பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

மக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)

அதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா.? இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா?

எங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )

பட்டியின் விதிமுறைகள் :
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

நடுவர் அவர்களே, இடைஞ்சலுக்கு மன்னிக்கவேண்டும். பட்டி இழையை வெளிக்கொணரவே இந்த பதிவு. தோழிகளே, என்ன ஆனீர்கள்? எங்கே போனீர்கள்? நமக்காக நம் அன்பு தோழி ரம்யா எத்தனை ஆர்வமாக பட்டியை தொடங்கியிருக்கிறார். அவருக்காக ஆர்வத்தோடு உங்கள் வாதங்களை சரமாரி எடுத்து விடுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யாழினி..

என்ன எல்லாரும் அந்த அணி பக்கமே போறீங்க.. வெரி குட்..

படிப்பை தாண்டியும் ஒரு உலகம் இருக்குனு பெத்தவங்க தான் உணர வைக்கனும்னு சொல்றாங்க..

கண்டிப்பா பல துறையில் மின்னிக் கொண்டிருந்தால் பெருமை தானே?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ருக்சானா..

இப்படி சொன்னா எப்படி? நல்ல தலைப்பு தான்.. நிங்கள் வாதாடினால் இன்னும் நல்ல தலைப்பாகுமே?

;).. முடியும் போது பதிவிடுங்கள் ருக்சானா. பரவாயில்லை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்பனா..

என்ன செய்வது.. பட்டியையே நம்ம மக்கள் புதை குழியில தள்ளிட்டாங்க.. வனி பாத்தா அழுதுடுவாங்க..

ஒரு காலத்துல பட்டி தொடங்கினா தீ மாதிரி தூங்காம பதிவுகள் விழும்.. இப்போ பட்டியே தூங்குது.. ;(

நிமுத்த பாக்கறோம்.. ஹ்ம்ம்ம் ஒன்னும் முடியலை..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நல்ல அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்த நடுவருக்கு என்
வாழ்த்துக்கள் ..
குழந்தைக்கு உடம்பு முடியவில்லை அதனால்தான் பட்டியில் பதிவிடமுடியவில்லை நடுவரே..
இதோ நீங்க கூப்பிட்டதும் ஓடிவந்துட்டேன்..
மற்ற தோழிகள் அனைவரும் பட்டியில் கலந்துகொண்டு அவரவர்
கருத்துக்களை பதிவிடவும் என்று கேட்டுக்கொள்கிறேன்..

எனது அணி நடுவரே கல்வி மட்டும் போதும் என்பதே..

நாம் வாழ்வது அவசரமான எந்திரமயமான காலத்தில் கல்வியின்
கட்டாயம் அனைவரும் அறிந்ததே ..
எதிரணியினர் சொல்லும் மற்ற திறமைகளை எல்லாப்பெற்றோராலும்
எல்லா ஆக்டிவிட்டீஸையும் பிள்ளைகளுக்கு கொடுக்க
முடிவதில்லை நடுவரே..

ஏனென்றால் அங்கு பணம் என்பது தலையாய பிரச்சனையாக இருக்கிறது..
இப்படி இருக்கையில் தன் மகனோ மகளோ படிக்க வைத்து
ஒரு நல்ல நிலமைக்கு அவர்களை
கொண்டுவருவதுதான் சராசரி பெற்றோர்களின் கணவு...
சில பெற்றோர்கள் அடுத்தவரின் புகழ்ச்சொல்லுக்கு பாராட்டுக்கு
மயங்கி தன் குழந்தைகள் எல்லாவற்றிலும் முதலாக இருக்க
வேண்டும் என்று குழந்தைகளிடம் அதிகப்பழுவை
சுமத்துகிறார்கள் நடுவரே ..இது தேவையா?..

முதியவர் கல்வி என்று ஒன்று இருந்தாலும் ..நமது உடம்பும் மனசும்
பதினைந்தில் படிப்பது புரிந்துகொளவது போல்
ஒத்துழைப்பதில்லையே அதனால் இந்த காலத்தில் கல்விக்கே
முக்கியம் வேண்டும் என்பது எனது கருத்து..நடுவரே

மீண்டும் வருவேன்.....

வாழு, வாழவிடு..

பிள்ளைகள் படித்தால் மட்டும் போதாது .அவர்கள் நடனம் .இசை விளையாட்டு இவை ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ கற்று கொண்டால் அவர்களது உடலும் மனமும் பலப்படும் .உடலும் மனமும் நன்கு உள்ள பிள்ளைகள் படிப்பிலும் நிச்சியம் சாதிப்பார்கள் .என்பது என் கருத்து சௌமியன்

//நாம் வாழ்வது அவசரமான எந்திரமயமான காலத்தில் கல்வியின்
கட்டாயம் அனைவரும் அறிந்ததே ..
எதிரணியினர் சொல்லும் மற்ற திறமைகளை எல்லாப்பெற்றோராலும்
எல்லா ஆக்டிவிட்டீஸையும் பிள்ளைகளுக்கு கொடுக்க
முடிவதில்லை நடுவரே..//

நடுவர் அவர்களே, கல்வி என்ற கலையும் அனைவருக்கும் வந்து விடாது. அதற்கு ஆர்வம், அக்கறை,விடாமுயற்சி இத்தனையும் வேண்டும். திருமணத்திற்கு பிறகு படிப்பில் சாதித்தித்தவர்கள் நம் நாட்டில் எத்தனை பேர் உள்ளார்கள்? அவர்கள் அத்தனை பேருக்கும் 10 வயது தானா?

//ஏனென்றால் அங்கு பணம் என்பது தலையாய பிரச்சனையாக இருக்கிறது..
இப்படி இருக்கையில் தன் மகனோ மகளோ படிக்க வைத்து
ஒரு நல்ல நிலமைக்கு அவர்களை
கொண்டுவருவதுதான் சராசரி பெற்றோர்களின் கணவு//

நடுவர் அவர்களே, போட்டியும், லஞ்சங்களும் நிறைந்த இந்த காலக்கட்டத்தில் பணம் இல்லையென்றால் பிணத்தை கூட அசைக்க மாட்டார்கள். பணத்தை கொட்டி பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாத கல்வி தருவதைவிட, அவர்கள் விரும்பும் துறைகளை தந்தால் அவர்கள் உற்சாகத்தோடும், நாட்டத்தோடும் பயின்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

//சில பெற்றோர்கள் அடுத்தவரின் புகழ்ச்சொல்லுக்கு பாராட்டுக்கு
மயங்கி தன் குழந்தைகள் எல்லாவற்றிலும் முதலாக இருக்க
வேண்டும் என்று குழந்தைகளிடம் அதிகப்பழுவை
சுமத்துகிறார்கள் நடுவரே ..இது தேவையா//

எதிரணி தோழி தட்டையே திருப்பி போட்டு விட்டார். பெற்றோர்கள் வீண் பகட்டிற்கும், பந்தாவிற்கும் கல்வியை தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாத, பிடிக்காத டாக்டர்,எஞ்சினியர்,ஆர்க்கிடெக்ட், போன்ற சமுதாயங்கள் மதிக்கும் துறைகளில் சேர்த்து பின்னாள் அவதிப்படுகிறார்கள். இதனால் பிள்ளைகள் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள்.

அந்தகால பெற்றோர்களுக்கு அந்த அளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பிள்ளைகளை குதிரைக்கு கடிவாளம் கட்டிய மாதிரி பழக்கப்படுத்தி இருப்பார்கள். வீடு, வீடு விட்டால் ஸ்கூல். அவ்வளவே அவர்களுக்கு தெரிந்த உலகம். ஆனால் இன்று உள்ள பெற்றோர்கள் விவரமானவர்கள். தங்கள் பிள்ளைகள் நான்கு மொழிகளிலும் வல்லவர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் இப்போதிருந்தே பள்ளிப்படிப்போடு சேர்த்து அவற்றையும் தருகிறார்கள். குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு தாங்கள் கற்ற பிற மொழி வாயிலாக அந்ததந்த நாடுகளில் வேலை கிடைக்கபெற்று வாழ்க்கையில் எண்ணிப் பார்க்க முடியாத உச்சத்தை அடைகிறார்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவர் அவர்களே !
நான் கல்வி தான் முக்கியம் என்ற அணியில் என் கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்
.

அன்பு நாட்டாமை அவர்களே, பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்துவதே சரி. அவர்களுக்கு பிடித்த துறையில் அவர்களை ஈடுபடுத்தி படிக்க வைக்க வேண்டும் என அவசியம் இல்லை, அவர்கள் தானாகவே அந்த திறமையை வளர்த்து கொள்ள முடியும், ஆனால் ஒரு பட்டம் பெறுவது மிக முக்கியம் அல்லவா. இதை ஏன் எதிரணியினர் உணரவில்லை என எனக்கு புரியவில்லை. எந்த ஒரு கொடி வளரவும் ஒரு பிடிப்பு தேவை. அந்த பிடிப்பு தான் கல்வி. அது சரியாக அமைந்து விட்டால், அவர்கள் விருப்பங்கள் ஆர்வங்கள் எல்லாம் தானாகவே மேன்மை பெரும். எனவே அடிப்படை கல்வியே, அதில் தான் பிள்ளைகளை பெற்றோர் கவனம் செலுத்த சொல்லி அறிவுறுத்த வேண்டும். அவர்கள் விரும்பும் பிற துறைகளில் இவர்கள் அறிவுறுத்த வேண்டிய அவசியம் இல்லையே, தானாகவே அவர்கள் திறமையை அவர்கள் வளர்த்து கொள்வார்கள் அல்லவா.

இதுவும் கடந்து போகும்.

நடுவர் அவர்களே நலமா?

கல்வி மட்டும் இந்த காலத்திற்கு போதும் என்று சொல்ல வந்திருக்கிறேன்.

நாம் ஆசைப் பட்டது நடக்கவில்லை என்றால் நம் குழந்தைகளிடமா திணிப்பது?

இருப்பதோ 24 மணி நேரம்.அதில் அவர்கள் ஸ்கூல் பாதி நாள்.மீதி நேரத்தில் ஒரு மணி நேரம் டியூஷன்,

ஒரு மணி நேரம் பாட்டு கிளாஸ்,ஒரு மணி நேரம் ஸ்விம்மிங்,டான்சிங்,drawing அது இது............என்றால் இந்த பிஞ்சுகள் என்னதான் செய்யும்...இப்போதிலிருந்து இந்த குழந்தைகள் போராட வேண்டுமா.....?(என்ன.............. கொடும.... சார்.............)
இது தான் வயசு அவர்களுக்கு சந்தோசமாக
இருக்க.

"எதிர் அணியீனருக்கு போர் கொடி தூக்கிகொண்டு ஒரு குட்டி பட்டாளமே வருகிறது".

அதில் அவர்கள் குட்டீஸ் தான் அதிகம் இருக்கிறார்கள் நடுவரே......

"""பட்டியை தூங்க விடாதீர்கள் அனைவரும் இதிலும் பங்கு பெறுங்கள்...

வாங்க தோழிகளே""""............

ஹசீன்

மேலும் சில பதிவுகள்