பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

மக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)

அதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா.? இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா?

எங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )

பட்டியின் விதிமுறைகள் :
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

*********பாருங்க. ஒரு செயலை ஒருவனிடம் ஒப்படைக்கும் முன் அந்த செயலை அவன் முடிப்பானா என்று ஆராய்ந்து அந்த செயலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். அது போல நம்ம பிள்ளை எதை படிப்பான் என்று ஆராய்ந்து அதை படிக்க வைக்க வேண்டும்.**********
மனிதனால் முடியாத காரியம் என்று ஒன்ருமே இல்லை ஒரு காலத்தில நினைத்தே இருக்க மாட்டாங்க நம்ம முன்னோர் நிலாக்கு போவோம்ன்னு அது நடந்ததே எப்படி முயர்ச்சியினால் மட்டுமே

அன்புடன்
ஸ்ரீ

நடுவர் அவர்களுக்கு என் முதற்கண் வண்க்கம்;)

நடுவர் அவர்களே! எந்த பக்கம் பேச வேண்டும் என்று யோசிக்கவே இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. உங்க மனதில் என்னா தோனுது னு எனக்கு தெரியுது நல்லவேளை பட்டி முடியுரதுகுள்ளா வந்திங்களே அப்படினுதானே நினைக்கிரிங்க;)))

// கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்// -திருவள்ளுவர்
நடுவர் அவர்களே நான் எந்த பக்கம் பேச போகிரேன் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிரேன். ஆம் கல்வியே என்றுதான்.

இங்கு கண்ணுடையர் என்பது கற்றவர்களையும்
புண்ணுடையர் என்பது கல்லாதவர்களையும் குறிக்கிரது நாம் அறிந்ததே இதில் இருந்து நமக்கு என்னா தெரிகிரது. நடுவர் அவர்களே அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை கல்விக்கு முக்கியதுவம் கொடுத்து வருகிரார்கள் என்பது தெளிவாகிறது.

காமராஜர் அவர்கள் ஏழை குழந்தைகளுக்கும் கல்வி அறிவு பெற வேண்டும் என்று சத்துணவு ,சீருடை,காலணிகள் போற்றவற்றை இலவசமாக கொடுத்தார்கள்.ஏன் இன்று வரை படிக்கும் பிள்ளைகளுக்கு அனேக நலதிட்டங்களை நம் அரசு செய்து வருகிறாது.

இப்படியெல்லாம் எல்லாம் நம் முன்னோர்கள் முக்கியத்துவபடுத்தும் கல்வி நம் பிள்ளைகளின் வாழ்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை, நாம் பிள்ளைகளுக்கு கற்ப்பிப்பதில் அதிக கவனமாக இருக்கவேண்டும்.

உன்னை போல பிறரையும் நேசி.

நடுவரே, இட்லி கடை போட படிப்பு தேவையில்லை என்றாலும் அந்த தொழிலும் வெற்றி பெற நடத்த படிப்பு கட்டாயம் வேண்டும். நடுவரே நாங்க ஒண்ணும் கலைக்கு எதிரியில்லை நடுவரே, நீங்களே சொல்லுங்க, ஒருவனுக்கு வேலை கிடைத்தால் தானே அவன் ப்ரோமோஷனுக்கு ட்ரை பண்ணுவான், இவங்க எல்லாரும் வேலையே இல்லாமல் ப்ரோமோஷன் வேண்டும் வேண்டும் என்று கூவிக்கிட்டே இருந்தா எப்பூடி??? படிக்காதவங்க இட்லி கடையோடு நிறுத்திடுவாங்க, படிச்சவங்க இட்லி கடையை ஸ்டார் ஹோட்டலாக மாற்றும் அளவிற்கு வல்லமை படைத்தவர்கள்.

நடுவரே, விவசாயத்துக்கும் படிப்பு இருக்கே, விவசாயம் என்று குலதொழிலாக நம் நாட்டில் செய்து வந்தாலும், அதுக்கென்றே தனியாக கல்லூரி என்கிற வரைக்கும் இன்று அந்த படிப்பு உயர்ந்துள்ளது. விவசாயம் படித்தால் வயலில் மட்டுமே வேலை செய்யமுடியும் என்கிறது எதிரணியினரின் குறுகிய எண்ணம் நடுவரே, இன்று வங்கியிலும் விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பு படித்தவருக்கு தனி மரியாதை..

எதிரணி சொல்வது போல் சொல் பேச்சு கேட்காத குழந்தைகள் இருக்கக்கண்டு தானே இன்று பல செய்தி தாள்களில் 4 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி’னு செய்தி வருவதெல்லாம் இப்படி பேசியதால் தான். திருவள்ளுவர் சொல்லாத கருத்துக்கள் எதுவுமே இல்லையாம், இது தான் உண்மை நடுவரே, அதனால் எல்லா பட்டிக்கும் அவரின் மேற்கோள் இருக்கும், அதில் தவறேதும் இல்லை. பட்டி கல்வியை பற்றி தானே தவிர வள்ளுவர் பற்றி இல்லையே

நடுவரே, உங்கள் அனுமதியுடன் “படித்தவன் பாட்டை கெடுத்தான், எழுதியவன் ஏட்டை கெடுத்தான்” என்பதற்கு உண்மையான அர்த்தத்தை, வலையில் தேடி எடுத்தேன், இதோ உங்களுக்காக:

”ஏடு என்பது மிகவும் தூய்மையாக இருக்கும். அதில் எழுதியவுடன் எழுத்துகள் பதிந்து ஏடு கெட்டுப் போகும். அதுதான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தது. இது வஞ்சப் புகழ்ச்சி. படித்தவன் பாட்டைக் கெடுத்தான். தமிழிசையில் ஏழு சுரங்கள். குரல், விழி , துத்தம் என்று ஏழுக்கும் ஏழு பெயர்கள். சரிகமபதநி என்று வரிசையாக சுரங்கள் ஏறும். ஆங்கிலத்திலும் do-re-me-fa-so-la-te என்று சுரங்கள்
கீழிருந்து மேலாக ஏறும். ஆனால் பாடற்கலையைப் படித்தவன் சுரங்களை மாற்றிப் போட்டு ஏற்றங்களையும் இறக்கங்களை முன்னுக்குப் பின் மாற்றி புது மெட்டுகளைக் கண்டு பிடிப்பார்கள் அல்லவா. அதுதான் படித்தவன் பாட்டைக் கெடுத்த கதை.” நடுவரே, கிட்டத்தட்ட எல்லா பழமொழிக்குமே இரண்டு அர்த்தம் இருக்கிறது, மேலாக பார்த்தால் அது தவறான அர்த்தத்தையே கொடுக்கும். எதையும் உள் அர்த்தத்தை புரிந்து நடக்க வேண்டும். இது கண்டிப்பாக படித்தவர்களால் தான் முடியும்.

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது’னு எங்களுக்கும் தெரியும் நடுவரே, அதனால் தான் செய்முறை கல்வி பயன்பாட்டில் உள்ளது. முதலில் தியரி, அப்புறம் ப்ராக்டிகல்ஸ், இதுதான் கல்வி முறை.

அன்புடன்
பவித்ரா

கடந்த சில மணி நேரங்களாக நடுவரை காணவில்லை எதிர் அணியினர் திட்டம் போட்டு செய்த சதியா

அன்புடன்
ஸ்ரீ

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
பொருள் : கல்வி ஒன்றே நிலையான அழிவற்ற செல்வமாகும் ,அதற்கு இணையான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை

நடுவர் அவர்களே. கல்விதான் கண். என்று சொல்ல வந்திருக்கிறேன். பெற்றோர் பிள்ளைக ளுக்கு. சரியான கல்வியைகொடுத்தால் தங்களைப்பற்றி தாங்களே சுயபரிசோத்னை செய்து கொள்ளக்கூடிய அறிவு கிடைக்கும். எனவே அதற்க்கப்பால்.. அவர்களுக்குரிய துறையை அவர்களே தேர்ந்த்தெடுத்துக்கொள்ள முடியும். ,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அட பாவமே

ஒரு இரவுக்குள் மூன்று பக்க பதிவா.. இருந்தால் இப்படி இல்லையேல் காற்று வாங்க விட வேண்டியது.. நைசா என்னோட நைட்டுல எல்லாரும் பதிவப் போட்டுட்டு பாவம் நடுவரை காணவில்லை பழிய போட வேண்டியது...ஸ்ரீ 10 மார்க் மைனஸ்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்ரீ

தொடர்ந்து வாதங்களை கொடுத்திட்டு வறீங்க குட்.. ;)

//வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது புத்தி கூர்மையையும் , அறிவையும் மட்டுமே பார்த்து பயப்படுகின்ரனர் நடுவரே//

அப்படியா? கிரிக்கெட்டிலுமா? பார்ப்போம் எதிரணி என்ன சொல்கிறார்கள் என

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தவமணி அவர்களே

தொடரட்டும் உங்கள் வாதம்

//செம்மறி ஆட்டு மந்தை போல ஓரே விதமான படிப்பை படித்து விட்டு தற்போது வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களை கேட்டுப் பாருங்கள். //
சரிதான்.. ;)

//படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்"
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது". புரிஞ்சு நடந்துக்கோங்க//

நெத்தியடி.. என்ன எதிரணியினரே இப்படி சொல்லிட்டாங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

விஜிகுரு

ரொம்ப சிம்பிளா நீங்க சொல்ல வந்ததை சொல்லிட்டிங்க... குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு அவர்கள் வழியில் நல்ல விதமாக செலுத்துவதே சரியான முறை என கூறி முடித்துவிட்டார்..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்