பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

மக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)

அதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா.? இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா?

எங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )

பட்டியின் விதிமுறைகள் :
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

\\\\\\படி... படின்னு பசங்க உயிரை வாங்கி அவங்க தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு கொண்டு போய் விடறீங்க. பெற்றோர், ஆசிரியர்கள் தொல்லை தாளாமல் செத்து மடிந்த பிள்ளைகள் எத்தனையோ பேர். திருப்பி தர முடியுமா நீங்கள் கற்ற கல்வியால்?. சகல கலைகளையும் அவர்கள் கற்று கொள்ள உதவுங்கள். அப்போதுதான் அவர்கள் வாழ்க்கை நிறைவானதாக அமையும்.//////
ஒவ்வொரு ஆசிரியரும்,பெற்றோர்களும் தன் பிள்ளை படிப்பில் கெட்டிக்காரனாக இருக்க வேண்டும் அப்படின்னு நினைச்சுதான் அவர்கள் அவங்க கடைமையை செய்கிரார்கள் இதுக்காக ஒரு கதையையும் நான் இங்கு எடுத்து கூரவுள்ளேன் நடுவரே
ஒரு சிர்ப்பி சிலை வடிக்கும் போது அய்யோ வலிக்குதே அப்படின்னு அழுதுச்சாம் கல் உடனே அத தூக்கி போட்டுட்டு இன்னொரு கல்லை எடுத்து அம்மன் சிலை வடித்தாராம் அந்த சிர்ப்பி அந்த கல் எவ்வளவு வலி ஆனாலும் பொருத்துக் கொண்டு இருந்திருக்கிரது சிப்பமான அம்மன் சிலையாய் அனைத்து வலிகளையும் பொருத்து உள்ளே அனைவரும் வணங்கும் அம்மனாய் உள்ளது ஆனால் அழுத கல் படிக்கல்லாய் அனவரின் கால் மிதிப்பட்டு இருக்கிரது . எனவே நடுவரே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்

அன்புடன்
ஸ்ரீ

சிற்பியுடைய உளியின் கொத்துகள் தாங்காமல் கல்லே அழுததென்றால் உயிருள்ள இளம் பிஞ்சுகள் பெற்றோரின், ஆசிரியர்களின் அளவு கடந்த தொல்லைகளை எப்படி தாங்கிக் கொள்வர்?.

அன்புடன்
THAVAM

\\\\\சிற்பியுடைய உளியின் கொத்துகள் தாங்காமல் கல்லே அழுததென்றால் உயிருள்ள இளம் பிஞ்சுகள் பெற்றோரின், ஆசிரியர்களின் அளவு கடந்த தொல்லைகளை எப்படி தாங்கிக் கொள்வர்?.////
நடுவரே பெற்றோர்களும்,ஆசிரியர்களும் உளியும் சிர்ப்பியும் போல இப்ப அவங்க சொல்வது வலிக்குதுனா படிக்கல்லா மட்டுமே இருக்க முடியும் அவர்கள் சொல்வதை கேட்டு நடக்கும் பிள்ளைகளால் மட்டுமே சிர்ப்பமாக ஆக முடியும் இது பெற்றோர்கள் தவரோ ஆசிரியர் தவரோ அல்லவே

அன்புடன்
ஸ்ரீ

நடுவர் அவர்களே , தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும் .

எங்கள் அணி கல்வியே என்ற அணி.
குழந்தைகளுக்கு முதலில் அவசியமானது கல்வியே.
ஒரு வீட்டிற்கு எப்படி அடித்தளம் (பேஸ்மென்ட் ) மிக அவசியமோ கல்வியும் மிக அவசியம்.அடித்தளம் ஆடிப் போனால் (பேஸ்மென்ட் வீக் ) எவ்வளவு உயர கட்டிடமும் ஒரு நாள் சரிந்து விடும்,பயன்தராது. அது போல் அடிப்படை கல்வி இல்லாத, மற்ற துறை ஈடுபாடு பயன் தராது.

ஒரு துறையில் ஒருவர் சிறந்து விளங்க வேண்டுமெனில் அந்த துறை பற்றிய விளக்கங்களை பெறவும் கல்வி முக்கியமானதாகும்.நம் திருவள்ளுவரை நினைவு கூராமல் இருக்க முடியாது.
அதை பிறகு பதிவு செய்கிறேன் நடுவர் அவர்களே.

\\\\\ஏன் நம்ம நாட்டையே ஆண்டு கொண்டிருக்கும் கலைஞர் எந்த காலேஜ் போனார் அவர் இந்த தமிழ்நாட்டையே ஆளவில்லையா./////////
அவர் திரமயால் முன்னேரி தமிழ் நாட்டையே ஆண்டுக்கொண்டிருந்தாலும் அவருக்கு பல டிகிரி முடித்தவர்கள் ஏன் வேலை செய்து கொண்டிருக்கிரார்கள் .

அன்புடன்
ஸ்ரீ

\\\\\\\குழந்தைகளின் விருப்பம் மிகவும் அவசியம். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நமது விருப்பத்தை அவர்களிடம் திணித்தால் அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக மாறிவிடும்.நாம் குழந்தைகளின் விருப்பம் போல் செயல்பட்டால் தான் அவர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் தனது குறிக்கோளை நோக்கி ஆர்வமாகவும் செயல்படத் தொடங்குவர்.//////
சரி நடுவரே அவங்க போக்குலயே விடுவோம் ஒரு சின்ன குழந்தை என்ன கேக்குது கடைக்கு போனா சாக்லேட் 1முறை வாங்கி தந்தா அதே பழகிடும் அப்பரம் தொடர்ந்து அதுவே கேக்குது பாப்பா அந்த சாக்லேட் சாப்ட்டா பல் எல்லாம் சொத்தையாகும்ன்னு அம்மாக்கு மட்டுமே தெரியும் அந்த பிஞ்சு குழந்தைக்கு தெரியாது அப்போ அந்த குழந்தையின் மகிழ்ச்சிக்காக நாம அத விடலாமா சொல்லுங்க நடுவரே
\\\\\வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக மாறிவிடும்//////
ஒவ்வொரு பெற்றோரும் இது சரி இது தப்புன்னு குழந்தைகளுக்கு ம்அழகா எடுத்து கூரலாம் அப்படி சொன்னால் அவங்க புரிந்து கொள்வாங்க அவங்களுக்கும் அம்மா நம்ம நல்லதுக்குதானே சொல்ராங்கன்னு தோனும் அப்ப அவங்க அம்மாவ தங்களுக்கு ரோல் மாடலா நினைப்பாங்களே தவிர எப்படி முட்டுகட்டையா நினைப்பாங்க

அன்புடன்
ஸ்ரீ

கல்லை செதுக்கும் சிற்பி கூட கல் அழுததென்று அந்த கல்லை மேலும் கொத்தாமல் விட்டு விட்டான். ஆனால் பெற்றவர்களோ பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பை படிக்க விடாமலும். பிள்ளைகள் படும் வேதனையை பாராமுகமாகவும் இருக்கிறார்களே! இது பெற்றவர்கள் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்பா? சுய நலமா?.
நாங்களும் திருக்குறளை மேற்கோள் காண்பிக்கிறோம். பாருங்க. ஒரு செயலை ஒருவனிடம் ஒப்படைக்கும் முன் அந்த செயலை அவன் முடிப்பானா என்று ஆராய்ந்து அந்த செயலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். அது போல நம்ம பிள்ளை எதை படிப்பான் என்று ஆராய்ந்து அதை படிக்க வைக்க வேண்டும்.

அன்புடன்
THAVAM

\\\\\\கல்லை செதுக்கும் சிற்பி கூட கல் அழுததென்று அந்த கல்லை மேலும் கொத்தாமல் விட்டு விட்டான். ஆனால் பெற்றவர்களோ பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பை படிக்க விடாமலும். பிள்ளைகள் படும் வேதனையை பாராமுகமாகவும் இருக்கிறார்களே! இது பெற்றவர்கள் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்பா? சுய நலமா?./////////
நடுவரே எதிர் அணியினர் என்ன சிருபிள்ளைதனமாக பேசிக்கொண்டிருக்கிரார்கள் விளக்கம் கொடுக்கிரேன் கேலுங்க குழந்தை பார்க்கும் எல்லாத்தையும் ஆசை படும் ஆனா எது நல்லது எது கெட்டதுன்னு பெற்றவர்களுக்கு எப்படி தெரியாம போகும் அத வச்சி தான் இது படிச்சா வர காலத்துக்கு நல்லது அப்ப அவங்க நல்லா இருப்பாங்க அப்படின்னு நினைச்சு தான் படிக்க வைக்கராங்க இதனை கண்டிப்பா பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும் நடுவரே இப்போ சொல்லுங்க நடுவரே பாப்பா ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும்ன்னு ஆசை படுகிரது அம்மா வாங்கி தர மருக்கராங்க எப்படியோ அடம்பிடித்து வாங்கி சாப்பிடுகிரது பாப்பா இரவில் சளி, காய்ச்சல் அப்படின்னு அவங்கதான் தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டலா ஓடராங்க ஓடுவது என்னவோ பெற்றோர் தான் ஆனா அந்த வலி அதை நீங்க அனுபவிக்க கூடாதுன்னு தான் அவங்க அப்பவே ஐஸ்க்ரீம் வேணாம்ன்னு சொனாங்க இது பெற்றவர்கள் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்பா? சுய நலமா?. நிங்களே சொல்லுங்க

அன்புடன்
ஸ்ரீ

நடுவர் அவர்களே ,

குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பள்ளி படிப்பு,நடனம்,பாட்டு என்று அடுத்தடுத்து அவர்களுக்கு ஒய்வு இல்லாமல் இயங்க செய்தால் அவர்கள் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோசத்தையும் இழந்துவிடுகிறார்கள்.விடுமுறையில் கூட அவர்களை விடாமல் இந்த கிளாஸ் அந்த கிளாஸ் என்று அவர்கள் மேல் திணிப்பதை தான் நாங்கள் வேண்டாம் என்கிறோம்.
மேலும் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு விளையாட்டு,ஆர்ட் & கிராப்ட் மற்றும் நிறைய துறை சார்ந்த வகுப்புகள் உள்ளன. அதை முழுமையாக கற்று கல்வியிலும் சிறந்து விளங்கி நல்ல நிலையை எட்டியப்பின், அவர்களுக்கு ஆர்வமிருப்பின் மற்ற கலைகளையும் கற்கலாம். இன்று எத்தனை பேர் 30,40 ஏன் 50 வயதிலும் பாட்டு,ஆர்ட் ,கம்ப்யூட்டர் என கற்று சிறந்து விளங்குகின்றனர்.

குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பொறுப்பு மட்டுமில்லாமல் அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற அக்கறை பெற்றவர்களுக்குத்தான் உண்டு. அந்த அக்கறை அதிகமாகி (தான் இழந்ததை )அவர்கள் மேல் திணிக்காமல் ,குழந்தைகளை குழந்தைகளாகவே (இயல்பு மாறாமல்) இருக்க விடுங்கள்.plzzzzzzzzzz

நடுவரே...
{*****கல்லை செதுக்கும் சிற்பி கூட கல் அழுததென்று அந்த கல்லை மேலும் கொத்தாமல் விட்டு விட்டான். ஆனால் பெற்றவர்களோ பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பை படிக்க விடாமலும். பிள்ளைகள் படும் வேதனையை பாராமுகமாகவும் இருக்கிறார்களே! இது பெற்றவர்கள் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்பா? சுய நலமா?.***************}
அந்த ஒரு நாள் மட்டும் அழாமல் இருந்திருந்தால்,தினம் தினம் மிதிப் பட்டு அழ தேவை இல்லை
அந்த கல்.....இது ஏன் புரிய மாட்டேன்கிறது நடுவரே எதிர் அணிய்னருக்கு.
எந்த பெற்றோராலும் குழந்தைக்கு வேதனை கொடுக்க முடியாது.
அதை ஏன் வேதனை என்று சொல்லுகிறீர்கள்.பிற்காலத்தில் அவர்கள் சாதிக்கப்போகிறார்கள்.
சோ வேதனை அல்ல சாதனை..........
எதில் இல்லை சுயநலம்.....சூப்பர் சிங்கர் அது இது என அனுப்புகிரர்களே அது மட்டும் என்னவாம்?
பாண்டியில் பத்து லட்சத்திற்கு வீடு...சினிமாவில் வாய்ப்பு ,இது போன்று அந்த பெற்றோரின் சுயநலம் தான் நடுவரே..
குழந்தைகளுக்கு எந்த வேலை சொன்னாலும் பிடிக்காது.செய்யவும் மாட்டார்கள் நடுவரே.....
சோ முடிப்பான, முடிக்க மாட்டானா?என்று ஆராய்ந்துகொண்டு இருந்தால் ஒன்றும் சாதிக்க முடியாது.......

ஹசீன்

மேலும் சில பதிவுகள்