பிரண்டை துவையல்

தேதி: February 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சுத்தம் செய்த பிரண்டை - 1 கப்
வரமிளகாய் - 4
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறு துண்டு
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு
நல்லெண்ணை - 2 ஸ்பூன்


 

வானலியில் எண்ணை விட்டு வரமிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும்
பின் சுத்தம் செய்த பிரண்டையை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்
ஆறியதும் வறுத்த பொருட்கள், வதக்கிய பிரண்டை, உப்பு, புளி சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்
சுடு சாததில் போட்டு நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல ஆரோக்யமான குறிப்பு பிரண்டை நல்லதுன்னு
சொல்லுவார்கள ஆனால் சாப்பிட்டதில்லை ..வாழ்த்துக்கள் ..

வாழு, வாழவிடு..