பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

மக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)

அதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா.? இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா?

எங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )

பட்டியின் விதிமுறைகள் :
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வனிதா

நன்றி.. ;).. உங்கள் வேலைகளை பொறுமையா முடிங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்வி ஒன்றை மட்டும் நம்பி இருந்தால் அங்கு வாய்ப்புகள் இல்லாத போது அதை தவிர வேறு எந்த துறையிலும் நீங்கள் நுழைய முடியாது.
பிள்ளைகளின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தர பெற்றோர்களுக்கு தானே தலையாய பொறுப்பு. அப்படி இருக்கும்போது அதிகம் செலவு செய்து அந்த பிள்ளைகளுக்கு நாட்டம் இல்லாத படிப்பை கொடுக்க நினைப்பது சரியா அல்லது அவன் விரும்பிய துறையில் அவனை இன்னும் மேல்ன்மேலும் ஊக்குவித்து அதில் ஜொலிக்க செய்ய விரும்புவீர்களா? பெற்றொர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர கடிவாளம் கட்டிய குதிரைகளாக அவர்களை மாற்ற வேண்டாம்.
//நாம் வாழ்வது அவசரமான எந்திரமயமான காலத்தில் கல்வியின்
கட்டாயம் அனைவரும் அறிந்ததே ..//
ஆமாம் நாம் வாழ்வது எந்திரமயமான போட்டி உலகம் எதிரணியினரே நாம் கல்வி ஒன்றை வைத்துக் கொண்டு இந்த உலகத்தை கடக்க முடியாது. நமக்கு பின்னாடி பல திறமைகளுடன் வருபவர்கள் நம்மளை தூக்கி போட்டு விட்டு சென்றுக் கொண்டே இருப்பார்கள்.
படிப்பு படிப்பு என்று இந்த இளமை பருவத்தில் இருந்து விட்டு பின்னர் ஒரு அளவிற்கு நல்ல நிலைக்கு வந்த பின்பு திரும்பி பார்க்கும் போது அந்த குழந்தை நிறைய விஷயங்களை இழந்திருக்கும் அதற்கு நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள் பெற்றோர்களே.
இந்த காலத்தில் இருக்கும் குழந்தைகளின் ஆர்வத்தை பார்த்தால் ஒன்று அல்ல இரண்டு பல விதமான திறமைகளையும் கற்று சும்மா சாதாரணமா இருக்காங்க. அப்படி இருக்கும் குழந்தைகளை இல்ல இல்ல நீ படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்னு எப்படி அவர்களின் வளர்ச்சிக்கு தடை செய்வது. பாட்டு, நடனம், பேச்சாற்றல், எழுத்தாற்றல் இப்படி பல மாதிரி தங்கள் திறமைகளை வளர்த்து வைத்திருக்கிறார்கள். அதற்கு முட்டுகட்டையாக நீங்கள் இருக்காதீர்கள்.

நடுவரே இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தையோட விருப்பத்திற்கு கேற்ப விடுவதுதான் சரி. கல்வி முக்கியம் தான், நமது மூளைக்கு எந்த அளவுக்கு ஏறுமோ அதுவரைக்கும். இன்னைக்கு எதுல தான் போட்டி இல்லை. எல்லாத்துறையிலும் தான் ஆட்கள் தேவைப்படுது. கல்வி மட்டும் கைல வச்சு இருக்கறவங்களுக்கு உடனடியாகவா வேலைக்கிடைக்குது. படிச்சு முடிச்சு கேம்ப்ஸ் இண்டர்வீயூவில் உடனடியா வேலைக்கிடைத்தால் அவனது எதிர்க்காலம் படிப்படியாக முன்னேறுகிறது. வேலை இல்லாதவர்கள் மாற்று வேலையை தேடிக் கொண்டே தங்கள் நேரத்தை விரயம் செய்து கொண்டு இருக்கிறார். கல்விக்கூடவே கலை, நடனம், இசை, பாட்டு, யோகா, விளையாட்டு பலவற்றில் சேர்த்துவிடுவது தவறல்ல.
இந்த உலகத்தில் கல்வியில் மட்டும் முன்னேற வேண்டுமென்றால் ஏன் பள்ளியிலும் மட்டும் நடனம், இசை, பாட்டு, யோகா, விளையாட்டு பலவற்றைக் கொண்டு வரவேண்டும். நல்ல உயர்பதவிக்கு மாணவர்களை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கும் பல பள்ளிகள் வெறும் கல்வியை மட்டுமே போதிக்கலாமே. குழந்தைகளுக்கு இந்த கலைகளில் எதில் ஆர்வம் அதிகமோ அவற்றில் பெற்றோர்கள் சேர்த்து விடுவதால்தான் அவர்களுக்கடைய திறமைய உலகறிய செய்ய இன்று எத்தனை டிவி சேனல்கள் புது புது நிகழ்ச்சியை கொண்டு வருகிறார்கள். உதாரணமா ஜுனியர் சிங்கர், சூப்பர் சிங்கர் இதுப்போன்ற நிகழ்ச்சியை போல் நிறைய சேனல்கள் ஒவ்வொருடைய தனித்திறமையை வெளிக்கொணர பல்வேறு போட்டிகள் நடத்துக்கிறார்கள். ஜெயா டிவியில் சின்ன சின்ன ராகம், பாலிமர் டிவி தமிழகத்தின் சாம்பியன், ஜி டிவியில் சபாஷ் இந்தியா, கேப்டன் டிவியில் ஓவியப்போட்டி ராஜ் டிவியில் பாட்டு க்ளாஸ் (இது வீட்டுல இருந்துக்கிட்டே பாட்டு கத்துக்கற நிகழ்ச்சி) இன்னும் பல.
பெற்றோரின் பங்களிப்பினால் தான் சிறிய வயதிலேயே இந்த கலைகளை எல்லாம் கற்று இந்த மாதிரி போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ள முடிகிறது. பெரியவர்களானதும் படிப்புக்கேற்ற வேலை கிடைத்தாலும் இடையில் கற்றுக் கொண்ட கலைகளை பகுதி நேர பணியாகவும் செய்யலாம். நடனம், பாட்டு க்ளாஸ் என்று தனியே போய் கற்றுமுடியாதவர்க்கு ஆத்மார்த்த சேவையாக ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். இவற்றில் கவனம் செலுத்துவதால் எந்தவித இழப்பும் ஏற்படாது.

நடுவரே மனிக்கவும் வேலை பளு காரணமாக பட்டிக்கு வர முடியவில்லை சரி ஆரம்பிக்கிரேன் என் வாதத்தை

நடுவரே கல்வி மட்டுமே அத்தியாவசியமான தேவை மற்ற கலைகள் அனைத்தும் இதர திரன்களே ஆண்மக்களை விட பெண்களே கல்வியில் அதிகம் முன்னனியில் உள்ளனர் இதனை மருக்க முடியுமா நடுவரே
குழந்தையை மாலையில் படி படி என்று எல்லாரும் சொல்கின்ரனர் ஏன் படிப்பு மட்டுமே முக்கியம் என்பதால் தானே விளையாடு விளையாடு அப்படின்னு எந்த பெற்றோராவது சொல்கிரார்களா

அன்புடன்
ஸ்ரீ

நடுவரே, பள்ளி பருவத்தில் கல்வி என்பது மிக மிக முக்கியம். அதுவும் வாழ்க்கையின் அஸ்திவாரம் எனப்படும் 10ம் வகுப்பு வரை உள்ள கல்வி மிக மிக முக்கியம். அதனால் அரசாங்கம் ஏழை எளிய மக்களும் பள்ளியில் சென்று பயில வேண்டுமென்று இலவச கல்வி திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், 14 வயதிற்க்குட்ப்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்தக்கூடாது என்ற திட்ட்த்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அஸ்திவாரக்கல்வியை பயில்வதன் மூலம் எதிர்காலத்தின் நாடு எப்படியிருக்கும், எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நமது எதிர்காலம் மின்னும் என்பதையறிந்து குழந்தைகள் வாழ வழிவகுக்கிறது.

ஏன் இன்று அனேக வீடுகளில் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கணினி, கைப்பேசி போன்றவற்றை எப்படி கையாள வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதை பார்க்க முடிகிறதே, அதற்கு காரணம் அவர்களுக்கு அதிலிருக்கும் ஆர்வம் என்பதையும் தாண்டி, அவன் கற்ற கல்வியானது ஒரு பொருளை எப்படி இயக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை நடுவர் அவர்களே!!

மேலும், கல்வி ஒருவனுக்கு தன்னம்பிக்கை வளர்க்க பேருதவியா இருக்கிறது என்றால் அது மிகையாகாது. எதிரணி சொல்வது போல கலை மற்றும் விளையாட்டுகளில் வெற்றி பெறவும், தன்னம்பிக்கை என்பது அவசியம் தானே, அந்த தன்னம்பிக்கையை தருவதே கல்வி தானே நடுவரே!!

முதியோர் ஆன பிறகும் படிக்கலாம் என்று எதிரணியினர் சொன்னார்கள், இதற்கு காரணம் என்ன நடுவரே!! சிறுவயதில் படிக்க முடியவில்லை என்றாலும், வயதான பிறகாவது அதை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தானே. பாவம் அவங்களும் எதிரணியினர் போல கற்க வேண்டிய வயதை விட்டுட்டு பின்னாடி வருத்தப்படும் ஜாதியோ என்னவோ, நாமெல்லாம் அப்படியில்லையே நடுவரே, ஒழுங்கா படிச்சோம், இப்ப ஜாலியா இருக்கோம், அதைவிட்டுட்டு படிக்கவில்லை என்றால் இப்படி அறுசுவையில் டைப் பண்ணக்கூட தெரிந்திருக்காதே நடுவரே)

எதிரணி சொல்லும் கலை மற்றும் விளையாட்டு தற்காலிக மகிழ்ச்சியை வேண்டுமானால் தரலாம், ஆனால் நிரந்தரமான இன்பம் நமக்கு கிடைக்கும் பணத்தையும், பொருளையும் விட நமக்கு கிடைக்கும் அறிவில் தானே இருக்கிறது நடுவர் அவர்களே.

முந்தைய காலக்கட்டங்களை காட்டிலும் இப்போது கல்வியின் தரம் உயர்ந்திருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதற்கு காரணம் முந்தைய காலங்களை விட இப்போது கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்த்தே ஆகும். இதிலிருந்தே புரியவில்லையா நடுவரே, எது முக்கியம் என்று. இன்றைய இந்திய அரசியல் விதிப்படி 6லிருந்து 14 வயதிற்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி என்பது உணவு, உடை, உரைவிடம் போன்று ஒரு அடிப்படை உரிமையாகும். அரசு ஏன் கல்வியை மட்டும் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும், கலைகளையும், விளையாட்டையும் optional ஆகவே வைத்துள்ளதன் காரணம் என்ன என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க நடுவர் அவர்களே!! அரசின் விதிகள் என்பது ஒரு தனிமனிதன் வாழ்க்கை நெறியை பார்த்து விதிக்கப்பட்ட்தல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த்தே, அப்படியிருக்க கல்விக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தின் காரணம் நாட்டின் பெரும்பாலான மக்கள் பயனடைய வேண்டும் என்பதால் தானே!!

திருவள்ளுவரின் குறள் இல்லாமல் நம் பட்டியா நடுவரே, இதோ உங்களுக்காக் சில:
” கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.””

அதாவது, கண் இல்லாதவராயினும் அவர் கற்றிருந்தால் கண்பெற்றதற்கு சம்ம், அதுவே கண் இருந்தாலும் கல்லாதவர் கண் இல்லாதவருக்கு சம்ம் என்கிறார், திருவள்ளுவர்.

நடுவரே, கண் இல்லாதவர்களும் கல்வி கற்க இன்று பிரெய்லி முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென்றால் கண்பார்வையற்றவரும் கல்வி கற்க வேண்டுமென்பதால் தானே.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.” அதாவது, ஒரு தலைமுறையில் ஒருவன் கற்ற கல்வி, ஏழேழு தலைமுறைக்கும் உதவுமாம். ஆனால் கலை அப்படியில்லை நடுவர் அவர்களே, வேண்டுமென்றால் நான் இன்னாருடைய மகன், பேரன் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாமே தவிர வேறு பயனில்லை.

நடுவரே, இன்று எத்துனை ஆயிரம் கல்விக்கூடங்கள் நம் நாட்டில் என்பது உங்களுக்கே தெரியும், உடனே கல்விக்கூடங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தானே உருவாகின்றன என்று எதிரணியினர் சொல்லக்கூடாது. கல்விக்கூடங்கள் வேண்டுமானால் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் உருவாகலாம், ஆனால் கல்வி கற்க வருவோரின் எண்ணிக்கை கல்விக்கூடங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக தானே இருக்கிறது.

நடுவரே, நீங்களே பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி, மேனேஜ்மெண்ட் கல்லூரி போன்றவை நம் நாட்டில் எத்தனை இருக்கிறது என்று கணக்கிடுங்கள். அதே நேரத்தில் நடனப்பயிற்சி கல்லூரி, விளையாட்டு கல்லூரி என்று ஏதாவது இருக்கிறதா என்றும் கணக்கிடுங்கள், அப்படியே இருந்தாலும் அவை கல்வி கல்லூரிகளுடன் கணக்கிடும் போது 1% கூட வராது என்பது உங்களுக்கே புரிந்துவிடும்.

நடுவரே, கொஞ்ச நேரம் மூச்சு விடுங்க, அடுத்த பதிவில் வந்திட்டே இருக்கேன்.

அன்புடன்
பவித்ரா

நடுவரே, தோழி நிறைய சேனல்களில் வரும் ப்ரோகிராம் பற்றி நிறைய சொன்னாங்க, நான் ஒண்ணே ஒண்ணு கேட்கிறேன் நடுவரே, அந்த ப்ரோகிராமில் பாடும் குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு போகிறார்கள் தானே, அதுவும் அவர்களுக்கு பள்ளியில்லாத தருணத்தில் தானே அந்த ஆடிஷனே இருக்கும், இந்த மாதிரி பாடும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ஊக்கம் அளிக்கிறார்கள், ஆனால் அதே ஆசிரியர்கள் அவர்கள் சரியா படிக்காம மார்க் கம்மியா எடுத்தாங்கனு வைங்க, பாட்டு மட்டும் வாய் கிழிய பாடத்தெரியுது, ஒழுங்கா படிக்க தெரியாதா’னு தான் கேட்பாங்க, இதை மறுக்க முடியுமா?? நாங்க பாடல் தேவையில்லை என்று சொல்லவில்லை நடுவர் அவர்களே, பாடம் தான் முதலில், பாடல் பிறகு என்று தான் சொல்லுகிறோம்.

//ம் கல்வி ஒன்றை வைத்துக் கொண்டு இந்த உலகத்தை கடக்க முடியாது. // அய்யோ, நடுவரே, எத்தனை முறை சொல்லுவது, நாங்கள் சொல்லுவது முதலுரிமை கல்விக்கு தான் என்று தானே. கொஞ்சம் தெளிவா எடுத்து சொல்லுங்க நடுவரே. அந்த குழந்தை அப்போது நிறையவற்றை இழந்திருந்தாலும், தான் இன்று நல்ல நிலையில் இருக்கும் போது, அதை இழந்ததால் தான் என்னால் இன்று இந்த நிலையை அடைய முடிந்தது என்று தன் பெற்றோரின் கட்டுப்பாட்டை எண்ணி மகிழ்ச்சிதான் அடைகிறது. நீங்களே யோசித்து பாருங்க நடுவரே, அன்னிக்கு சின்ன வயசில் உங்க அப்பாவும், அம்மாவும் “ஏய் ரம்யா, சும்மா என்னடி ரோட்டில் விளையாட்டு, வந்து ஒழுங்காப்படி’னு”உங்க காதை திருகு திருகு’னு திருகியதால் தானே இன்று நான் நல்ல நிலையில் இருக்கேன் என்று தினமும் நினைச்சுட்டு தானே இருக்கீங்க.

நெல்லிக்காய் முதலில் கசக்கத்தான் செய்யும் நடுவரே, அது மாதிரி பெற்றோரின் கண்டிப்பு இன்று கசந்தாலும், நாளை நல்ல நிலைமையில் இருக்கும் போது தண்ணீர் குடித்ததை போன்று ஜிலு ஜிலு’னு இருக்குமே!! இதை புரிந்து கொண்டோர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இருப்பவர்கள், புரிந்து கொள்ளாதோர், அன்னிக்கே எங்க அம்மா சொன்னாங்க, ஒழுங்கா கேட்டிருந்தா என் லைஃப் எப்படி எப்படியோ இருந்திருக்கும் என்று புலம்ப மட்டும் தான் முடியும்.

அன்புடன்
பவித்ரா

நேற்று வரை பட்டிக்கு பதிவு போட ஆளில்லாமல் இருந்தது, இன்று நடுவரே இல்லாமல் போயாச்சா??? நடுவர் ரம்யா எங்க போனாங்க என்றே தெரியலை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு பாதுஷா பரிசாக தரப்படும்.

அன்புடன்
பவித்ரா

நடுவர் இங்கே

இங்க தான் பா இருக்கேன். ;)

நேத்தெல்லாம் பட்டியை தூங்க வைத்து விட்டு இன்று நடுவரையா தேடுகிறீர்கள்.. தீர்ப்பு கொடுக்க போவதில்லை.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

யாழினி

வாதம் பெருகிட்டே போகுது ;)

//நாம் கல்வி ஒன்றை வைத்துக் கொ

கண்டிப்பாக ஏர்றுக் கொள்ளப் பட வேண்டிய வாதம்.. குழந்தை பருவத்தை வீணடித்துவிட வேண்டாம் என கூறுகிறார்...ண்டு இந்த உலகத்தை கடக்க முடியாது. நமக்கு பின்னாடி பல திறமைகளுடன் வருபவர்கள் நம்மளை தூக்கி போட்டு விட்டு சென்றுக் கொண்டே இருப்பார்கள்//

இது சரிதான்.. அப்படி ஒரு போட்டி போயிட்டு இருக்காமா.... நீங்க வேற

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வினோஜா

வாங்க.. நீங்க கலை அணியா... ;)

//சூப்பர் சிங்கர் இதுப்போன்ற நிகழ்ச்சியை போல் நிறைய சேனல்கள் ஒவ்வொருடைய தனித்திறமையை வெளிக்கொணர பல்வேறு போட்டிகள் நடத்துக்கிறார்கள்//

அப்படி போடுங்க.. இந்த நிகழ்ச்சியை பார்த்து நான் கூட எங்க அம்மாகிட்ட சண்டை போடுவேன். எனக்கு பாட்டு கத்துக் கொடுத்திருக்கலாமென ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்