பேக்ட் முறுக்கு

தேதி: February 10, 2011

பரிமாறும் அளவு: 12

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

1/2 கப் அரிசி மாவு
1 தேக்கரண்டி எண்ணெய்
1 மேஜைக் கரண்டி தயிர்
1 சிட்டிகை பெருங்காயம்
1/2 தேக்கரண்டி உப்பு


 

எண்ணெய், உப்பு, பெருங்காயம், அரிசி மாவு, இவை அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
இதில் புளித்த தயிரையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும்.
அந்த மாவை முறுக்கு அச்சில் வைத்து முறுக்கு பிழியவும்.
பிழிந்த முறுக்கை எண்ணெய் தடவிய அலுமினிய தட்டில் வைக்கவும்.
அவனை 160' யில் பிரிஹீட் செய்யவும், அதன் பிறகு, 160' வெப்பதில் 10 லிருது 15 நிமிடம் வரை பேக் செய்யவும்.
முறுக்கு சிவந்தவுடம் எடுத்துவிடவும். ஆறிய பின் காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.
இந்த அளவிற்கு 12 முறுக்குகள் கிடைக்கும்.


மேலும் சில குறிப்புகள்