கஸ்டர்ட் குக்கீஸ்

தேதி: February 15, 2011

பரிமாறும் அளவு: 1/4 கிலோ குக்கீஸ்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

கஸ்டர்ட் பவுடர் - 50 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
பொடித்த சர்க்கரை - 50 கிராம்
மைதா - 100 கிராம்
பால் - 3 மேஜைக் கரண்டி


 

பாலைத் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக கலக்குங்கள்.
பிறகு பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையுங்கள்.
அதனை குக்கீ கட்டர் மூல கட் செய்து, 160' வெப்பத்தில் 10 நிமிடம் பேக்
செய்யுங்கள்.

இனிப்பும் அழகும் சேர்ந்த குக்கீ தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டிஃபரண்டான குக்கீஸ் சூப்பர் வாழ்த்துக்கள்....

வாழு, வாழவிடு..