மல்லி சட்னி

தேதி: February 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (6 votes)

 

கொத்தமல்லி இழைகள் - 1 கட்டு
துருவிய தேங்காய் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 8
ப.மிளகாய் - 2 சின்னது
புளி - மிகவும் சிறிய உருண்டை
உப்பு - தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உ.பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 பின்சு
கறிவேப்பிலை - 4 இலை


 

கொத்தமல்லி இழை,துருவிய தேங்காய்,ப.மிளகாய்,புளி,உப்பு,சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்ததை சட்னியில் ஊற்றி நன்கு கிளறி பரிமாறவும்.
சுவையான மல்லி சட்னி தயார்.


பார்க்கவே நல்லா கலர்புல்லா இருக்கும்.இட்லி,தோசைக்கு நல்ல காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நானும் இப்படித்தான் செய்வேன் மீனாள் வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

இந்த சட்னி சிறிது வித்யாசமா இருக்கு. செய்துட்டு சொல்ரேன்.