க்ளாஸ் பெயிண்டிங் - 3

தேதி: February 16, 2011

4
Average: 3.8 (12 votes)

 

ப்ளெயின் கண்ணாடி - ஒன்று
க்ளாஸ் பெயிண்ட்ஸ் - பச்சை, சிவப்பு, மஞ்சள்
அவுட் லைனர் - ஒன்று
பஞ்சு மற்றும் தின்னர்
பெயிண்ட் ப்ரஷ்
படம் - ஒன்று
டேப்

 

வரைய விரும்பும் படத்தை கண்ணாடியின் பின் பக்கம் வைத்து, டேப் கொண்டு ஒட்டி விடவும். வரைந்து முடிக்கும் வரை அசையாமல் இருக்கும்.
இப்போது படத்தில் எந்த எந்த டிசைனுக்கு என்ன நிறம் என்பதை முடிவு செய்து மார்க் செய்து கொள்ளவும். முதலிலேயே மார்க் செய்து கொண்டால் கண்ணாடியில் இடும் போது தவறு வராமல் இருக்க உதவும்.
முதலில் நடுப்பகுதியில் ஆரம்பித்து அவுட் லைனர் கொண்டு வரையவும்.
முழு படமும் வரைந்து முடித்து, தேவையில்லாத கோடுகள் அல்லது தவறாக வரைந்திருந்தால் தின்னர் கொண்டு சரி செய்யவும். இது 2 மணி நேரம் காய வேண்டும்.
முதலில் படத்தின் நடுவே வர வேண்டிய சிவப்பு நிறத்தை தீட்டவும். ப்ரஷ் கொண்டு எல்லா இடமும் பரவ செய்யவும். ஏர் பபுல் வந்தால் ப்ரஷ் அல்லது ஊசி கொண்டு தட்டி உடைத்து விடவும்.
ஒரு நிறம் கொடுத்து 2 மணி நேரம் காய்ந்த பின் அடுத்த பச்சை நிறத்தை தீட்டவும்.
மீண்டும் 2 மணி நேரம் கழித்து மஞ்சள் நிறம் தீட்ட வேண்டிய இடங்களில் தீட்டவும். இப்படி காய விட்டு செய்வதால் ஒன்றோடு ஒன்று கலந்து விடாமல் இருக்க உதவும்.
கடைசியாக நடுவே இருக்கும் டிசைனில் இரண்டு நிறங்கள் ஷேட் கொடுக்க 2 துளி சிவப்பு நிறம் விட்டு, பின் அதன் மேலே மஞ்சள் நிறம் கொண்டு தீட்டவும். மஞ்சளும், சிவப்பும் கலந்து பரவி ஷேட் கிடைக்கும்.
எல்லாம் முடித்த பின் ஒரு முறை அவுட்லைனர் கொண்டு மீண்டும் அவுட் லைன் வரைந்து முடிக்கவும். இப்படி கொடுப்பதால் மற்ற நிறங்கள் பட்டு டல்லாக இருக்கும் அவுட்லைன் பளிச்சென்று தெரியும். இவை அனைத்தும் 24 மணி நேரத்துக்கு மேல் காய வேண்டும். பின் கடையில் கொடுத்து ப்ரேம் செய்யவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப தெளிவான படங்கள் மற்றும் விளக்கங்கள்...
வித்தியாசமான டிசைன் போட்டு காட்டி இருக்கீங்க.
வாழ்த்துக்கள். மேலும் மேலும் அசத்துங்க....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப அழகா இருக்கு வனிதக்கா. எனக்கு உள்ளே உள்ள கலர்ஸ்கும் வெளியில் இருக்கற ப்ரேமும் ரொம்ப நல்ல காம்பினேஷன் அக்கா. சூப்பர்ப் வேலைபாடுகா.

வனி க்ளாஸ் பெயிண்டிங் டிசைன் சூப்பரா இருக்கு. உங்க தெளிவான விளக்கத்துலா க்ளாஸ் பெயிண்டிங்க்கும், ரிவர்ஸ் க்ளாஸ் பெயிண்டிங்க்கும் உள்ள வித்தியாசம் தெரிஞ்சுக்கிட்டேன். கூடிய சீக்கிரத்துல இரண்டு பெயிண்டிங்கும் செய்து வீட்டுல மாட்டி வைக்கனும்.

கைவசம் நிறைய கலைகள் வைத்து இருக்கிங்க ...எனக்கும் ஆசைதான்
இந்த மண்டைக்குள் இதெல்லாம் ஏறுவது கொஞ்சம் சிரமம்
சூப்பர் வனிக்கா வாழ்த்துக்கள் ...

வாழு, வாழவிடு..

your glass painting is very nice. keep it up. with regards.g.gomathi.

soopper vani

வனிதா கிளாஸ் பெயிண்டிங் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு. நான் கண்டிப்பா செய்து பார்கிறேன். டைல்ஸ்ல இதே மாதிரி செய்யலாமா? ஏனா டைல்ஸ் இருக்கு அதுல ஏதாவது கிராஃப்ட் செய்யலாம் என்று நினைத்திருந்தேன் அதான் கேக்குறேன்.

senbagababu

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

சுகந்தி... மிக்க நன்றி.

யாழினி... மிக்க நன்றி. இது நான் மாலே வீட்டுக்கு செய்தது, அதான் ஒரே விதமான ஃப்ரேம்ஸ் போட்டிருக்கேன்.

வினோஜா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. நீங்க கேட்ட காபி பெயிண்டிங்கும் அனுப்பிருக்கேன்.

ருக்சனா... நானும் இப்ப தான் முதல் முறையா செய்யறேன். நீங்களும் செய்தா சுலபமா வரும். மிக்க நன்றி.

கோமதி... மிக்க நன்றி.

தளிகா... மிக்க நன்றி.

செண்பகா... மிக்க நன்றி. அவசியம் செய்து மாட்டுங்க. டைல்ஸ்'ல அக்ரிலிக் கலர்ஸ் வைத்து செய்யலாம். செய்து பாருங்க. இமா'வை கேட்டிருந்தா இன்னும் விளக்கமா சொல்லிருப்பாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு வனி. ;)

‍- இமா க்றிஸ்

வனிக்கா சூசூசூசூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அசத்துரீங்க....

வனி

வாவ்.. ரொம்ப நேர்த்தியா அழகா இருக்கு ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

// இமா'வை கேட்டிருந்தா இன்னும் விளக்கமா சொல்லிருப்பாங்க. :) // ;)
இங்க என் வீட்டு நம்பர் ப்ளேட் குறிப்பு இருக்கு. பெய்ன்ட் கிடைச்சா செண்பகா நான் பண்ணினதை விட சூப்பரா பண்ணுவாங்க வனி.

'செராமிக் பெய்ன்ட்' அல்லது 'கிளாஸ் அன்ட் டைல் பெய்ன்ட்' வாங்கினால் போதும். பேக் பண்ணிட்டா உரியாது.

சாதாரண ஆயில் பெய்ன்ட்ல பண்ணலாம். க்லேஸ்ட் டைல்ல சில பெய்ன்ட் வழுக்கி ஓடும். பெய்ன்ட் தன்மையைப் பொறுத்துத் தான் பிடிக்கும். பிடிச்சாலும் நாளாக உரிஞ்சு போக சான்ஸ் இருக்கு. இது பிரேம் பண்ணுறதுக்கு ஓகே.

‍- இமா க்றிஸ்

இமா... மிக்க நன்றி. நீங்க கொடுத்த விளக்கம் செண்பகா கண்டிப்பா பார்த்திருப்பாங்க, விரைவில் அருமையான குறிப்பை எதிர் பார்க்கலாம் :)

சுமதி... மிக்க நன்றி.

ரம்யா... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta