பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

மக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)

அதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா.? இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா?

எங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )

பட்டியின் விதிமுறைகள் :
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

ஸ்ரீமதி

வாங்க கல்வி அணியா?

அதானே... படி படினு தானே பெத்தவங்க சொல்றாங்க.. நம்ம அம்மா அப்பாக்கு இல்லாத அக்கறையா?

அவங்களுக்கு தெரியும் எதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென என்று கூறுகிறார்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பவித்ரா...

விடாது வேலை இருந்தாலும் தொடர்ந்து வாதமா.. குட் குட்..கீப் இட் அப்

//இலவச கல்வி திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.//

கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய வாதம்

//அந்த தன்னம்பிக்கையை தருவதே கல்வி தானே நடுவரே!//

ஆஹா.. என்ன ஒரு வரி...

கண்டிப்பாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது கல்வியே
//திருவள்ளுவரின் குறள் இல்லாமல் நம் பட்டியா நடுவரே, இதோ உங்களுக்காக் சில://

பாவம் அவரு.. திருக்குறள் எதுக்கு பயன்படுதோ இல்லையோ நம்ம பட்டிக்கு நல்லாவே பயன்படுது ;)

//கல்வி கற்க வருவோரின் எண்ணிக்கை கல்விக்கூடங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக தானே இருக்கிறது//

எப்படி இப்படி எல்லாம்...;0

//நடுவரே, கொஞ்ச நேரம் மூச்சு விடுங்க, அடுத்த பதிவில் வந்திட்டே இருக்கேன்.

எங்க இந்த பட்டியில் நடுவர் ஜாலியா தான் இருக்காரு.. இன்னும் மூச்சு அடைக்கம் அளவிற்கு பதிவுகள் இல்லை ;(

//ஏய் ரம்யா, சும்மா என்னடி ரோட்டில் விளையாட்டு, வந்து ஒழுங்காப்படி’னு”உங்க காதை திருகு திருகு//

போச்சுடா... நடுவரை அறுசுவையில் பட்டியில் வைத்து அவமானப்படுத்தியதால் உங்களுக்கு 10 மார்க் மைனஸ்.. ;)

எங்க அம்மா அப்பா எல்லாம் காதை பிடித்து திருகுலையாக்கும்.. நான் நல்ல பிள்ளை ;) ( எப்படி எல்லாம் கண்டுபிடிக்கறாங்க.. ஒரு க்ரூப்பாத் தான் அலையராங்கப்பா ;) )

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//இப்போது உள்ள பெற்றோர் குழந்தைகளை ஒரு ரோபோ பொம்மை மாதிரி ஆக்கி வைத்திருக்கிறாங்க. காலையில் எழுந்து ஸ்கூல்,பின் வீட்டுக்கு வந்த உடன் ஹோம்வொர்க்,அடுத்து பாட்டு, டான்ஸ் என்று அனுப்பி தங்கள் குழந்தையை வறுத்து எடுக்கிறாங்க//

நடுவர் அவர்களே, மற்ற கலைகளில் நாட்டம் இல்லாத குழந்தைகளா இப்போது விளையாட்டு, டான்ஸ், பாட்டு, பேச்சுப்போட்டி, ஓவியம் இன்னும் பிற கலைகளை பின்னியெடுக்கிறார்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//நீச்சல் கற்றுக்கொள்ள நினைக்கும் யாரும், முதலில் கடலுக்கு போவதில்லை, சின்ன குளத்தில் தான் நீந்த கற்றுக் கொள்கிறார்கள், அதுவும் சுரைக்காயை கட்டிக்கொண்டு நீந்த கற்றுக்கொள்கிறார்கள்//

நடுவர் அவர்களே, இப்போதுள்ள குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். இவர்கள் சொல்வதை தான் பெற்றோர்கள் கேட்க வேண்டியுள்ளது. அதனால் சுரைக்காயை கட்டிக்கனுமா? பூசணிக்காயை கட்டிக்கனுமான்னு அவங்களே முடிவு பண்ணிப்பாங்க. எந்த விஷயத்துலயும் குழப்பம் இல்லாம தெளிவாகவே முன்னேறி வருகிறார்கள். சுரைக்காயையோ, கத்தரிக்காயையோ கட்டிட்டு குளத்துல இறங்கினா போதுமா? நீச்சல் கத்துக்க வேணாமா? எங்கே கத்துக்கறாங்க. இவங்க சொல்படி பார்த்தா.

//எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நாளை பிரகாசமாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளவும், கல்வியறிவு என்பது மிக மிக முக்கியம். //

இட்லி கடையும், ஆப்ப கடையும் போட என்ன பிரகாசம் தேவையாயிருக்க முடியும் நடுவர் அவர்களே. இட்லிக்கு எவ்வளவு அரிசி, எவ்வளவு உளுந்து போடவேண்டும் என சொல்லி தந்திருப்பார்களா? நான் சொல்வது அடிப்படை கல்விதகுதி கூட பெறாத கடை வைத்திருப்போரை. அவர்கள் எந்த கல்வியை நம்பி இருப்பார்கள்? உடனே எதிரணி ரெடியாக இருப்பார்கள். கேட்டரிங்கில் எல்லாம் சொல்லித்தருவார்கள் என்று அதற்கு தான் நான் முன்பே சொல்லிவிட்டேன்.

நடுவரே மற்றவற்றிக்கு விளக்கம் நாளை தருகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா

வேலை பளுக்கு இடயிலும் பட்டிக்கு வருகை..குட்

//இட்லி கடையும், ஆப்ப கடையும் போட என்ன பிரகாசம் தேவையாயிருக்க முடியும் நடுவர் அவர்களே.//

அதானே.. அப்ப படிக்காத் மேதை சொல்வது எப்படி ;) அனுபவத்தில் எல்லாம் வருவதில்லை.. அப்படி தான் எனக் கூறுகிறார்கள் கல்பனா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பல பேர் நிரைய திரைமைகளை வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்காமல் அலைவதை சொல்லி மாலாது நடுவரே பார்க்கவே ஒரு பிச்சைகாரனை போல் அலைவார்கள் அனால் அவர்களின் உள் பல திரைமைகள் இருக்கும் இதனை கொண்டுவர பல டிவி நிகழ்ச்சிகள் இருந்தாலும் இன்னும் நிரைய பேரின் திரமைகள் எல்லாம் வீனாக தான் உள்ளது நடுவரே . கல்வியினால் பலர் முன்னேரி கொண்டிருக்கதான் செய்கிரார்கள் சில பேர் மட்டுமே படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையை தான் செய்வேன் என்று அடம் பிடிக்கிரார்கள் அவர்களை ஓரமாக தள்ளி விடுவோம்
நடுவரே கலையில் ஆர்வம் கொண்டு உள்ளவர்கள் எத்தனையோ பேர் இந்த நாட்டில் இருந்து ஏன் ஒலிம்பிக்கில் இந்தியா தோல்வியை சந்திக்கிரது வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது புத்தி கூர்மையையும் , அறிவையும் மட்டுமே பார்த்து பயப்படுகின்ரனர் நடுவரே.

நன்றாக படித்து முதல் மாணவனாக வரக்கூடிய மாணவனையோ அல்லது மாணவியையோ உன் இஷ்டம் நீ எப்படி வேண்டும்னாலும் இரு அப்படின்னு பெத்தவங்க விட்டுட்டா அந்த பிள்ளைகளின் நிலைமையை யோசித்து பாருங்க நடுவரே நன்றாக படிகும் பிள்ளைகளை கலையில் கவனம் செலுத்த விட்டால் அவர்களின் மைண்ட் கண்டிப்பா டைவர்ட் ஆகிடும் நடுவரே அப்பரம் என் பொண்ணூக்கு படிப்பே வரலன்னு சொல்லுவதால் என்ன நடக்கும்.

அன்புடன்
ஸ்ரீ

வணக்கம்.
கல்வி அணியினர் ரொம்ப காமெடி பண்றாங்களே. கல்வி கல்வின்னு கூவுறாங்களே இந்த காலத்தில் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கிறது என்று அவர்களால் உறுதியாக சொல்ல முடியுமா நடுவர் அவர்களே?. செம்மறி ஆட்டு மந்தை போல ஓரே விதமான படிப்பை படித்து விட்டு தற்போது வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களை கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். எங்க அப்பா அம்மா படிக்க சொன்னதால இந்த படிப்பை படித்தேன் இப்போது வேலை கிடைக்காமல் அல்லாடுகிறேன் என்ற பதில்தான் வரும். பெற்றோர்களே உங்கள் ஆசைகளுக்காக ஏன் பிள்ளைகள் வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள்?. ஏன் அவர்கள் பிழைப்பில் மண் அள்ளி போடுகிறீர்கள். இயற்கையாக அவர்களுக்கு என்ன வருகிறதோ அதை கற்று கொள்ள நீங்கள் முட்டுகட்டை போடாதீர்கள்.
உங்களுக்கு இந்த திருவள்ளுவர் வேற கிடைச்சிட்டாரு, பாவம் அவரை விடுங்க!. எல்லாத்துக்குமே அவரையே மேற்கோள் காட்டினா அவர் என்னங்க பண்ணுவார்?.
படி... படின்னு பசங்க உயிரை வாங்கி அவங்க தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு கொண்டு போய் விடறீங்க. பெற்றோர், ஆசிரியர்கள் தொல்லை தாளாமல் செத்து மடிந்த பிள்ளைகள் எத்தனையோ பேர். திருப்பி தர முடியுமா நீங்கள் கற்ற கல்வியால்?. சகல கலைகளையும் அவர்கள் கற்று கொள்ள உதவுங்கள். அப்போதுதான் அவர்கள் வாழ்க்கை நிறைவானதாக அமையும்.
கிராமங்கள்ல ஒரு பழமொழி சொல்வாங்க "படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்"
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது". புரிஞ்சு நடந்துக்கோங்க.

அன்புடன்
THAVAM

நடுவரே, குழந்தைகளின் விருப்பம் மிகவும் அவசியம். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நமது விருப்பத்தை அவர்களிடம் திணித்தால் அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக மாறிவிடும்.நாம் குழந்தைகளின் விருப்பம் போல் செயல்பட்டால் தான் அவர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் தனது குறிக்கோளை நோக்கி ஆர்வமாகவும் செயல்படத் தொடங்குவர். இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு நாம் இடும் வித்தாகும். அது மட்டுமின்றி இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு வெறும் ஏட்டு படிப்பு மட்டும் எவ்விதம் உதவிட முடியும்?

வாழ்க வளமுடன்!
இந்நாள் இனிய நாளாகட்டும்.

நடுவர் அவர்களே. //பல பேர் நிரைய திரைமைகளை வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்காமல் அலைவதை சொல்லி மாலாது நடுவரே பார்க்கவே ஒரு பிச்சைகாரனை போல் அலைவார்கள்//
என்று அந்த அணியில் சொல்பர்வர் பாவம் பிழைக்க தெரியாதவர். அனைத்து திறனும் பெற்றவர். அகிலத்தையே ஆளலாம் என்று ஒரு பழமொழி இருக்கு. பாவம் அது அவருக்கு தெரியாது போல. நடுவர் அவர்களே படிப்பு படிப்பு என்று படித்துக்கொண்டே இருப்பவர்கள் பாதி பைத்திய காரனாகத்தான் இருகின்றார்கள். படிக்காத மேதாவிகளே அதிகம். எல்லோருக்கும் எடுத்துகாட்டாக விளங்கிய காமராஜர், புரட்சி தலைவர், கண்ணதாசன், எந்த காலேஜ் போய் பட்டம் வாங்கினார்கள். ஏன் நம்ம நாட்டையே ஆண்டு கொண்டிருக்கும் கலைஞர் எந்த காலேஜ் போனார் அவர் இந்த தமிழ்நாட்டையே ஆளவில்லையா. படித்து பட்டம் வாங்கினால் மட்டும்தான் வாழ்வில் உயரவேண்டும் என்று கிடையாது. அவர் அவருக்குள்ள திறமையை வைத்து எதைவேண்டுமானாலும் சாதிக்க முடியும். ஏன் இந்த நாட்டையே ஆள முடியும் என்பதற்கு எடுத்துகாட்டாக உள்ளனர்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

\\\\\எங்க அப்பா அம்மா படிக்க சொன்னதால இந்த படிப்பை படித்தேன் இப்போது வேலை கிடைக்காமல் அல்லாடுகிறேன் என்ற பதில்தான் வரும்.//////
ஏனுங்கோ எல்லாரும் படிப்புக்கேற்ற வேலைதான் செய்யனும்ன்னு நினைச்சா எப்படி சாப்டுவீங்கோ ஏன் விவசாயம்,சிறுதொழில்,இதெல்லாம் எதுக்குங்கோ இருக்கு ஏன் படிக்காதவங்க மட்டும் தான் இதெல்லாம் செய்யனுமா படிச்சவங்க இதெல்லாம் செய்ய கூடாதா படிப்பு என்பது அறிவு வளக்க மட்டும் தானுங்கோ அத வளத்துகிட்டு எந்த வேலை வேலை வேண்டுமானாலும் செய்யலாம் இதில் தவரில்லை.அப்படியே படிப்புக்கேற்ற வேலை கிடைத்தாலும் தொடரலாம்

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்