சேமியா அடை

தேதி: February 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

சேமியா - ஒரு கப்
கெட்டியான தயிர் - ஒரு கப்
மைதா/அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

அடை செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
சேமியாவில் தயிரை ஊற்றி கிளறி கால் மணி நேரம் ஊற விடவும்.
பின்பு அதில் மைதா/அரிசி மாவினை தூவி கிளறவும்.
அதில் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
பிறகு தவாவை காய வைத்து சிறிது மாவை உருண்டையாக எடுத்து அடையாக தட்டவும். சுற்றி எண்ணெய் ஊற்றி இரு புறமும் வெந்ததும் எடுக்கவும்.
சட்னி அல்லது சாஸுடன் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சேமியா அடை சூப்பரா இருக்கு நான் வேற மாதிரி செய்வேன் இது ஈசியா இருக்கு மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

கல்பு

நல்ல குறிப்பு.. பார்க்க அழகா இருக்கு. செய்துட்டு செப்பறேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.......

பாத்திமா பின்னூட்டம் தந்ததுக்கு ,உங்க வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி பா!

நன்றி ரம்யா,செஞ்சுட்டு செப்புங்கோ..........

நல்ல குறிப்பு கல்பனா

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப நன்றி பா !

ரொம்ப அருமையான குரிப்பு சூப்பர் பா.

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் கல்பனா, நீங்க தஞ்சை யா? உங்க குறிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்..... அரட்டைக்கு வாங்க ஒரு நாளைக்கு நம்ம பேசலாம்.

இங்க இன்னொரு கல்பனா இருக்காங்க. நீங்க 2 வது கல்பனா;))))

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் கல்பனா,எப்படி இருக்கீங்க? உங்களுடைய முதல் குறிப்பா கல்பனா,வாழ்த்துக்கள்.சேமியா அடை சூப்பராயிருக்கும் போலிருக்கே,செஞ்சு பார்க்கறேன் கல்பனா.தொடர்ந்து பல அசத்தலான குறிப்புகள் கொடுக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

உங்கள் முதல் குறிப்பிர்க்கு என் வாழ்த்துக்கள் ..
சுலபமான குறிப்பு ..நன்றி .மேலும் குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ...

வாழு, வாழவிடு..

ஹாய் கல்பனா நலமா?

சூப்பர் குறிப்பு.....வாழ்த்துக்கள்..

இன்னும் நிறைய இதுபோல் புது புது குறிப்பு கொடுத்து ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்....

ஹசீன்

தேவி ரொம்ப நன்றி உங்க பின்னுடதுக்கு,,,,ஆமா நான் ரெண்டாவது கல்பனா,முதல் கல்பனா கிட்ட பேசணும்னு பார்க்கிறேன்,பிடிக்க முடியல.

ருக்சனா,ஹசீனா ரொம்ப நன்றி உங்கள் வாழ்த்து பலிக்கட்டும் .

நித்தி(சொல்லலாமா?/) ரொம்ப நன்றி,, அடை செஞ்சு பாருங்க நல்லாருக்கும்

கல்பனா... சூப்பர்'ங்க. பார்த்ததுமே சாப்பிட தோணுது. நாளை இது தான் எங்க வீட்டு டிபன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா