பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

மக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)

அதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா.? இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா?

எங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )

பட்டியின் விதிமுறைகள் :
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

நடுவரே நான் இந்த பட்டியில் கல்வி என்ற தலைப்பில் வாதாட இருக்கிறேன்.

நடுவரே உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை?இப்போது உள்ள பெற்றோர் குழந்தைகளை ஒரு ரோபோ பொம்மை மாதிரி ஆக்கி வைத்திருக்கிறாங்க. காலையில் எழுந்து ஸ்கூல்,பின் வீட்டுக்கு வந்த உடன் ஹோம்வொர்க்,அடுத்து பாட்டு, டான்ஸ் என்று அனுப்பி தங்கள் குழந்தையை வறுத்து எடுக்கிறாங்க.அவர்கள் பெறுமைக்காதான் அனுப்புகிறார்கள் தவிர பிள்ளைகள் ஆர்வமாக செல்வது 100தில் 2%தான் மீத்யுள்ள குழந்தைகள் அவர்கள் விருப்பமாக இருக்கதான் ஆசைப்படுகிறாங்க(எப்போதும்பக்கதுவீட்டில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிகொண்டு)இருக்க.

நடுவரே நான் மீண்டும் வந்து என் கருத்துக்களை சொல்லுகிறேன், இப்பொழுது நேரமிம்மை காரணமாக செல்கிறேன்.

வாழு இல்லை வாழவிடு

நடுவரே, மாலை வணக்கம். பாவம் சமைத்து போட ஆளில்லாமல் நீங்களே சமைச்சிருப்பீங்க. இந்தாங்க குக்கீஸ்’ம், வெஜிடபுள் பன்’ம், உங்களுக்கு செய்தேன், சாப்பிட்டு வந்து தெம்பா பதிவு போடுங்க. சரி இப்ப மேட்டருக்கு வரேன்.

நடுவரே, நாங்க சொல்வது படிப்பு மட்டும் போதும் என்பது இல்லை நடுவரே, படிப்பு இருந்தால் மற்றவை எப்போது வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம். நீச்சல் கற்றுக்கொள்ள நினைக்கும் யாரும், முதலில் கடலுக்கு போவதில்லை, சின்ன குளத்தில் தான் நீந்த கற்றுக் கொள்கிறார்கள், அதுவும் சுரைக்காயை கட்டிக்கொண்டு நீந்த கற்றுக்கொள்கிறார்கள். அந்த மாதிரி அடித்தளமாக விளங்குவது கல்விதான் நடுவரே. எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நாளை பிரகாசமாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளவும், கல்வியறிவு என்பது மிக மிக முக்கியம்.

//எந்த கலையானாலும் அந்தந்த வயதில் கற்று கொண்டால் தான் அழகு.//

நடுவரே, கலைகளுக்கு வயது இருக்காம், அப்படியென்றால் கல்விக்கு கிடையாதா?? கலையை கற்க ஆர்வம் இருந்தால் மட்டுமே போதும், வயது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் கல்வி அப்படியில்லை நடுவரே, கற்க வேண்டிய வயதில் கற்க வில்லையெனில் நமக்கு ஆர்வமிருந்தாலும் கற்க நமது மூளை மிகவும் சோர்வடைந்துவிடும்.

நடுவரே, எதிரணி தோழி தன் மகளை வெறும் நடனம் மற்றும் பாட்டு வகுப்புக்கு தான் தினமும் அனுப்புறாங்களா, இல்லையே, பள்ளிக்கு போய் வந்த நேரம் போக மற்ற நேரங்களில் தானே!! அதுவும் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு வந்தால் இந்த வகுப்புக்கெல்லாம் லீவ் தான் நடுவரே!! இதிலிருந்தே புரியவில்லையா, ஊன்றுகோலாய் விளங்குவது கல்வி மட்டுந்தேன் என்று.

//ஒரு கட்டத்தில் வேலையை விட்டு விட்டு நடன பள்ளி ஆரம்பித்து விட்டார் இதன் மூலம் பணத்திற்கு பணம் ,//தான் பார்க்கும் வேலையை விட இன்னொரு வேலை செய்தால் அதில் பணம் அதிகம் கிடைக்கும் என்று தெரியவும், கல்வி தேவைப்படுகிறது நடுவரே. இன்று எத்தனையோ பெற்றோர், தான் படிக்காவிட்டாலும் பரவாயில்லை, தன் குழந்தையாவது நிறைய படிக்க வேண்டும் என்று வெளிநாடுகளூக்கு சென்று படிக்க வைக்கிறார்களே, இதற்கெல்லாம் என்ன அர்த்தம் நடுவர் அவர்களே.

பெற்றோரும் பெற்றோரும் சந்தித்து கொண்டால் கூட மதிப்பெண் பற்றியும், கல்வி பற்றியும் தான் பேசுகிறார்கள். ஏன் இன்னிக்கு நாம் எதாவது ஒரு உறவினர் வீட்டுக்கு போனால் கூட மதிப்பெண்ணுக்கு தான் மதிப்பு நடுவரே. எங்க ஏதாவது ஒரு கம்பெனியில் போய் படிப்பு இல்லாமல் வெறும் ஷீல்ட் காமித்தால் வேலை கிடைக்குமா?? வேண்டுமென்றால் படிப்பு சர்டிவிகேட்டுடன் மற்ற சான்றிதழுக்கு ஏதாவது மதிப்பெண் கிடைக்கலாம், அதுவும் படிப்பு சான்றிதழ் தான் மூலதனம் நடுவரே. எல்லாமும் முக்கியம் என்று பேசுவது பட்டிக்கு வேண்டும் என்றால் அழகாக இருக்கலாம், ஆனால் பாவம் படிக்கும் வயதில் அந்த சிறுவன் முதுகில் எதற்கு சுமைக்கு மேல் சுமையாக திணிக்க வேண்டும், யோசித்து பாருங்க.

காலை 9 மணிக்கு பள்ளி, மாலை 4 மணிக்கு வந்ததும், வரிசையாக நடனம், பாட்டு, விளையாட்டு என்று பாவம் அந்த குழந்தைக்கு படிக்க நேரமே கொடுப்பதில்லை.

//நடுவர் அவர்களே, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கூட வேலை வாய்ப்பு கிடைக்கும். எனக்கு தெரிந்த ஒருவர் அப்படித்தான் ஹுண்டாய் கம்பெனியில் சிறிய அளவில் நுழைந்து இப்போது ஒரு பெரிய அளவில் உள்ளார்.// நடுவரே, அந்த கோட்டாவில் வேலைகிடைக்கலாம், ஆனால் அதற்கு கல்வி தகுதியும் மிக முக்கியம், நான் ஏற்கனவே சொன்னது போல வெறும் ஸ்போர்ட்ஸ் கோட்டா வச்சிக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாது. அது ஒரு அடிஷினல் தகுதி அவ்வளவுதான்.

அன்புடன்
பவித்ரா

அட கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது வருவதர்க்கு ...அதர்க்குள்
இத்தனை பேரா எங்கள் அணிக்கு வாங்க வாங்க எனதணி தோழிகளே.
சூப்பரான வாதங்கள் வாழ்த்துக்கள் தோழீஸ்...

எதிரணியினர் சொல்கிறார்கள் நான் தட்டை திருப்பி போட்டுட்டனாம்..
இதெல்லாம் கேக்க மாட்டிங்களா நடுவரே ..
நான் தினமும் தட்டை நேரே வைத்துதான் சாப்பிடுகிறேன்.ஹி ஹி ஹி
(((அய்யோ நாந்தான் கிடைத்தேனா)))..

பாவங்க பிஞ்சுகுழந்தைங்க ரொம்ப பாரம் ஏத்தினால் தாங்காதுங்க .
இந்த வயதில் ஸ்கூல்விட்டு வந்தோமா கொஞ்ச நேரம்
விளையாட ஏங்குதுங்க குழந்தைகள் ...
அதுங்க கிட்ட போய் பாட்டுகிளாஸ், டான்ஸ்கிளாஸ், இன்னும்
எக்ஸ்ட்ரா, எக்ஸட்ரா, சொல்லிக்கொண்டே போகலாம்...
இப்படி பயமுறுத்துகிறீர்களே..விட்டுடுங்க எதிரணி தோழியினரே..

..
உலகில் புகழ்பெற்ற அறிஞர்கள் எத்தனைபேர் கல்வியில் இருக்கிறார்கள்
கல்வியின் மதிப்பை பற்றி அவர்களுக்கு தெரியும்..
வெளிநாடுகளில் ஒரு டிகிரி வாங்கியவர்கள்கூட ஆயிரக்கணக்கில்
சம்பாதிக்கிறார்கள் யோசியுங்கள் எதிரணியினரே......

மீண்டும் நாளை வருகிறேன் ..
நாங்கல்லாம் வரலேட்டானதுனால நடுவர் கோபமாக போய்விட்டாரோ..
அதான் நம்ம தோழி குக்கீஸும் வெஜிடபிள்பன்னும் தந்தாங்களே
நானும் என் பங்குக்கு மஞ்சுளாமேமின் ஃபில்டர்காஃபி தருகிறேன் வாங்க
நடுவரே....

வாழு, வாழவிடு..

ருக்ஸானா

அடடா.. இப்போது எல்லாம் பரவாயில்லை என நினைக்கிறேன். குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள்..

அப்பா..அந்த அணிக்கு பலம் சேர்க்க நீங்களாவது வந்தீர்களே..பவித்ரா அடி ஜூட்..

கண்டிப்பாங்க.. எல்லா பெற்றோர்களாலும் கொடுக்க முடியாது.

//ஒரு நல்ல நிலமைக்கு அவர்களை
கொண்டுவருவதுதான் சராசரி பெற்றோர்களின் கணவு...
சில பெற்றோர்கள் அடுத்தவரின் புகழ்ச்சொல்லுக்கு பாராட்டுக்கு
மயங்கி தன் குழந்தைகள் எல்லாவற்றிலும் முதலாக இருக்க
வேண்டும் என்று குழந்தைகளிடம் அதிகப்பழுவை
சுமத்துகிறார்கள் நடுவரே//

நல்லா குழப்புறீங்க.. எனக்கு இப்போ நீங்க சொன்ன பாயின்ட் தான் சரினு தோனுதே ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சௌமியன்..

நல்ல கருத்து.. சிம்பிளா சொல்லிட்டிங்க..
உடலும் மனமும் நல்லா இருக்கும் குழந்தைகள் படிப்பிலும் சாதிப்பது சாத்தியமே..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்பனா...

வந்துட்டிங்களா? ;)

//பணத்தை கொட்டி பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாத கல்வி தருவதைவிட, அவர்கள் விரும்பும் துறைகளை தந்தால் அவர்கள் உற்சாகத்தோடும், நாட்டத்தோடும் பயின்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்//

மிக சரியான வாதம் கல்பனா... கலைக்கு மட்டுமா.. கொட்டி கொடுக்க வேண்டியுள்ளது.. கல்விக்கும் தானே...

//தங்கள் பிள்ளைகள் நான்கு மொழிகளிலும் வல்லவர்களாக வரவேண்டும்//

சரிதான்.. நடுவருக்கே.. ஐந்து மொழிகள் தெரியும்னா பத்துக்கோங்களே.. ( அப்பா ஸைடுல நம்மள பத்தியும் ஒரு பிட்டு போட்டாச்சு )..

அட ஆமாங்க.. உங்க புள்ளைய பாத்து மத்த பெற்றோர்கள் பொறாமைப்பட்டால் அது உங்களுக்கு பெருமைதானுங்க..

அதை ஏன் புரிஞ்சிக்கவே மாட்றீங்கனு.. நான் கேக்கலை நம்ம கல்பனா கேக்கறாங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உமா..

ரொம்ப நல்லது.. சீக்கிரம் வந்து பதிவ அள்ளி வீசுங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

யோகலட்சுமி

படு பயங்கரமான ஒரு கருத்து..நச்சுனு சொல்லிட்டிங்க..

கல்வி ஒரு கொடி மாதிரி.. அந்த பிடிப்பை பயன்படுத்தி பிள்ளைகள் வளர்ந்தால் தானாக மற்ற துறையிலும் மேன்மை பெறலாம்..என்ன ஒரு கருத்து.. சரிதானே..

அந்த பிடிப்பை அறிவுறுத்த வேண்டுயது பெத்தவங்க தானே.. சூப்பர்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுமி..

கல்வி அணி பலமாயிட்டே போகுது..

//நடுவரே உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை?//

சொல்லுங்கோ.. குழப்ப தானே வந்திருக்கேள்.. அதுலென்ன.. சொன்ன தெரிஞ்சிப்பேன்.

கலைகள் என்ற பேரில் குழந்தைகளை வறுத்தெடுப்பதாக சுமி கூறியுள்ளார்.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனதன்பு நடுவரே!!! எனக்கு தெரியும் இந்த பட்டியின் முடிவு....அதற்க்கு மாறாக யாரும் பேச வரமாட்டார்கள்....நானும் வரணுமா என்றுதான் நினைத்தேன்....ஏனோ வரதொநித்து ...அதுக்கு காரணம் நீங்கலாக கூட இருக்கலாம்..... பவியுமாககூட இருக்கலாம்.....மொத்தத்தில் நான் வந்துவிட்டேன்...கல்விக்கு பலம் சேர்க்க.....எப்புடி!!!!

இந்த காலத்தில் குழந்தைகள் /80 சதவிகித குழந்தைகள்/ படிப்பை மட்டுமே விரும்புகிறார்கள்.....மீதி உள்ளவர்களில் பாதிபேர் பெற்றோரின் வர்புருதளினால்தான் போகிறார்கள்....மீதிபேர் வேண்டாவெறுப்பாக கற்கிறார்கள்...இதுதான் உண்மை நிலைமை......குழந்தைகளை நாம் வர்புருத்தகூடாது.....அவர்களுக்கு என்ன விருப்பமோ அதை செய்ய அனுமதிக்கவேண்டும்...இப்போது இதை யார் செய்கிறார்கள் என்று நினைகிறீர்கள் ....ஒருவரும் இல்லை ...அவர்களுக்கு ஒரு அட்டவணை கொடுகிறார்கள்...நீ இது முடித்ததும் ,இதற்கு போ,அதற்க்கு போ....என்று அவர்களை விரட்டுவதையே குறியாக இருக்கிறார்கள்....பாவம் குழந்தைகள் ...குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள் உங்களின் கண்ணோட்டம் மாறும் ...அவர்களை கட்டாய படுத்தாமல் ...அவர்கள் விருப்படி விட்டால்தான் அவர்களால் மிளிர முடியும்.....புரிந்துகொள்ளுங்கள் பெற்றோர்களே...!!!ஆதங்கத்துடன்....ஒரு தாய்.....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்