பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

மக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)

அதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா.? இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா?

எங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )

பட்டியின் விதிமுறைகள் :
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

பவித்ரா..

நடுவரின் மனதை அறிந்த ஒரே புள்ள.. ;) நன்றி..

//எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நாளை பிரகாசமாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளவும், கல்வியறிவு என்பது மிக மிக முக்கியம்//

அதாவது.. கலை துறையா இருந்தாலும்.. எந்த துறையில் சென்றால் ஜொலிக்க முடியும் என தெரிய வேண்டும்.. அந்த அறிவுக்கு அடித்தளமாக இருப்பது கல்வி என கூறுகிறார்.. மிக சரியான கருத்து...

//தான் பார்க்கும் வேலையை விட இன்னொரு வேலை செய்தால் அதில் பணம் அதிகம் கிடைக்கும் என்று தெரியவும், கல்வி தேவைப்படுகிறது நடுவரே//

அவங்க பாயின்ட்லேயே நீங்க உங்க பாயின்டை புடிச்சிட்டிங்க.. சூப்பரப்பு ;)

//அதுவும் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு வந்தால் இந்த வகுப்புக்கெல்லாம் லீவ் தான் நடுவரே!! இதிலிருந்தே புரியவில்லையா, ஊன்றுகோலாய் விளங்குவது கல்வி மட்டுந்தேன் என்று.//

அட ஆமா.. பாட்டு கிளாஸுக்கு போகர நேரத்துல பாக்கி நேரம் ஸ்கூல் இல்லையே.. ஸ்கூல் பொக பாக்கி நேரம் தானே கலை.. குட்

கலை என்பது ஜச்ட் அடிஷனல் தகுதி.. கல்விதான் ஆதாரம் எனக் கூறி நசுனு முடிச்சிட்டாங்க பவித்ரா.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவரே!!!இப்போ இருக்குற நிலைமைல வேலைக்கு ஆள் எடுக்குரப்போ என்ன எதிர்பாக்குறாங்க தெரியுமா !!! படிப்பைத்தான் முதல்ல எதிர்பாக்குறாங்க ...அதுலதான் 90 % .....அதுதான் நுழைவு சீட்டு ....ஆயுசுமுளுவதும்....!!!அதுக்கப்புறம் நல்ல மொழிப்புலமை,வேலையில் விரைவில் கற்றுகொள்ளும் ஆர்வம்,பிரச்சனைகளை விரைவில் சமாளித்தல்....இப்படி ...அங்க போய் நீ பாடுவியா/ஆடுவியா/விளையாடுவியா/ஓவியம் வரைவியா/இதெல்லாம் சும்மாவேனும் கேட்பார்களே தவிர அதுவே முக்கியமான தகுதியாக எடுத்துகொள்ளமாட்டார்கள் அதானால் ஒன்னும் வேலைதரமாட்டார்கள்...அந்தத்துறை சம்பந்தமான வேலையாக இருந்தால் தவிர......என்ன நான் சொல்வது ஒத்து கொள்வீர்களா மாட்டீர்களா....இல்லை என்று வீண் பிடிவாதம் பிடிக்காமல் நன்றாக ஆராயுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்...!!!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ருக்சானா..

ஹாஹாஹா.. ;) குட் ஜோக்..

பாவம் தான் பிஞ்சு குழந்தைகள்.. நீங்க சொன்னது சரிதான்.. நானே இன்னும் விளையாட்டுக்கு ஏங்கறேன்.. நீங்க சொன்னது கேட்டு எனக்கு கண்ணு கலங்கிடுச்சு.. பாவம் எதிரணி தோழிகளின் குட்டிஸ்... அப்படினு சொல்ல வராங்க கல்வி அணி..

நீங்க வந்ததும் லக் பாருங்க.. நிறையா பதிவுகள்.. நீங்களுமா.. குடுங்க பசியா தான் இருக்கேன்.. ;) ஹீ ஹீ ஹீ.. ஒன்னொன்னா அனுப்புங்கப்பா.. அவசரமில்லாமல்.. எத்தனை தான் ஒரே சமயத்துல சாப்படரது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என் மேல் என்ன வருத்தம் நடுவருக்கு...........

ஹசீன்

அஸ்வதா..

வாவ்.. பட்டியின் முடிவு தெரியுமா.. அப்ப நான் தீர்ப்பு கொடுக்க வேணாம்னு சொல்றீங்க.. நீங்களே குடுத்துட்டாலும் ஜாலிதான்.

தலைப்பே பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மற்ற துறைகளிலும் கவனம் செலுத்தலாமா என்பது தான்.. ஆனல் மற்ற கலை துறையே வற்புறுத்தலின் பெயரில் தான் உள்ளது என ஆதங்கத்துடன் கூறி முடித்துவிட்டார் ;(

படிப்புக்கு தான்.. முதல் அட்டென்ஷன் என்பது உண்மையே.. இன்ட்ர்வ்யூல கல்வி சம்மந்தமான கேள்வி தானே கேப்பாங்க.. ஏதோ சிலதில் தான் பாட தெரியுமா? ஆடத் தெரியுமானு கேப்பாங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹசீனா..

நான் இன்னும் பதில் அளித்தே முடிக்கவில்லை.. கவலை வேண்டாம்.. நடுவர் பட்டியில் பதிவுகள் இல்லாமல் காய்ந்து போயி இருந்தார்.. இப்போது இருக்கும் நிறைய பதிவுகள் பார்த்து பதில் அளிப்பதில் ஆர்வமாக உள்ளார்.. ஒரே வரியில் வாதம் இருந்தாலும் உங்கள் நடுவர் வழவழவென அதற்கு பதில் கொடுப்பதில் வல்லவர் ;) ஸோ வைட் ... கோரிலேட் செய்து பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன்.. இதோ வந்துட்டேன்..........................;)

ஆமை கதைப் போல என் பதிலைத் தான் உன்னிப்பாக உக்காந்து பார்த்துக் கொண்டிருந்தீர்களா? ;) நன்றி....

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹசீனா..

சரிதான்.. இடைவெளியே இல்லாமல் அதை செய் இதை செய் என்றால்.. பாவம் குட்டிஸ் என்ன தான் செய்யும்.. குட்டி பட்டாளம் போர் கொடியுடன் நானும் வருகிரேன் கொடி பிடித்து.. ;)

//இது தான் வயசு அவர்களுக்கு சந்தோசமாக//

சரிதான்.. எத்தனையோ கஷ்டங்களை சந்திக்க போகிறார்கள்.. கொஞ்ச ரிலாக்ஸாக இருக்கவிட்டால் தான் என்ன/... ;-/ வெரி பேட்
பட்டிக்காக பேசிய ஹசீனாக்கு ஒரி ஸ்பெஷல் தேங்க்ஸ்...பட்டியை தட்டி எழுப்பியதுக்கும்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவர் அவர்களே!!! படிப்பு இருந்தால்தான் இந்த காலத்தில் வாழ்க்கை ...போட்டி நிறைந்த இவ்வுலகில் படிப்புதான் மிக முக்கியம்...மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்....கலையை வளர்க்க நாம் என்ன தொண்டு செய்யவா வந்துள்ளோம் !!!இன்று படிபிருந்தால்தான் வேலைகிடைக்கும் ...வேலை கிடைத்தால்தான் பணம் கிடைக்கும் .அது கிடைத்தால்தான் வாழமுடியும்...எத்தனையோ பேர் நடனம் கற்று விளையாட்டை கற்று ,இசையை கற்று ...வாழ்க்கையில் மிளிர முடியாமல் துவண்டு போயிருக்கிறார்கள் என்று யாருக்கேனும் தெரியுமா...அவர்களுக்குதான் தெரியும் அதன் வலி ....எதற்கும் ஒரு சிபாரிசு வேண்டும்
இப்போது டிவியில் நடத்துகிறார்கள் என்று இசையும்..நடனமும்..கற்க சொல்லி குழந்தைகளை பாடாய் படுத்துகிறார்கள்...இருந்தும் என்ன புண்ணியம்....அதற்க்கு நிறைய செலவு செய்யவேண்டும் ...ஆசை மட்டும் போதாது அதற்க்கு காசும் மிதமிஞ்சி வேண்டும்...பாவர் அறியா பெற்றோர் தெரியாமல் செய்கின்றனர் பாவம்...பிள்ளைகளுக்கு;;;;அதனால் அவர்களுக்கு என்ன கிடைகிறது வாழ்கையில்...
எனது பெற்றோர் எதையும் கற்க என்னை அனுப்பவில்லை ஆனால் நான் ஆடுவேன்...நாடகத்தில் நடிப்பேன்..பேச்சு போட்டியில் கலந்துகொண்டு பரிசு வாங்குவேன்..இது எனது திறமை.
என்னை என் பெற்றோர் கட்டாய படுத்தவில்லை நானே இதில் ஈடுபட்டேன்...uக்கபடுத்தினார்கள் ..கட்டாய படுத்தவில்லை ...ஆனால் படிப்பைத்தான் முக்கியமாக எனக்கு உணத்தினார்கள்...நானும் உணர்ந்தேன்..இஞ்சினீயர் ஆனேன்....எனக்கு வேலை கொடுக்கும்போது படிப்பைத்தான் முக்கியமாக கருதினார்களே ஒழிய எனது மற்ற திறமைகளையல்ல ....இதை அனைவரும் புரிந்து ...குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அதை கட்டாயமாக்காமல் அன்பாக செய்துகொடுக்கவேண்டும் என்று அன்பாக கேட்டுகொள்கிறேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ரம்யா... அருமையான தலைப்பு. கலக்குங்க. வாழ்த்துக்கள். என்னால் வர முடியல. காரணம் இங்க வேண்டாம்... "சொல்ல விரும்பினேன்" பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்வதா

விட மாட்டேன் என்கிறீர்களே எதிரணியினரை ;)
கண்டிப்பாங்க.. கல்விக்கே இப்போ நிறையா காசு அழ வேண்டி இருக்கு.. மிதமிஞ்சி இருந்தால் மட்டுமே கலைக்கு கவனம் செலுத்த முடியும் என்பது மிக சரி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்