைப் பார்த்து நான் சமைத்து அறுசுவைக்கு அனுப்பிய குறிப்பு வெளியாகை இருக்கிறது. http://www.arusuvai.com/tamil/node/30375 உங்கள் குறிப்புக்கு நன்றி குமாரி.

‍- இமா க்றிஸ்

தாமதமா பார்த்தேன் இமா நன்றி... நல்ல வேலை என் வீட்டில் அவரைக்காய் பொரியல் இன்று..இல்லை என்றால் எப்போ பார்த்து இருப்பேன்னு தெரியல....நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪