பெங்காலி தக்காளி சட்னி

தேதி: February 10, 2011

பரிமாறும் அளவு: 1 கப்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

2 கப் நறுக்கிய தக்காளி
1/4 தேக்கரண்டி பஞ்ச் பூரன் விதைகள்(சோம்பு, கடுகு, வெங்காய விதை, வெந்தயம், சீரகம்)
1 மேசைக்கரண்டி ஊறவைத்த உலர்ந்த திராட்சை
1/2 தேக்கரண்டி இஞ்சி (மெல்லிதாக நீள வாக்கில் நறுக்கியது)
1 தெக்கரண்டி நறுக்கிய பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி எண்ணெய்
1 மேஜைக்கரண்டி சர்க்கரை
1/2 தேக்கரண்டி உப்பு


 

மைக்கரொவேவ் பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி 1 நிமிடத்திற்கு சூடு படுத்தவும்.
அந்த எண்ணெயில் பன்ச்பூரன் விதைகளை சேர்த்து மறுபடியும் 1 நிமிடம் சுடவைக்கவும்.
இதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து, மைக்ரொவேவில் 3 நிமிடம் சுடவைக்கவும்.
திராட்சை, இஞ்சி, பச்சை மிளகாய், சர்க்கரை சேர்த்து, மறுபடியும் மைக்ரொவேவில் 10 நிமிடம் சுடவைக்கும்.
4 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும்.


மேலும் சில குறிப்புகள்