பாசி பயறு குழம்பு

தேதி: February 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாசி பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 13
பூண்டு - 6 பல்
தக்காளி - 1 சிறியது
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு

தாளிக்க:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
வெந்தயம் -1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 பின்சு
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு


 

பாசி பயறை நன்கு கழுவி விட்டு குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பொருட்களை குக்கரில் போட்டு மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து,சிறிது உப்பு போட்டு மேலும் 3 விசில் விடவும்.
இறக்கிய பின் சிறிது புளி பிழிந்து ஒழிக்கவும்.
ஒரு கொதி விட்டு இறக்கி பறிமாறவும்.


சுடு சாதம்,சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். பயறு உடம்பிற்கு மிகவும் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதோ உங்கள் குறிப்பு வந்துவிட்டது ..வாழ்த்துக்கள் ..
ஈசியான பாசிப்பயறுகுழம்பு.. மேலும் குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ...

வாழு, வாழவிடு..

மிக்க நன்றி ருக்சானா.படங்களுடன் குறிப்புகளை விரைவில் தருகிறேன்.

Expectation lead to Disappointment