பாலக் சிக்கன்

தேதி: May 5, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 250 கிராம்
பாலக்கீரை - ஒரு கட்டு
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கெட்டி தயிர் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 20 கிராம்
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பாலக்கீரை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு லேசாக வதக்கவும்.
பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் பாலக் கீரையையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு சிக்கனை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். தயிரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
இதனுடன் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்