அவரைக்காய் மசாலா

தேதி: February 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (12 votes)

 

பட்டை அவரைக்காய் - 200 கிராம்
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - சிறிது
அரைக்க:
தேங்காய் துண்டு - ஒன்று(சிறியது)
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

அவரைக்காயை சிறியதாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
தேங்காய், சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அரைத்த மசாலாவை போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கி அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டவும்.
அதில் அவரைக்காய், உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும்.
தண்ணீர் வற்றி காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான அவரை மசாலா ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அம்மா, போன வரம் புல் ஹா அவரைக்காய் பொறியல் தான், இன்னைக்கு கூட அவரைக்காய் சாம்பார். அப்பாடா, இனிமேல் இந்த மாதிரி பண்ணலாம். சூப்பர் ஹ இருக்கு. அடுத்த முறை அவரைக்காய் வாங்கும்போதே, எங்க அம்மாக்கிட்ட சொல்லிடனும்.....ரொம்ப நன்றி மா.விருப்ப பட்டியல்ல சேத்திட்டேன்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இது கொஞ்சம் டிஃபரண்டா இருக்கு சூப்பராவும் இருக்கு கண்டிப்பா ட்ரை பன்னனும் ஈசியாவும் இருக்கு அவரக்காய் என்ராலே ஒரு வெருப்பு இது மாதிரி செய்தால் சாப்பிட நல்லா இருக்கும்ன்னு நினைக்கரேன் நன்றி பாத்திமாம்மா

அன்புடன்
ஸ்ரீ

அருமையான குறிப்பு. எனக்கு தேங்காயும், சீரகமும் சேர்த்து அரைத்து செய்யும் அத்தனை டிஷ்’ம் ரொம்பவே பிடிக்கும். இது சாதத்துக்கும் பிசைந்து சாப்பிடலாமா, நல்லாருக்குமா?? இன்னும் பல பயனுள்ள குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்:)

அன்புடன்
பவித்ரா

சலாம் பாத்திமாம்மா

நல்ல குறிப்பு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தொடரட்டும்........

பாத்திமா... வித்தியாசமா இருக்கு. நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்மா எப்படி இருக்கீங்க? அருமையான குறிப்பு,வாழ்த்துக்கள்மா.நான் அவரைக்காயே சாப்பிடமாட்டேன்.எனக்கே சாப்பிடனும்னு ஆசையாயிருக்குமா.விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன்மா.செஞ்சு பார்க்கறேன்மா.தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்மா.

அன்புடன்
நித்திலா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி

சுகி முதல்ல வந்து பதிவிட்டதுக்கும்,வருகைக்கும் நன்றிமா

ஸ்ரீ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிச்சயம் ந்ல்லா இருக்கும் செய்துட்டு சொல்லுடா

பவி இது சாதத்துக்கும் பிசைந்து சாப்பிடவும் நல்லாஇருக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

வலைக்கும் சலாம்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

வனி வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

நித்தி எப்படி இருக்கேடா?? நான்நலம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா
செய்துட்டு சொல்லுடா

பாத்திம்மா அவரைக்காய் மசாலா சூப்பர். ரசம் சாதத்துக்கு நல்ல காமினேஷன். தேங்காய் சீரகத்தை கடைசியாக அரைத்து சேர்த்து செய்து இருக்கிறேன். நீங்க தேங்காய்சீரகத்தை வதக்கி செய்து காண்பித்து இருக்கீறிங்க. கண்டிப்பா டேஸ்ட் நல்லா இருக்கும் நினைக்கிறேன். விரைவில் செய்து பார்த்து பின்னூட்டம் தருகிறேன். எவ்வளவு சமையல் இருக்கு எத செய்யறதுனு தெரியல...

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்தி அக்கா..,நலமாக இருக்கின்றீர்களா..?
வீட்டில் அனைவரும் நலம்தானே...?
அவரைக்காய் மசாலா அசத்தலாக இருக்கு அக்கா...
நான் இதை நிச்சயம் செய்து பார்க்கிறேன்...
எங்கே எனது மெயில் ஐடியை கொடுத்து உங்கள் மெயிலுக்காக காத்திருக்கின்றேன்.
மெயிலே அனுப்பவில்லை அக்கா...?
பிஸியாக இருக்கின்றீர்களா...?
சுவையான குறிப்பிற்க்கு வாழ்த்துக்கள் ஃபாத்திக் அக்கா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பாத்திமாம்மா, எப்படியிருக்கீங்க? பேசி பல வாரங்கள் ஆயிற்று. எனக்கு அவரைக்காய் ரொம்ப பிடிக்கும்ம்மா. ஆனால் அதை சாப்பிட்டே வருடக்கணக்காகிவிட்டது :( அவரைக்காய் வாசனையே போதும் இன்னும் டேஸ்ட் கேட்கவே வேண்டாம். நீங்கள் செய்துள்ள முறை மிக மிக ருசியாக இருக்கும் என நினைக்கிறேன் மா. ஒரு வருடம் கழித்து இந்தியா வரும்போது அம்மாவிடம் சொல்லி இதே செய்முறையில் செய்து சாப்பிட்டு உங்களுக்கு போன் போட்டு சொல்கிறேன் :) வாழ்த்துக்கள்ங்கம்மா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வினோ செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

வலைக்கும் சலாம்.....
நாங்கள் அனைவரும் நலம் உன்வீட்டில் அனைவரும் நலமா????
நான் மெயில் எப்போவோ பண்ணிவிட்டேன் உன் பதிலுக்காக காத்து இருக்கிறேன்
செய்துட்டு சொல்லுமா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

கல்ப்பா எப்படி இருக்கே அதேதான் நானும் உன்னிடம் கேக்குறேன் பேசி எவ்ளோ நாளாச்சு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா செய்துட்டு கண்டிப்பாக போன் போட்டு சொல்லனும் சரியா??

சலாம் ஹமீதம்மா ..!!

அவரை மசாலா சூப்பர் !!
நிச்சயம் செய்து பார்க்கனும்
வாழ்த்துக்கள் அம்மா ..!!

Express Yourself .....

சூப்பர் வாழ்த்துக்கள் ..படங்கள் அருமை ..
அவரை நான் எப்போ செய்தாலும் நன்றாகவே இருப்பதில்லை
இந்த முறையில் செய்து பார்க்கிறேன் நன்றிமா...

வாழு, வாழவிடு..

வலைக்கும் சலாம்...
நிச்சயம் செய்துட்டு சொல்லுடா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா செய்துட்டு சொல்லுடா

hai Fathima
Today cook panina super a erunthathu. romba easya erukku.

ஹாய் இன்று உங்கள் அவரை செய்தேன் சுப்பரா இருந்தது நன்றி

Akka,
Can I try with Sugar snap Peas rather than Board Peas, Do we need to change anything in prepration method?

Sorry asking in tamil, in my system the Tamil font not installed

Anbuudan
Vijay

thank you amma